மர தச்சு வேலை வகுப்பு ஐந்து
நேரம் : தினமும் மூன்றரை மணி நேரம். பத்து நிமிட இடைவேளை
செய்முறைப்பயிற்சி
• பத்து மாதிரிகள் அல்லது பயிற்சிகள்.
• மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இரண்டு மாடல்கள்
• வண்ணம் பூசுதல். பாலிஷ் செய்தல்
• பாலிஷ் தயாரித்தல்
கோட்பாட்டு வகுப்பு
1. மரங்களின் கட்டமைப்பு
(அ) கார்பன்
(ஆ) ஆக்ஸிஜன்
(இ) நைட்ரஜன்
(ஈ) ஹைட்ரஜன்
(உ) கந்தகம்
(ஊ) ப்ரோட்டோ ப்ளாசம்
(எ) கரி
2. தச்சு வேலையில் பயன்படுத்தப்படும் உலோகங்கள்
(அ) – இரும்புப் படுகை, உருக்குதல். வார்ப்பிரும்பின் குணம் (பரிசோதனை, பரீட்சை). தேனிரும்பு. வார்ப்பிரும்பை தேனிரும்பு ஆகும் வழிமுறை. எஃகு. பரிசோதனைகள்
இரும்பை எஃகு ஆக்குதல்.
எஃகின் குணங்கள். இரும்பை வலுவேற்றுதல், நீட்டுதல்
(ஆ) பித்தளை – துத்தநாகம் ஒரு பங்கு செம்பு, இரண்டு பங்கு கொண்ட உலோகக் கலவை.
(இ) செம்பு – படுகை. அகழ்ந்தெடுக்கும் முறை.
(ஈ) துத்தநாகம் – படுகை. அகழ்ந்தெடுத்தல்.
மர தச்சு வேலை வகுப்பு ஆறு
நேரம் : தினமும் மூன்றரை மணி நேரம். பத்து நிமிட இடைவேளை
இந்த ஆண்டில் மாணவர்கள் ஆக்கபூர்வமாகச் செயலாற்றவேண்டும். மரம், உலோகம் என இரண்டில் ஏதேனும் ஒன்றை அடிப்படைக் கைத்தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
தச்சு வேலை
மரச் சாமான்கள் செய்தல். சந்தையில் விற்க முடிந்த பயனுள்ள பொருட்கள்.
கோட்பாடு
1. கருவிகளின் பாகங்கள், அவை எப்படிச் செய்யப்படுகின்றன எனது பற்றிய பாடம்.
2. மரத்தடியைப் பதப்படுத்துதல்
(அ) சாறு உள்ள மரம்
(ஆ) மரத்தை வெட்டியபின் பதப்படுத்துதல்
(இ) ஆவியாக்கம், சுருக்குதல்
(ஈ) பதப்படுத்தப்படுவதன் தேவை
(உ) பல்வேறு பதப்படுத்தும் வகைகள்
(1) இயற்கையான பதப்படுத்தல்
(2) செயற்கையான பதப்படுத்தல். வெந்நீர், நீரோடை, புகை போடுதல்
3. தச்சுப் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான அடிப்படை அறிவு
மர தச்சு வேலை வகுப்பு ஏழு
நேரம் : மூன்றரை மணி நேரம். இடைவேளை பத்து நிமிடங்கள்
செய்முறைப் பயிற்சி
1. சந்தையில் விற்க முடிந்த பயனுள்ள மரப் பொருட்களின் உற்பத்தி மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்தல். மாதத்துக்கு ஒவ்வொரு மாணவரும் ஐந்து ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு பயிற்சி தரவேண்டும்.
2. உயர் மெருகூட்டல்
3. கடைதல்
4. அலங்கார வேலைப்பாடு
5. கணக்குப் புத்தகம் பராமரித்தல். விலை நிர்ணய வழிமுறை
கோட்பாட்டு வகுப்பு
மரங்களின் பொதுவான பயன்பாடுகள்.
திட்டமிட்டிருக்கும் மாதிரி அல்லது பயிற்சிகள்
வகுப்பு – அ
1. சுவர் அலமாரி
2. விசிறி. (அ) எளியது. (அ) நிஜ பயன்பாடுக்குக்கு
3. பேனா, பென்சில், தூரிகைக்கான இழுப்பு பெட்டி
4. பல்வேறு கருவிகள்
5. எழுத்து மேஜை
6. பானை நிறுத்த மேடை
7. கொடிக்கம்பம்
8. புத்தக அலமாரி
9. பலவகைப்பட்ட அலமரிகள்
10. மரச் சுத்தியல்
11. மர தாம்பாளங்கள் – பலதரப்பட்டவை.
12. (அ) மேஜை (ஆ) கோடரி கைப்பிடி (இ) கத்தி கைப்பிடி
13. கட்டில்
14. மூலை அலமாரி
15. சிறிய அலமாரிகள் கதவுகளுடன்
மாணவர்கள் பல்வேறு மர சாமான்களைக் கூடுதலாக வடிவமைக்கலாம்.
