Skip to content
Home » காந்தியக் கல்வி #13 – விரிவான பாடத்திட்டம் – 4

காந்தியக் கல்வி #13 – விரிவான பாடத்திட்டம் – 4

காந்தியக் கல்வி

முதல் வகுப்பு – முதல் பருவம்

1. இந்தப் பருவத்தில் கீழ்க்காணும் செயல்முறைகள் கற்றுத் தரப்படவேண்டும்.
அ) பருத்தியைத் தூய்மைப்படுத்துதல்
ஆ) பஞ்சைத் தூய்மைப்படுத்துதல்
இ) பஞ்சுகளைப் பிரித்தல்
ஈ) தக்ளி கொண்டு வலது கையால் நூல் நூற்றல்; விரல்களால் நூல் நூற்றல்
உ) தக்ளி மூலம் இடது கையால் நூற்றல். ஆனால் வலது கையால் முறுக்கிச் சுற்றுவதுபோலவே சுற்றவேண்டும். மேலே சொல்லப்பட்டிருக்கும் மூன்று வழிகளும் தெரிந்திருக்கவேண்டும்.
ஊ) நூலை கண்டில் சுற்றுதல்

2. வலது, இடது கை என இரண்டு வழிகளிலும் தக்ளி நூற்கக் கற்றுத் தரவேண்டும்.

3. கண்டில் சுற்றுவது உட்பட நூற்பு வேகமானது ஆறு மாதங்களில் மூன்று மணி நேரத்தில், பத்து கவுண்ட் அளவில் ஒன்றரை லாட்கள் (160 சுற்றுகள்) நூற்று முடிக்க முடியவேண்டும்.

4. ஆறு மாத காலப்பயிற்சியின்போது வேகம் சாராசரியாக மூன்று மணிநேரத்துக்கு 10 கவுண்ட்கள் கொண்ட முக்கால் லாட்டாக இருக்கவேண்டும். அதாவது 144 நட்களில் 27 கண்டுகள் (640 சுற்றுகள் கொண்டது). எடையளவில் ஒரு சேர் (ஒன்றே கால் கிலோ) ஆறு சட்காகள் (300 கிராம்). ஒரு சேருக்கு 12 ரூபாய் கூலி. பஞ்சு தூய்மைப்படுத்துதலுக்கான தொகை 1.60 நீங்கலாக.

முதல் வகுப்பு – இரண்டாம் பருவம்

1. இந்தப் பருவத்தில் பஞ்சைச் சுத்தம் செய்வது கற்றுத் தரப்படவேண்டும்.

2. ஆறுமாதங்கள் முடிவில் பஞ்சு சுத்தம் செய்தல் (நூல் இழையாக சுற்றிவைத்தல் உட்பட) ஒருமணி நேரத்துக்கு இரண்டரை தோலா இருக்கவேண்டும்.

3. ஆறு மாத முடிவில் தக்ளியால் நூற்கும் வேகம் கண்டில் சுற்றுவது உட்பட மூன்று மணி நேரத்தில் 10 கவுண்ட்கள் கொண்ட இரண்டு லாட்கள் இருக்கவேண்டும்.

4. தக்ளியால் நூற்கும் வேகம் சராசரியாக மூன்று மணி நேரத்துக்கு 10 கவுண்ட் கொண்ட ஒன்றே கால் லாட் ஆக இருக்கவேண்டும். மொத்த உற்பத்தி இரண்டேகால் சேர் எடை அளவுகொண்ட 45 கண்டுகள். கூலி சேருக்கு ரூ 1-6-0 என்பது ரூ 2-8-6 ஆகும்.

தக்ளியில் நூற்பது தொடர்பான ஆய்வுகள், கேள்விகள்

1. தக்ளியில் மிக அதிக பஞ்சு சுற்றிக்கொண்டால், தக்ளி சுற்றும் வேகம் குறைவது ஏன்?
2. தக்ளியில் பஞ்சு தளர்வாகச் சுற்றப்பட்டிருந்தால் தக்ளியின் வேகம் அதிகரிப்பது ஏன்?
3. தக்ளியைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் முன் சாம்பல் தடவிக் கொள்வது ஏன்?

இரண்டாம் வகுப்பு : முதல் பருவம்

1. இந்தப் பருவத்தில் பருத்தியிலிருந்து பஞ்சு தனியாகவும் விதை தனியாகவும் பிரிக்கக் கற்றுத்தரவேண்டும்.

