கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவரும் ஒரு புதிய இணைய இதழ்.
கிழக்கு பதிப்பகம் 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் பல துறைகள் சார்ந்து நூல்கள் வெளிவந்திருக்கின்றன. புனைவு, அபுனைவு போக, கணிசமான அளவில் முக்கியமான மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டிருக்கிறோம்.
இன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு, புதிய வடிவமைப்பில், பல புதிய பகுதிகளோடு மலர்ந்திருக்கிறது ‘கிழக்கு டுடே’. இது செய்தித்தளமல்ல. நொடிக்கு நொடி உங்கள் கவனத்தைக் கோரியபடியே இருக்கப்போகும் பரபரப்பு இதழும் அல்ல. பொறுமையான, விரிவான, ஆழமான வாசிப்பைக் கோரி நிற்கும் எழுத்துகளைத் தொடர்ந்து வெளிக்கொணர்வதே இத்தளத்தின் குறிக்கோள்.
அரசியல், வாழ்க்கை, வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் என்று பல துறைகள் சார்ந்து படைப்புகள் இங்கே வெளிவரும். இளம் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், மூத்த படைப்பாளர்கள் அனைவருக்கும் இங்கே இடமுண்டு.
பதிப்பாளர் : பத்ரி சேஷாத்ரி
ஆசிரியர் : மருதன்
தொடர்புக்கு : kizhakku.today@gmail.com