வகுப்பு – ஆ
1. பலதரப்பட்ட கரண்டிகள்
2. மர தட்டுகள்
3. (அ) அரம் கைப்பிடி (ஆ) விளக்கு மாட்டும் தூண்
4. மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள்
5. பலவகைப்பட்ட ஸ்டாண்ட்கள்
6. எளிய எழுது மேஜை
7. மடக்கும், எளிதில் எடுத்துச் செல்லும் மேஜை
8. பல தரப்பட்ட பெட்டிகள், பல தரப்பட்ட இணைப்புகள்
மாணவர்கள் பல்வேறு மர சாமான்களை கூடுதலாக வடிவமைக்கலாம்.
வகுப்பு – இ
1. சிறிய படகு
2. நாற்காலி
3. மேஜைகள்
4. கடிகார சட்டகம்
5. ஏணி
மாணவர்கள் பல்வேறு மர சாமான்களை கூடுதலாக வடிவமைக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டிருப்பவை எல்லாம் உத்தேச பரிந்துரைகள்தான். உள்ளூர் சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப வேண்டியவற்றை வடிவமைத்துக்கொள்ளலாம்.
ஆறாம் ஏழாம் வகுப்புகளுக்கு உலோக கைத்தொழில்கள்
லகு உலோக கைத் தொழில் தொட்ர்பாக இங்கு விவரிக்கப்படும் வழிமுறைகளே இரும்பு, செம்பு, பித்தளை, துத்த்நாகம் அல்லது பிற உலோகக் கலவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். விவரிக்கப்பட்டிருக்கும் விதங்கள் ஒன்று அல்லது பல கருவிகள், பொருட்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
மாதிரி பொருட்களின் பட்டியல்
1. எளிய கதவு பூட்டு
2. சங்கிலி பூட்டு
3. கீல்
4. ரச மட்டக் கருவி
5. இரும்பு ஸ்டாண்ட்கள்
6. காகிதம் துளையிடும் கருவிகள்
7. கேலிஃபர்
8. உருக்கி ஒட்டும் கருவி
9. திருகு மரைக் கருவி- ஸ்க்ரூ டிரைவர்கள்
10. காம்பஸ்
11. உளி
12. பண்ணைக் கத்தி
13. மெழுகுவர்த்தி ஸ்டேண்ட்
14. புத்தக ஸ்டேண்ட்
15. சுவர் மெழுகுவர்த்தி ஸ்டேண்ட்
16. பாத்திரங்களை அடுக்கி வைக்கும் ஸ்டேண்ட்கள்
17. கனி பறிக்கும் கருவி
18. பல தரப்பட்ட தட்டுகள் பல அளவுகளில்
19. பெட்டிகள்
20. பண்ணை அலமாரி
21. சூரிய கடிகாரம்
மேலே சொல்லப்பட்டிருப்பவற்றில் குறைந்தது 15 பொருட்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப இரண்டு பொருட்கள் செய்து பழகவேண்டும். அவை பயனுள்ள பொருட்களாக இருக்கவேண்டும்.
கோட்பாடு மற்றும் செய்முறைப் பயிற்சி
(அ) ஆக்ஸிடைசிங் – ஆக்ஸிஜனேற்றம்
(ஆ) நிரப்புதல்
(இ) வலிமையூட்டுதல் மற்றும் வளைத்தல்
(ஈ) ஈயம் பூசுதல்
(உ) சுத்தம் செய்தல் மெருகேறுதல்
ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு தச்சு வேலை தொடர்பாக விருப்பப் பாடமாக இவையும் இருக்கலாம்.
அட்டைப் பலகைத் தச்சு வேலையை முதல் இரண்டு வருடங்களுக்கு அடிப்படைக் கைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தவர்கள், மீண்டும் அதைச் செய்து பார்க்க வழிசெய்யவேண்டும். மரக்கட்டை மற்றும் உலோகங்களில் அவர்களுக்குக் கிடைத்த உயர் தொழில் நுணுக்கங்களை இதில் பயன்படுத்தவும் பயிற்சி தரவேண்டும். நூற்பு, நெசவு ஆகியவற்றை அடிப்படைக் கல்வியாக எடுத்துக்கொண்டவர்களுக்கும் அட்டைப் பலகை தச்சு வேலையை கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் பயிற்சியும் தரலாம்.
அட்டை பலகை தச்சு வேலை
மூன்று மாதப் பயிற்சி
செய்முறை
பள்ளி, அலுவலகம், வீடு ஆகியவற்றில் பயன்படக்கூடிய பொருட்களின் உற்பத்தி தொடர்பான பல செய்முறைப் பயிற்சிகள்…
1. கரும்பலகை
2. பென்சில் டிரே
3. பென்சில் பாக்ஸ்
4. அறு கோணத் தட்டு
5. உறிஞ்சும் காகிதம், எழுது அட்டை
6. உறிஞ்சும் காகித அட்டை, காகித அடுக்குடன்
7. கடிதங்கள் வைக்கும் பெட்டி
8. அட்டைப் பலகை பெட்டி (நிற்கும் நிலை)
9. பைல் தொகுப்பு
10. பல்வேறுவிதமான பெட்டிகள்
11. நோட் புக் பைண்டிங்
12. ஆல்பம்
கோட்பாட்டு வகுப்பு
1. கருவிகளுக்கான அறிமுகம் – பயன் மற்றும் கையாளும் விதம்.