2. முதலில் இரும்புக் கழி, மரச் சட்டகம் கொண்டு பிரிக்கவேண்டும். அரை மணி நேரத்துக்கு ஒரு சடக் அளவுக்கு நல்ல வேகம் வந்ததும் கையால் இயக்கும் ஜின் கருவியைப் பயன்படுத்தவேண்டும்.

3. ஆறுமாத முடிவில் பஞ்சைத் தூய்மை செய்யும் பணியில் அரை மணி நேரத்தில் 20 தோலா அளவு சுத்தம் செய்தாகவேண்டும்.

4. ஆறு மாத முடிவில் பஞ்சுப் பொதியில் சிக்கெடுத்தல், (நூலாக தயாரித்தல்) மணிக்கு மூன்று தோலா என்ற அளவுக்கு இருந்தாகவேண்டும்.

5. தக்ளி நூற்பானது இந்த பருவத்தின் முடிவில் மூன்று மணி நேரத்துக்கு பத்து கவுண்ட்கள் கொண்ட இரண்டே கால் லாட்கள் உற்பத்தி செய்துமுடித்தாகவேண்டும்.

6. தக்ளியில் நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று மணி நேரத்தில் 12 கவுண்ட்கள் கொண்ட ஒன்றே முக்கால் லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். மொத்த உற்பத்தி என்பது, இரண்டு சேர்கள், பத்து சடக் என்ற அளவில் 63 கண்டுகள் உற்பத்தி செய்தாகவேண்டும். கூலி சேருக்கு 1-6 (பஞ்சை சுத்தம் செய்வதையும் சேர்த்து) வகையில் ரூ 3-9-9 ஆக இருக்கும். இதனுடன் -4- பஞ்சில் சிக்கெடுப்பதையும் சேர்த்தால் மொத்த செலவு 3-13-9 ஆகும்.

இரண்டாம் வகுப்பு : இரண்டாம் பருவம்

1. இந்தப் பருவத்தில் இரண்டு நூல் சக்கரங்கள் கொண்ட ஏர்வடா ராட்டை மூலம் நூற்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.

2. இந்த ராட்டையில் இரண்டு கைகளாலும் நூற்கக் கற்றுத் தரவேண்டும்.

3. பஞ்சு பொதியை சுத்தம் செய்தல் (நூல் சுருளாக ஆக்குவதையும் சேர்த்து) மணிக்கு மூன்றரை தோலா என்ற அளவை இந்தப் பருவத்தின் முடிவில் எட்டியிருக்கவேண்டும்.

4. தக்ளி நூற்பில் இந்த பருவத்தின் முடிவில் மூன்று மணி நேரத்துக்கு 12 கவுண்ட்கள் கொண்ட இரண்டே கால் லாட்கள் உற்பத்தி செய்துமுடித்தாகவேண்டும்.

5. ராட்டை நூற்பில் இந்த பருவத்தின் முடிவில் மூன்று மணி நேரத்துக்கு 16 கவுண்ட்கள் கொண்ட மூன்றே முக்கால் லாட்கள் உற்பத்தி செய்துமுடித்தாகவேண்டும்.

6. இந்தக் காலகட்டத்தில் நூல் உற்பத்தியை அளக்கும் வழிமுறையைக் கற்றுத் தரவேண்டும். செய்முறையாகவும் கோட்பாட்டு அளவிலும் இந்த அளவீடைச் செய்ய மாணவர்கள் பயிற்சி பெறவேண்டும்.

7. ராட்டையில் நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று மணி நேரத்தில் 14 கவுண்ட்கள் கொண்ட இரண்டரை லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். மொத்த உற்பத்தி என்பது, மூன்று சேர்கள், பத்து சடக் என்ற அளவில் 90 கண்டுகள் உற்பத்தி செய்தாகவேண்டும். கூலி சேருக்கு 1-10 (பஞ்சை சுத்தம் செய்வதையும் சேர்த்து) வகையில் ரூ 5-3-6 ஆக இருக்கும். இதனுடன் -4- பஞ்சில் சிக்கெடுப்பதையும் சேர்த்தால் மொத்த செலவு ரூ 5-7-6 ஆகும்.

