Skip to content
Home » காந்தியக் கல்வி #16 – விரிவான பாடத்திட்டம் – 7

காந்தியக் கல்வி #16 – விரிவான பாடத்திட்டம் – 7

காந்தியக் கல்வி

நெசவு மற்றும் நூற்பு ஆகியவற்றை அடிப்படைத்தொழில் வழிக் கல்வியாகக் கொண்ட ஏழு வகுப்புகள் கொண்ட முழு பள்ளியை நிறுவத் தேவையான இட வசதிகள்

1. ஐந்து நெசவு அறைகள் 1-5 வகுப்பு வரை – 600 சதுர அடி X 5 = 3000 ச.அடி
2. பஞ்சு சுத்தம் செய்தல் 150 மாணவர்கள் (ஒரு நேரத்தில் 20 பேர்) – 40 ச.அடி X 20 = 800 சதுர அடி
3. நெசவு – 6-7 வகுப்புகள் – 60 மாணவர் – 20 தறிகள் 1800 சதுர அடி
4. கிடங்குகள் – நெசவு 600 சதுர அடி, ஸ்லிவர் 150 சதுர அடி
5. இரண்டு வகுப்பறைகள் – 600 சதுர அடி
6. நூலகம், நிர்வாக அலுவலகம், பள்ளி ஸ்டோர் – 600 சதுர அடி
7. தாழ்வாரம் – 1150 சதுர அடி
8. சுவர்கள் – 1500 சதுர அடி

மொத்தம் 11,000 சதுர அடி

ஏழாண்டுகளில் மொத்த வருமானம்

நூற்பு 41-13-9
நெசவு 18-15-9
மொத்தம் 60-13-6

ஆசிரியரின் சம்பளம் மாதத்துக்கு ரூ 25 வீதம்

ஏழாண்டுகளில் மொத்த ஆசிரியர் சம்பளம் ரூ 2,100
ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர் வீதம்
ஏழாண்டுகளில் மொத்த வருமானம் ரூ 1,825

0

பொதுவான ஆலோசனைகள்

இந்தத் திட்டம் மிகவும் விரிவாக, நுணுக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவே இறுதியானது என்று சொல்லிவிடமுடியாது. பல மேம்படுத்தலுக்கு நிச்சயம் இடம் இருக்கத்தான் செய்கிறது.

கீழ்க்காணும் முக்கியமான விஷயங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும்.

1. இந்தத் திட்டம் ஆசிரியர்களின் சம்பளம் என்ற மிகப் பெரிய பிரச்னையைப் பெருமளவுக்குத் தீர்த்துவிடுகிறது. மாதத்துக்கு ரூ 25 சம்பளம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. மொத்தப் பணி நாட்களில் சுமார் 25% எதிர்பாரத காரணங்களினால் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கணக்கிடப்பட்டுள்ளது.

3. கல்வி கற்றுத் தர உதவும் ஒரு வழிமுறையாகவே ஒரு கைத் தொழில் பயன்படுத்தப்படுகிறது என்பதால் அதை வெறும் ஒரு தொழிலாக மட்டுமே கற்றுத் தரப் போவதில்லை. எனவே பொதுவாக ஒரு தொழிலைச் செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவான வேகமே பள்ளியில் நிணயிக்கப்பட்டுள்ளது.

4. 1937-ல் அனைத்து இந்திய நூற்பாளர்கள் கழகத்தின் மஹாராஷ்டிரா கிளையானது நிர்ணயித்திருக்கும் கூலியின் அடிப்படையிலேயே இங்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

5. இங்கு குறிப்பிடும் வருமானத்தைவிட மிக அதிகமான தொகை நிச்சயம் வரும். குறைய வாய்ப்பு இல்லை. ஒருவேளை அதைவிடக் குறைந்தால், ஒன்று ஆசிரியர்களின் செயல திறனின்மை அல்லது கருவிகளின் தரமின்மையே காரணமாக இருக்கும்.