2. வரைபடக் கருவிகளுக்கான அறிமுகம் – பயன் மற்றும் கையாளும் விதம்.
3. வரைபடக் கருவிகளின் உபயோகம்
இணை கோடுகள், செங்குத்துக் கோடு, சாய்ந்த கோடு
காம்பஸ் பொருத்தும் விதம்.
திட்டங்கள், பிரிவுகள்,
வட்டம் : மையம், ஆரம், சுற்றளவு
சதுரம், நாற்கரம், அறுகரம், எண்கோணம்
4. ஒருவர் செய்த பொருளின் வரைபடம்.
செய்முறைப் பயிற்சி
1. ஒவ்வொரு மாணவரும் 15 மாதிரிப் பொருட்கள் செய்யவேண்டும்.
2. மாதிரிகள் மூலம் எட்டு இணைப்பு முறைகள்
3. பாலிஷ் செய்தல்
4. வண்ணம் சேர்த்தல்
கோட்பாடு மற்றும் செய்முறை விளக்கம்
1. பருப்பொருள்
2. அளவுகள்
3. மெட்ரிக் சிஸ்டம் : பின்னங்கள், மூன்று விதி,
4. எடை – இந்திய முறை, சர்வ தேசம், இங்கிலாந்து
5. அடர்த்தி
6. நீர் ஒப்படர்த்தி
7. ஆற்றல், வேலை
8. வரைபடங்கள் உருவாக்குதல்
9. விசைகளின் தொகுப்பு
10. விசைகளின் வலிமை
11. எந்திரக் கருவிகள்
12. நெம்புகோல்
ரூபாய்-அணா-பைசா | |
ஒரு தச்சு வேலைக்கான மேஜை | 40-0-0 |
இரண்டு அலமாரிகள் | 50-0-0 |
30 கத்திகள் | 15-0-0 |
இரண்டு பெஞ்சுகள் | 15-0-0 |
30 அளவுகோல்கள் | 15-0-0 |
4 இரும்பு சதுரங்கள் | 5-0-0 |
30 பணிப் பலகைகள் | 45-0-0 |
30 காகிதம் வெட்டும் மூங்கில் கத்திகள் | 7-8-0 |
10 கத்திரிக்கோல்கள் | 4-12-0 |
காகிதம், அட்டைப்பலகை, துணி, தோல் முதலியவை | 60-0-0 |
ரூபாய்-அணா-பைசா | |
ஒரு அலமாரி | 25-0-0 |
15 கத்திகள் | 10-0-0 |
2 பெஞ்சுகள் | 12-0-0 |
1 தச்சுப் பணி டேபிள் | 12-0-0 |
15 ஸ்கேல்கள் | 7-0-0 |
2 இரும்பு சதுரங்கள் | 2-8-0 |
15 தச்சு வேலை போர்டுகள் | 22-8-0 |
ஏழு கத்திரிகோல்கள் | 2-0-0 |
17 காகிதம் வெட்டும் கத்திகள் | 5-0-0 |
காகிதம், அட்டைப் பலகை, துணி, தோல் முதலியவை | 38-0-0 |
மொத்தம் | 136-8-0 |
ரூபாய்-அணா-பைசா | |
15 தனிஅல்லது 8 இரட்டை பெஞ்சுகள், சட்டமிடப்பட்ட மேல்பாகம், கருவிகள் வைப்பதற்கான அலமாரி | 250-0-0 |
15 பலதரப்பட்ட ரம்பங்கள் | 45-0-0 |
30 தகடுகள் | 98-0-0 |
15 ஸ்கேல்கள் | 15-0-0 |
15 டிரே சதுரங்கள் | 20-0-0 |
15 கத்திகள் | 15-0-0 |
5 ஸ்க்ரூ டிரைவர்கள் | 5-0-0 |
1 அரவைக் கல் | 6-0-0 |
2 துளையிடும் கருவி | 6-0-0 |
15 சுத்தியல்கள் | 15-0-0 |
ஒரு செட் பிட்கள் | 18-0-0 |
15 அளவிகள் | 15-0-0 |
5 காம்பஸ்கள் | 2-8-0 |
40 உளிகள் | 28-0-0 |
ஒரு இடுக்கி | 2-8-0 |
15 இரும்பு துடைப்பான் | 15-0-0 |
10 துளையிடும் கருவி | 8-0-0 |
பிற பொருட்கள் | 50-0-0 |
ஆணிகள், ஸ்க்ரூக்கள், மரக்கட்டை | 300-0-0 |
மொத்தம் | 914-0-0 |
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.