ராட்டையில் நூற்பது தொடர்பான ஆய்வுகள், கேள்விகள்

1. ராட்டையின் சுழல் கருவியை தரைக்கு இணையாக அல்லது குறிப்பிட்ட கோணத்தில் வைத்திருப்பதால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்னென்ன?
2. ராட்டையின் கப்பி எப்போதும் நடுவில் சுழல என்ன செய்யவேண்டும்?
3. ராட்டையின் எந்தப் பாகத்துக்கு உயவு எண்ணெய் விடவேண்டும்?
4. ஏன் எண்ணெய் விடவேண்டும்?
5. எண்ணெய்விட்ட பின்னர் ராட்டை மிகவும் நன்றாக, இலகுவாகச் சுழல ஆரம்பிப்பது ஏன்?

இந்த இடத்தில் உராய்வு விசை பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுத் தரவேண்டும். கதவு கீல் இடைவெளிகள், ஊஞ்சல், கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படும் கப்பி ஆகியவற்றில் எண்ணெய் விடுவதனால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதையும் விளக்கிச் சொல்லித்தரவேண்டும்.

மூன்றாம் வகுப்பு : முதல் பருவம்

1. இந்தப் பருவத்தில் மாணவர்களுக்குப் பல்வேறு வகையான பருத்தியை இனம் காணக் கற்றுத் தரவேண்டும். பல்வேறு வகை பருத்திகளில் இருந்து உருவாக்க முடிந்த நூலின் நீளம், நூல் அளவீடுகள் எல்லாம் கற்றுக் கொடுக்கப்படவேண்டும்.

2. இந்தப் பருவத்தின் முடிவுக்குள் பஞ்சைச் சுத்தம் செய்யும் பணியில் மணிக்கு நான்கு தோலா என்ற அளவை எட்டியாகவேண்டும்.

3. தக்ளி நூற்பில் இந்த பருவத்தின் முடிவில் மூன்று மணி நேரத்துக்கு 12 கவுண்ட்கள் கொண்ட இரண்டரை லாட்கள் உற்பத்தி செய்துமுடித்தாகவேண்டும்.

4. ராட்டை நூற்பில் இந்த பருவத்தின் முடிவில் மூன்று மணி நேரத்துக்கு 20 கவுண்ட்கள் கொண்ட மூன்றே முக்கால் லாட்கள் உற்பத்தி செய்துமுடித்தாகவேண்டும்.

5. ராட்டையில் நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று மணி நேரத்தில் 20 கவுண்ட்கள் கொண்ட இரண்டரை லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். மொத்த உற்பத்தி என்பது, இரண்டே கால் சேர்கள் என்ற அளவில் 90 கண்டுகள் உற்பத்தி செய்தாகவேண்டும். கூலி சேருக்கு 2-4-0 (பஞ்சை சுத்தம் செய்வதையும் சேர்த்து) வகையில் ரூ 5-1-0 ஆக இருக்கும்.

மூன்றாம் வகுப்பு : இரண்டாம் பருவம்

1. தக்ளி நூற்பில் இந்த பருவத்தின் முடிவில் மூன்று மணி நேரத்துக்கு 12 கவுண்ட்கள் கொண்ட இரண்டே முக்கால் லாட்கள் உற்பத்தி செய்துமுடித்தாகவேண்டும்.

2. ராட்டை நூற்பில் இந்த பருவத்தின் முடிவில் மூன்று மணி நேரத்துக்கு 20 கவுண்ட்கள் கொண்ட நான்கரை லாட்கள் உற்பத்தி செய்துமுடித்தாகவேண்டும்.

3. ராட்டையில் நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று மணி நேரத்தில் 20 கவுண்ட்கள் கொண்ட மூன்றே கால் லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். மொத்த உற்பத்தி என்பது, இரண்டு சேர்கள் பதினான்கு அரை சடகா என்ற அளவில் 117 கண்டுகள் உற்பத்தி செய்தாகவேண்டும். கூலி சேருக்கு 2-4-0 (பஞ்சை சுத்தம் செய்வதையும் சேர்த்து) வகையில் ரூ 6-8-9 ஆக இருக்கும்.

பஞ்சை சுத்தம் செய்தல் நூற்பு தொடர்பான கேள்விகள்

1. நகரும் தக்கை இருப்பதால் என்ன நன்மை?
2. பஞ்சு நூல் வீணாவதன் காரணம் என்ன? அதை எப்படித் தடுக்கலாம்.
3. பஞ்சைச் சுத்தமாக்கும் கருவியில் பஞ்சை இறுக்கமாக அல்லது தளர்வாகத் திணிப்பதால் என்ன நன்மை, தீமைகள் நடக்கும்?
4. ஏர்வடா ராட்டையில் இருக்கும் சுருள்வில்களின் பயன் என்ன?

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *