பருத்தி விவசாயம் – கணக்கு வழக்குகள்
(உள்ளூர் சூழலுக்கு ஏற்ற, இறவைப் பாசன வசதி கொண்ட வேறு பயிர்களின் விவசாயத்தை வருமானத்தைப் பாதிக்காத வகையில் மேற்கொள்ளலாம்)
1. | நிலப்பரப்பளவு | 20 ஏக்கர் |
2. | பயிர்கள் | |
கரும்பு | 2 ஏக்கர் | |
பழங்கள் | 4 ஏக்கர் | |
தோட்டப் பயிர்கள் | 6 ஏக்கர் | |
பருத்தி, சணல், நிலக்கடலை | 8 ஏக்கர் | |
மொத்தம் | 20 ஏக்கர் | |
3. | மொத்த வருமானம் | 1910.00 |
4. | செலவுகள், தேய்மானம் உட்பட | 910.00 |
5. | நிகர லாபம் | 1000.00 |
6. | ஆரம்ப கட்ட, ஒரு முறை செலவினம் | 6.000.00 |
7. | அடிக்கடியான செலவுகள் (வருடத்துக்கு) | 900.00 |
8. | மொத்த ஆரம்ப கட்ட முதலீடு | 6900.00 |
எதிர்பாராத நெருக்கடிகளினால் பயிர், விளைச்சல் இழப்பு ஏற்படாதவரையில் இந்த தொகையே ஒரு ஆண்டு பராமரிப்புக்குப் போதுமானது.
கால்வாய்ப் பாசனத்துக்கான வசதி வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில் அடிக்கடித் தேவைப்படாத செலவுகளை ரூ 1450 குறைக்கமுடியும். மாணவர்கள் மூலமான உடல் உழைப்புக் கூலி தொடர்பான சேமிப்பானது நீர்ப்பாசனச் செலவுகளை ஈடுகட்டிவிடும். மத்திய பிராந்தியங்களில் கரும்புக்கு ரூ 15-ம் தோட்டப் பயிர்களுக்கு ரூ 10ம் செலவாகும்.
பருத்தி விவசாயம் இறவை நீர்ப்பாசன வசதிகளுடன்
விரிவான செலவினங்கள்
பயிர் | ஏக்கர் | கூலி | பிற செலவு | நில மதிப்பு தொகை | மொத்த செலவு | சரசரி வருவாய் | மொத்த வருவாய் | நிகர லாபம் |
கரும்பு | 2 | 164 | 130 | 6 | 300 | 200 | 400 | 100 |
கனிவகை | 4 | 210 | 190 | 12 | 412 | 150 | 600 | 188 |
தோட்டப் பயிர் | 6 | 210 | 250 | 18 | 478 | 125 | 750 | 272 |
பருத்தி, சணல், நிலக்கடலை | 8 | 52/6/8 | 45/9/4 | 22 | 120 | 20 | 160 | 40 |
மொத்தம் | 20 | 636/6/8 | 615/9/4 | 58 | 1310 | 1910 | 600 | |
மாணவர்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சேமிப்பு | 20 | 400 | 400 | 400 | ||||
20 | 236/6/8 | 615/9/4 | 58 | 910 | 1910 | 1000 |
நில வருவாய் மதிப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் எதிர்பாரத செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் போய்விடும். பழத்தோட்டங்கள் விளைச்சல் கொடுக்க சில வருடங்கள் எடுக்கும். அதனால் அந்தக் காலகட்டத்தில் ஊடு பயிராக தோட்டப் பயிர்களை நட்டு வருவாயை ஈடுகட்டிக்கொள்ளலாம்.
அடிக்கடித் தேவைப்படாத மொத்த செலவினங்கள்
வரிசை எண் | தேவைப்படும் அளவு | பொருட்கள் | செலவு/ விலை |
1 | 20 | நிலம் | 2000 |
2 | கிணறு | 750 | |
3 | வேலி | 500 | |
4 | 2 | ரஹத் | 700 |
5 | 3 | எருதுகள் ஜோடி | 350 |
6 | 1 | மேலடுக்குக் கலப்பை | 35 |
7 | 2 | ஆழ உழும் கலப்பை | 24 |
8 | 2 | வட்ட கலப்பை | 10 |
9 | 1 | குழாய் | 40 |
10 | 4 | சாதா குழாய் | 10 |
11 | 1 | ரிட்ஜ் கலப்பை | 45 |
12 | 1 | பல்கைகள் | 5 |
13 | 2 | நாட்டு கலப்பை | 4 |
14 | 1 | அர்கரா | 4 |
15 | 1 | நாரி | 3 |
16 | 3 | நுகத்தடி | 4 |
17 | 4 | ஷிவ்லாஸ் | 2 |
18 | 2 | வண்டிகள் | 80 |
19 | 4 | சங்கிலிகள் | 8 |
20 | கயிறுகள் | 10 | |
21 | 1 | காளைகளுக்குத் தொழுவம், கருவிகள் வைக்க இடம், தீவனம் வைக்க இடம் | 300 |
22 | 1 | தெளிப்பான் | 50 |
23 | 12 | மண்வெட்டிகள் | 12 |
24 | 6 | கோடரி | 9 |
25 | 12 | கதிர் அறுவாள் | 6 |
26 | 12 | சட்டிகள் | 6 |
27 | 12 | அருவாள் | 6 |
28 | 12 | களைக் கொத்தி | 18 |
29 | 2 | எடை கருவி, எடைக் கற்கள் | 10 |
30 | 1 | தானிய எடை | 4 |
31 | ஈட்டி | 2 | |
32 | 1 | மர வெட்டி | 2 |
33 | 1 | குத்தூசி | 1 |
34 | 1 | கோடாரி | 1 |
35 | 2 | கடப்பாறை | 5 |
36 | 6 | தோண்டும் கருவி | 30 |
37 | 2 | கத்தரிகோல் | 10 |
38 | 6 | சிறிய கத்தி | 18 |
39 | 6 | செடி, மரங்களில் தேவையற்ற பாகங்களை வெட்டும் கத்தி | 12 |
40 | 6 | சட்டி | 6 |
41 | 1 | முறம் | 160 |
42 | 1 | கரும்பு பிழியும் எந்திரம் | 150 |
43 | 1 | இரும்புச் சட்டி | 30 |
44 | 1 | கோதுமை பிரிக்கும் கருவி | 45 |
45 | 2 | பசுக்கள் | 80 |
46 | கால்நடை தீவனம், பயிர்களுக்கான செலவு (முதல் வருடம்) | 300 | |
47 | பிற செலவினங்கள் | 50 | |
மொத்தம் | 5910 |
ஒரே முறை செய்யப்படும் செலவுகள் ரூ 5910 அல்லது ரூ 6000 என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். ஏக்கருக்கு ரூ 100 என்று நில மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. சற்று மலிவு விலையிலும் நிலம் கிடைக்கக்கூடும்.