6. இந்தத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்படும் கருவிகள் எல்லாம் பொது கல்வியின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் அம்சங்களாகவே பயன்படுத்தவேண்டும்.

7. ஒரு மாணவர் குறிப்பிட்ட வகுப்பில் தேர்ச்சிபெற்றுவிட்டாரா என்பதைத் தெரிந்துகொள்ள இரண்டுமாதங்கள் நாளொன்றுக்கு எட்டு மணி நேர வீதம் 48 வேலை நாட்களில் அடைய வேண்டிய பயிற்சியை அடைந்திருக்கிறாரா என்று கணக்கிடவேண்டும். ரூ 12 (நாளொன்றுக்கு 4 அணா வீதம்) சம்பாதிக்க முடிந்தால் தேர்வில் வெற்றிபெற்றதாக அர்த்தம்.

8. பயிற்சி முடிவில் ஒவ்வொரு மாணவரும் தற்சார்பு பெற்ற நபராக, கற்றுக் கொண்ட தொழிலைச் செய்ய முடியும் படியான ஆகியிருக்கவேண்டும்.

9. முதலாண்டில் தக்ளியால் நூற்க, மாணவர்களைக் கூட்டமாக அமர வைத்துக் கற்றுத்தரலாம்.

10. தக்ளி அல்லது ராட்டையை நூற்றபடியே இசையையும் கற்றுத் தரவேண்டும். அது இசை கேட்கும் மகிழ்ச்சியைத் தருவதோடு ராட்டையை வேகமாகச் இலகுவாகச் சுற்றவும் வழிவகுக்கும்.

11. ஏழாண்டு பயிற்சியில் முதல் கால கட்டத்தைவிட இரண்டாம் காலகட்டம் (பருவம்) மிக அதிக வெற்றியைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12. வீட்டுக்குக் கணிசமாக வருவாய் ஈட்டிக் கொடுத்தால் தான் வகுப்பில் குழந்தைகள் அதிக நேரம் இருந்து படிக்க முடியும். எனவே மாணவர்கள் வீட்டில் இருக்கும்போது நூல் நூற்று நல்ல தொகை சம்பாதிக்க முடியவேண்டும். அதற்கான வழிவகைகளை பள்ளிகள் செய்து தரவேண்டும்.

0

தேவையான கருவிகள் 

நூற்பு

தக்ளி 0-1-9
வைண்டர் 0-1-0
தக்ளி பெட்டி 0-2-0
ஏர்வாடா ராட்டை 2-8-0
ராட்டை வைண்டர் 0-2-0
எண்ணெய் கலன் 0-1-0
கறுப்புத் துணி 0-2-0
பிற 0-1-3
மொத்தம் ரூ 3-3-0

ஜின்னிங்

மரப் பலகை 0-1-0
கம்பு 0-4-0
கிராம ஜின் 1-10-0
மீன் எலும்பு 0-40-0
மொத்தம் 2-3-0

கார்டிங்

ஏர்வாடா (சிறிய வில்) 0-8-0
ஸ்டிக்கர் 0-3-0
மரப் பலகை ஸ்லிவர் 0-4-0
கைப்பிடி 0-3-0
ஸ்லிவர் கம்பி 0-1-0
கட் போன்றவை 0-7-0
பாய் 0-2-0
ஆந்திரா வில் 0-5-0
மொத்தம் 2-0-0

கருவிகள்

சுத்தியல் 0-7-0
ஆப்பு 0-8-0
அரம் 1-0-0
உளி 0-9-0
சிறிய ரம்பம் 0-8-0
தகடு 1-0-0
துளையிடும் கருவி 2-12-0
கத்தி 0-4-0
கத்திரி 0-6-0
ஸ்க்ரூ டிரைவர் 0-6-0
தராசு 1/16 தோலா-2 தோலா 2-0-0
½ சேர் – 1 சேர் 2-14-0
மொத்தம் 12-10-0
ஒட்டு மொத்தம் 20-0-0.

