நான்காம் வகுப்பு – முதல் பருவம்
நூற்பு
1. இந்தப் பருவத்தில் மாணவர்களுக்கு நூற்பு தொடர்பான கோட்பாட்டு விஷயங்கள் கற்றுத் தரப்படவேண்டும்.
அ) நூலின் வலிமை, சிக்கலற்ற தன்மையை அளவிடுவது எப்படி?
ஆ) தக்ளியின் வேகத்தை, சுழற்சி சுற்றுகளைக் கொண்டு வகுத்து ராட்டை நூற்கும் வேகத்தைக் கணக்கிடுவது எப்படி?
2) ராட்டை நூற்பில் இந்தப் பருவத்தின் முடிவில் மூன்று மணி நேரத்துக்கு 24 கவுண்ட்கள் கொண்ட நான்கரை லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும்.
3) ராட்டையில் நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று மணி நேரத்தில் 24 கவுண்ட்கள் கொண்ட மூன்றரை லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். மொத்த உற்பத்தி என்பது, இரண்டு சேர்கள் பத்து சடகா என்ற அளவில் 126 கண்டுகள் உற்பத்தி செய்தாகவேண்டும். கூலி சேருக்கு 2-14-0 (பஞ்சைச் சுத்தம் செய்வதையும் சேர்த்து) வகையில் ரூ 7-8-9 ஆக இருக்கும்.
நான்காம் வகுப்பு – இரண்டாம் பருவம்
1. இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட விஷயங்கள் கற்றுத் தரவேண்டும்.
அ) ஏர்வாடா ராட்டையின் பல்வேறு பாகங்கள் பற்றியும் அவற்றைப் பழுது நீக்குவது எப்படி என்பது பற்றியும் கற்றுத்தரவேண்டும்.
ஆ) மூக்கில் தக்ளிகள் செய்தல்
2) ராட்டை நூற்பில் இந்த பருவத்தின் முடிவில் மூன்று மணி நேரத்துக்கு 28 கவுண்ட்கள் கொண்ட ஐந்து லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும்.
3. ராட்டையில் நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று மணி நேரத்தில் 28 கவுண்ட்கள் கொண்ட மூன்றரை லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். மொத்த உற்பத்தி என்பது, இரண்டே கால் சேர்கள் பதினான்கு அரை சடகா என்ற அளவில் 126 கண்டுகள் உற்பத்தி செய்தாகவேண்டும். கூலி சேருக்கு 3-10-0 (பஞ்சைச் சுத்தம் செய்வதையும் சேர்த்து) வகையில் ரூ 8-2-6 ஆக இருக்கும்.
நூற்பு தொடர்பான கேள்விகள்
1. சிறிய அளவு விட்டம் கொண்ட கப்பியைப் பயன்படுத்துவதன் மூலம் நூற்பின் வேகம் அதிகரிக்கும். ஆனால் நூலை கண்டில் சுற்றுவது ஏன் மிகவும் சிரமமாகிறது?
2. ஏர்வாடா ராட்டையின் இரண்டு சக்கரங்களின் மைய அச்சுகளுக்கு இடையிலான இடைவெளி எவ்வளவாக இருக்கவேண்டும்?
3. கணக்கிடப்பட்ட சுழற்சிகளைவிட உண்மையில் ஆக்கபூர்வமாக இருந்த சுழற்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன் (இழப்பு)
ஐந்தாம் வகுப்பு – முதல் பருவம்
1. இந்தக் காலகட்டத்தில் 40 கவுண்ட்கள் பஞ்சைச் சுத்தம் செய்வதில் இருக்கும் ஆந்திர பாணி பற்றிக் கற்றுத்தரவேண்டும். ஆனால், நூற்பு பயிற்சிகள் ஏர்வாடா ராட்டையிலேயே நீடிக்கவேண்டும்.
2. ராட்டை நூற்பில் இந்த பருவத்தின் முடிவில் இரண்டு மணி நேரத்துக்கு 40 கவுண்ட்கள் கொண்ட இரண்டு லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும்.
3. இந்தப் பருவத்தில் மெகன் ராட்டையில் நூற்க கற்றுத் தரவேண்டும்.
4. மெகன் ராட்டை நூற்பில் இந்த பருவத்தின் முடிவில் ஒரு மணி நேரத்துக்கு 24 கவுண்ட்கள் கொண்ட இரண்டரை லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும்.
5. ஏர்வாடா ராட்டையில் நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு மணி நேரத்தில் 40 கவுண்ட்கள் கொண்ட ஒன்றேகால் லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். மெகன் ராட்டையில் நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு மணி நேரத்தில் 24 கவுண்ட்கள் கொண்ட ஒன்றரை லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும்.
6. ஆறு மாதங்களில் மொத்த உற்பத்தி என்பது, ஒன்பது சடகா எடை என்ற அளவில் 40 கவுண்ட்கள் கொண்ட 45 கண்டுகள் மற்றும் ஒரு சேர் இரண்டு சடகா எடை என்ற அளவில் 25 கவுண்ட்கள் கொண்ட 54 கண்டுகள்உற்பத்தி செய்தாகவேண்டும்.
7. நாற்பது கவுண்ட் நூலுக்கு சேருக்குக் கூலி ரூ 3-8-3 ஆகும். 24 கவுட்ண்ட் நூலுக்கு சேருக்குக் கூலி ரூ 2-14- என்ற வகையில் மொத்தம் ரூ 3-3-9 ஆகும். இந்தப் பருவத்தில் மொத்த வருமானம் ரூ 6-12-0 ஆக இருக்கும்.
ஐந்தாம் வகுப்பு – இரண்டாம் பருவம்
1. இந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கு 60கவுண்ட்கள் நூற்கக் கற்றுத்தரவேண்டும்.
2. ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி கீழ்க்கண்ட கோட்பாடுகளைக் கற்றுத்தரவேண்டும்.
அ) ஒரு யார்டு ( 3 அடி) துணி நெய்ய எவ்வளவு நீள நூல் தேவைப்படும்?
ஆ) ஒரு குறிப்பிட்ட கவுண்டில் எத்தனை அங்குல முறுக்கு (ட்விஸ்ட்) தேவைப்படும்.
இ) ஸ்பிண்டில் மற்றும் ராட்டை சக்கரம் இரண்டின் சுழற்சி விகிதம்
3. ஸ்பிண்டிலை நேராக்கும் நுட்பத்தைக் கற்றுத்தரவேண்டும்.
4. இந்தப் பருவத்தில் மாணவர்களுக்கு ஏர்வாடா ராட்டை, மெகன் ராட்டை, சாவ்லி ராட்டை போன்ற பலவகை ராட்டைகளின் அமைப்பு, உருவாக்கம், செயல்பாடு, ஒப்புமை போன்றவை கற்றுத் தரப்படவேண்டும்.
5. தக்ளி நூற்பில் இந்த பருவத்தின் முடிவில் மூன்று மணி நேரத்துக்கு 16 கவுண்ட்கள் கொண்ட மூன்று லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். ஏர்வாடா ராட்டையில் நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு மணி நேரத்தில் 60 கவுண்ட்கள் கொண்ட இரண்டு லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். மெகன் ராட்டையில் நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு மணி நேரத்தில் 28 கவுண்ட்கள் கொண்ட மூன்று லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும்.
6. நூற்கும் வேகம் நாளொன்றுக்கு சராசரியாக 60 கவுண்ட்கள் கொண்ட ஒன்றே கால் லாட்கள் மற்றும் 28 கவுண்ட்கள் கொண்ட இரண்டு லாட்கள் உற்பத்தி செய்தாகவேண்டும். ஆறு மாதங்களில் மொத்த உற்பத்தி என்பது, ஆறு சடகா எடை என்ற அளவில் 60 கவுண்ட்கள் கொண்ட 45 கண்டுகள் மற்றும் ஒரு சேர் 4.5 சடகா எடை என்ற அளவில் 28 கவுண்ட்கள் கொண்ட 72 கண்டுகள் உற்பத்தி செய்தாகவேண்டும்.
7. 60 கவுட்ண்ட் நூலுக்கு சேருக்குக் கூலி ரூ 11-4-0 ஆகும். 24 கவுட்ண்ட் நூலுக்கு சேருக்குக் கூலி ரூ 4-3-6 என்ற வகையில் மொத்தம் ரூ 3-3-9 ஆகும். 28 கவுட்ண்ட் நூலுக்கு சேருக்குக் கூலி ரூ 3-10-0 என்ற வகையில் ரூ 4-10-3 ஆகும். இந்தப் பருவத்தில் மொத்த வருமானம் ரூ 8-13-9 ஆக இருக்கும்.
நூற்பு தொடர்பான தொழில் நுட்பக் கேள்விகள்
1. ஸ்பிண்டிலின் சாய்வான பகுதியின் மீது கப்பி ஏன் சாய்ந்துகொள்கிறது?
2. ஸ்பிண்டிலின் சுழற்சி விகிதம் அதிகரிக்கவேண்டுமென்றால் சுழற்சி சக்கரம் அல்லது இடைநிலை சக்கரம் இந்த இரண்டில் எதன் விட்டத்தை அதிகரிக்கவேண்டும்.
3. பருத்தி, தோல் போன்ற பல்வேறு வகையான வார்களின் பயன்கள். பெல்ட் வார்களின் தத்துவம்.
4. இணைப்பானின் பயன்பாடு.
5. பஞ்சை சுத்தம் செய்யும் வில்லின் கைப்பிடியை எங்கு பொருத்தவேண்டும்? சம நிலை தொடர்பான கோட்பாடு.
6. சால்வி ராட்டையின் இரண்டு பட்டைகளை இணையாக வைப்பதன் சாதகங்கள்.
7. ஏர்வாடா ராட்டையில் நூலின் தன்மைக்கு ஏற்ப சக்கரத்தின் எந்தப் பகுதியில் கைப்பிடியைப் பொருத்தவேண்டும்?
8. மரமும் மரமும் உரசுவது, மரமும் இரும்பும் உரசுவது இவற்றின் உராய்வு விசை தொடர்பான வேறுபாடு, விளைவுகள் என்னென்ன?
9. ஸ்பிண்டிலில் கப்பியை எங்கு பொருத்தவேண்டும்?
10. இரும்பு அச்சு, மர அச்சு பயன்படுத்தும்போதான உராய்வு விசையின் அடிப்படையில் சக்கர அச்சில் பித்தளை, இரும்பு குண்டு, மர பியரிங் இவற்றின் பல்வேறு பயன்பாடுகள், விளைவுகள்.
ஐந்தாண்டுகளில் ஒரு மாணவர் மூலமான வருமானம்
ரூபாய் மதிப்பில்
முதல் ஆண்டு 3-9-0
2-ம் ஆண்டு 9-5-3
3-ம் ஆண்டு 11-9-9
4-ம் ஆண்டு 15-11-3
5-ம் ஆண்டு 15-9-9
மொத்த வருமானம் : 55-13-0
25% இழப்பைக் கழித்துக் கொண்டால் ஐந்தாண்டு முடிவில் நிகர வருமானம் ரூ 41-13-9 ஆக இருக்கும்.
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.