ஆண்டுதோறும் அடிக்கடித் தேவைப்படும் விஷயங்களுக்கான செலவு ஆண்டுக்கு ரூ900 ஆகலாம்.
0
நெசவு மற்றும் நூற்பு ஆகியவற்றை அடிப்படைத் தொழில்கல்வியாகக்கொள்ளும் ஏழாண்டு கல்வித்திட்டம்.
1. இந்த பாடத்திட்டத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
(அ) நூற்புக் கல்வி
(ஆ) நெசவுக் கல்வி
2. முதல் ஐந்து ஆண்டுகள் நூற்புக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும். கடைசி இரண்டு ஆண்டுகளில் நெசவுத்தொழில் வழியில் கற்றுத் தரவேண்டும். கூடவே இதற்குத் தேவையான தச்சு வேலை, இரும்பு பட்டறைப் பணி ஆகியவற்றின் ஆரம்ப நிலை விஷயங்களையும் இணைத்துக் கற்றுத்தரவேண்டும்.
3. ஒவ்வொரு வருடமும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைக் கணிக்கவும் வளர்க்கவும் இது உதவிகரமாக இருக்கும்.
4. பருத்தியைப் பறித்து, பஞ்சு சுத்தப்படுத்தும் பணி பள்ளியில் செய்முறைப் பயிற்சியாகக் கற்றுத் தரப்படவேண்டும். பள்ளியில் பயன்படுத்தும் துணிப் பொருட்கள் முழுவதும் மாணவர்கள் தம் கைகளால் ராட்டையில் நூற்று உற்பத்தி செய்ததாக இருக்கவேண்டும். விளை நிலங்களில் இருந்து பறிக்கும் பருத்தி, பஞ்சு, இலைகள், பூச்சிகள் இல்லாதவாறு நன்கு தூய்மைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.
5. பஞ்சிலிருந்து உற்பத்தி செய்யும் நூலை நூல் கண்டில் அறுபடாமல் சுற்ற மூத்த மாணவர்கள் இளைய மாணவர்களுக்கு உதவவேண்டும்.
6. நூல் அறுந்து வீணாகாமல் இருக்க ஆரம்ப நிலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அருகில் இருந்து மிகுந்த கவனத்துடன் கற்றுக் கொடுக்கவேண்டும். 10% இழப்பு அனுமதிக்கப்படலாம். நூலின் விலையை இந்த இழப்பையும் கணக்கில் கொண்டு நிர்ணயிக்கவேண்டும். எப்படியும் இதற்கு அதிகமாக வீணாகக்கூடாது.
7. உற்பத்தி செய்யப்படும் நூல் 8 கவுண்டிலிருந்து 12 கவுண்ட் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும்போது, அந்த பருத்தி ரோஸியம் தரத்துக்குக் குறைவாக இருக்கக்கூடாது. 13 கவுண்ட் அல்லது அதற்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டால், வேரம், சுராதி, கம்போடியா, ஜெயவந்த் அல்லது பஞ்சாப்-அமெரிக்க பருத்தி பயன்படுத்தப்படவேண்டும்.
8. நாளொன்றுக்கு மூன்று மணி நேரம், 20 நிமிடங்கள் இந்த கைவினைக் கலை மற்றும் அதன் வழியிலான கல்வி கற்றுத்தரப்படவேண்டும். ஆண்டுக்கு பள்ளி நாட்கள் 288 ஆக இருக்கவேண்டும். மாதத்துக்கு 24 நாட்கள் பள்ளி நடக்கவேண்டும்.
9. அரையாண்டு முடிவில் நூல் நூற்கும் வேகம் எவ்வளவாக இருக்கவேண்டும் என்பதை தேர்வுக்கான குறிப்பிட்ட நேரத்துக்கான வேகமாக மட்டுமே கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். தினமும் மூன்று மணி நேரம், 20 நிமிட நூற்பு நடக்கும் நிலையில் அதற்கான சராசரி வேகமாகவே ஆசிரியர் தீர்மானிக்கும் நேரம் இருக்கவேண்டும்.
10. மாணவர்களின் உடல் நலக் குறைபாடு மற்றும் பிற காரணங்களினால் எடுத்துக்கொள்ளும் விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு 25% தள்ளுபடி கொடுத்து உற்பத்தியை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும்.
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.