குறிப்பு: கருவிகள், துணைக் கருவிகள் பற்றி குத்து மதிப்பான விவரணைகள் தான் இங்கு வழங்கியிருக்கிறோம். எனவே விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு.

0

துணி நெசவு

நாடா – பட்டி நெசவு

முறுக்கும் சக்கரம் 1-8-0
ஹெட்டல் சட்டகம் 0-8-0
ஸ்டிக்கர் 0-1-0
மொத்தம் 2-1-0

ஆசன பாய், கம்பள நெசவு

ஹெட்டல்ஸ் சட்டகம் 0-12-0
முள் கம்பி 0-8-0
தாங்கி, பிடிமானம், ஏந்தி 0-12-0
மொத்தம் 2-0-0

பாவு ஓடுதல்

ராட்டை 0-4-0
வைண்டர் 0-1-0
ஸ்பூல் 0-0-6
பாபின்கள் 0-12-0
பாவு சக்கரம் 1-8-0
பாவு சட்டகம் 2-0-0
வாளி 0-7-0
கயிறுகள் போன்றவை 0-7-0
மொத்தம் 5-8-0

சைஸிங்

தேக்கு மரத் தூண்கள் 3-4-0
மூங்கில் தூண்கள் 0-8-0
இரண்டு பிரஷ்கள் 5-0-0
மொத்தம் 8-12-0

நெசவு

நீண்ட கழி 3-0-0
கைத்தறி 1-8-0
அதி வேக தறி 7-0-0
ரோலர் 1-8-0
கைத்தறி ஷட்டில் 0-4-0
வேகமாக இயங்கும் (பறக்கும்) ஷட்டில் 0-8-0
தாங்குகட்டை 2-8-0
லெவல் பாட்டில் 0-12-0
அளவு கோல் 0-3-0
கம்பங்கள் 1-0-0
வலுவான கயிறு 1-8-0

ஹெட்டில் சட்டகம்

ரீல் 1-0-0
உருளை- மர குச்சிகள் 0-4-0
பிற 0-12-0
மொத்தம் 2-0-0
ஒட்டு மொத்தம் 40-0-0

இது தோராயமான மதிப்பீடுதான். உள்ளூர் சூழலுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கும்.

0

நெசவு, பஞ்சு சுத்தம் செய்தல், நெசவு – ஏழாம் வகுப்புவரை உள்ள பள்ளிகளுக்கானது வகுப்பு 30 மாணவர்கள் வீதம்.

1. 125 மடக்கு ராட்டைகள் 2-8-0 312-8-0
2. 30 கார்டிங் செட்-ஆந்திரா வில்
நீங்கலாக பிற அனைத்து
கருவிகள் 1-11-0 50-10-0
3. 50 தக்ளிகள், 50 வைண்டர் 0-2-9 8-9-6
4. 5 கையால் இயக்கும் ஜின் 1-10-0 8-2-0
5. 15 மரப் பலகை, பித்தளை கம்பி 0-5-0 4-11-0
6. மெகன் ராட்டை 5 6-0-0 30-0-0
7. சாவ்லி ராட்டைகள் 5 1-4-0 6-4-0
8. மரச் சாமான்கள் 25-0-0
9. 20 தறிகள் அனைத்து கருவிகளுடன் 25-0-0 500-0-0
10. பிற 54-3-6
1000-0-0

குறிப்பு: இது தோராயமான மதிப்பீடுதான். சந்தையின் ஏற்ற இறக்கங்கள், மாவட்ட நிலவரங்களுக்கு விலையில் மாற்றம் இருக்கும்.

0

மொத்த முதலீடு

பருத்தி கொள்முதல் 300-0-0
ராட்டைகள் பிற பொருட்கள் 100-0-0
ஸ்லிவர்கள், நெசவுப் பொருட்கள் 100-0-0
மொத்தம் ரூ 500-0-0

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *