தாய் மொழிக் கல்வியும் ஹிந்துஸ்தானி மொழியும்
மொழிப் பாடம் : முதல் வகுப்பு
1. வாய்மொழி சுய வெளிப்பாடு
பெயர்கள், உடல் உறுப்புகள், ஆடைகள், வகுப்பு, கருவிகள், கைத்தொழில் செயல்முறைகள், இயற்கை நிகழ்வுகள், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் இவற்றை மையமாகக்கொண்ட உரையாடல்கள்
2.கதைகள்
(அ) புராணங்கள், காவியங்கள்
(ஆ) நாட்டுப்புறக்கதைகள்
(இ) இயற்கை விந்தைகள்
(ஈ) நீதிக்கதைகள், விலங்குகளின் வாழ்க்கை கதைகள்
(உ) பல்வேறு மாநிலங்கள், பிராந்தியங்கள் பற்றிய கதைகள்
(ஊ) ஆதிமனிதர்கள் பற்றிய கதைகள், பழங்கால மனித வாழ்க்கை
(எ) பள்ளி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை
குறிப்பு : கடைசி இரண்டும் சமூகவியல் வகுப்பு பாடங்களிலும் இடம்பெறும்.
3. எளிய கவிதைகள்/பாடல்கள் வாசிப்பு
4. நாடகம்
5. எளிய வார்த்தைகள், வாக்கியங்கள் வாசித்தல்
தாய் மொழியில் இருக்கும் படைப்புகளெல்லாம் வாய் மொழியாக முதல் ஆறுமாதங்களுக்குக் கற்றுத்தரவேண்டும்.
மொழிப் பாடம் : இரண்டாம் வகுப்பு
• வாய்மொழி சுய வெளிப்பாடு
(அ) மாணவரின் வார்த்தை வளத்தை அதிகரித்தல் – கைத்தொழில், கணிதம், இயற்கை வகுப்பு, சமூகவியல் வகுப்புகளில் கற்றுக்கொண்ட புதிய வார்த்தைகள், வாக்கியங்கள்,
(ஆ) சுய விவரணை : குழந்தைகளின் சுற்றுச் சூழலில் இருக்கும் பொருட்கள், மக்கள், நிகழ்வுகள்; பல்வேறு கிராமக் கைத் தொழில்கள், வேலைகள், விழாக்கள், கண்காட்சிகள் பற்றி விவரித்தல்
• பாடல் பாடுதல், நாடகமாக்கம்
• கதைகள் – முதல் வகுப்பில் படித்தவற்றின் தொடர்ச்சி
• வாசித்தல் – கீழ்க்கண்ட பாடங்கள் இருக்கும் புத்தகங்கள்
(அ) இயற்கை
(ஆ) குழந்தைகளின் சுற்றுச் சூழல், வீடு, பள்ளி, கிராமம்
(இ) சுகாதாரம், சுத்தம்
(ஈ) சமூக நலன் சார்ந்த உள்ளூர் அமைப்புகள்
(எ) கைத்தொழில்கள்
(ஏ) விழாக்கள்
(ஐ) கதைகள்
(ஒ) பிற பிராந்தியங்களில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கை
• எழுத்து – எளிய வார்த்தைகள், வாக்கியங்கள்
மொழிப் பாடம் : மூன்றாம் வகுப்பு
• வாய்மொழி சுய வெளிப்பாடு – இரண்டாம் வகுப்பில் படித்தவற்றின் விரிவான தொடர்ச்சி, சிறிய கதைகள் சொல்லுதல்
• வாசிப்பு – இரண்டாம் வகுப்புக்கென்று கோடிகாட்டப்பட்டிருக்கும் விஷயங்கள் தொடர்பான எளிய புத்தகங்கள், மனித குலத்துக்கு மிகப் பெரிய பங்காற்றியிருக்கும் நபர்களின் நிஜ வாழ்க்கைக் கதைகள். உதா: புத்தர், இயேசு, முஹம்மது
(அ) உரக்க வாசித்தல், தெளிவான உச்சரிப்பு மற்றும் வெளிப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம்
(ஆ) எளிய பத்திகளின் மெளன வாசிப்பு
• எழுதுதல்
(அ) ஆசிரியர் வாசிக்க குழந்தைகள் சிறிய வாக்கியங்கள் எழுதுதல்
(ஆ) சாதாரண கடிதங்கள், விவரணைகள், கதைகள்
(இ) அன்றாட தட்பவெப்ப நிலை குறித்த பதிவுகள்
• கவிதை/ நாடகம்
மொழிப் பாடம் : நான்காம் வகுப்பு
1. வாய்மொழி சுய வெளிப்பாடு
முதல் மூன்று வகுப்புகளில் படித்தவற்றின் தொடர்ச்சி
(அ) கைத்தொழில்,சமூக வகுப்பு, பொது விஞ்ஞானம் ஆகிய விஷயங்கள் பற்றி சிறிய மேடைப்பேச்சு
(ஆ) விருப்பமுள்ள விஷயங்களில் கலந்துரையாடல்
குறிப்பு: மேலே சொல்லப்பட்டிருக்கும் இரண்டு விஷயங்கள் தொடர்பாக நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு கலந்துரையாடல் குழு ஒன்றை உருவாக்கித் தரவேண்டும்.
2. வாசிப்பு
மூன்றாம் வகுப்பில் இடம்பெற்ற பாடங்களின் அடுத்தகட்ட விஷயங்கள் அடங்கிய புத்தகங்கள்
(அ) கிராமப்புற கைத்தொழில்கள், கைவினைக் கலைஞர்கள் பற்றிய கதைகள்/செய்திகள். பல்வேறு பிராந்தியங்களில் இருக்கும்/பல்வேறு காலகட்டங்களில் இருந்த முக்கியமான கலைகள், கைத்தொழில்கள் – உதா: கட்டடக்கலை, ஆடைவடிவமைப்பு, மண் பாண்டப் பொருட்கள் முதலியவை.
(ஆ) மிகப் பெரிய கண்டுபிடிப்புகள், கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய வரலாறு
(இ) மாபெரும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய வரலாறு
(ஈ) சில குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகள்
(உ) ஜெராஷ்டிரர், சாக்ரடீஸ், ஹுசைன், லிங்கன், லூயி பாஸ்டர், டேவி, ஃப்ராங்ளின், ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், டால்ஸ்டாய், புக்கர் வாஷிங்டன், சன் யாட் சன், காந்தி போன்ற மனிதகுலத்துக்கு பெரும் பங்காற்றியிருக்கும் நபர்களின் வாழ்க்கை (நான்கு, ஐந்தாம் வகுப்புகளில் இடம்பெறவேண்டியவை)
குறிப்பு : சமூகவியல்பாடத்துக்கு நெருக்கமானவையாக இந்தப் பாடங்கள் இருக்கவேண்டும்.
3. எழுத்து
(அ) படைப்பூக்கமான எழுத்து- கதைகள், சுயமாக எழுதுதல்
(ஆ) ஆசிரியர் வாசிப்பதை எழுதுதல்
(இ) சாதாரண, வர்த்தக கடிதங்கள் எழுதுதல்
(ஈ) அடிப்படைக் கைத்தொழில் மற்றும் பிற சுவாரசியமான அனுபவங்கள் பற்றி; தன்னைப்பற்றிய மற்றும் வகுப்பினரின் முன்னேற்றம் தொடர்பான ஆவணப்பதிவு – அன்றாடம் மற்றும் மாதாந்திரம்.
(ஈ) நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுடைய சிறிய பத்திரிகை, செய்திகள் தயாரித்தல்.
குறிப்பு: மாணவர்களின் இதழ்களில் கீழ்க்கண்ட விஷயங்கள் இடம்பெறவேண்டும்
(அ) அடிப்படைக் கைத் தொழிலில் அடைந்து வரும் மாதாந்தர முன்னேற்றம்.
(ஆ)அன்றாட மற்றும் மாதாந்தர பருவ நிலைபற்றிய குறிப்புகள்
(இ) வகுப்பில் இருப்பவர்கள், குடும்பத்தினர், கிராமத்தினரின் ஆரோக்கியம் பற்றிய குறிப்புகள்
(ஈ) பூகோள மற்றும் சமூக ஆய்வுகள் பற்றிய குறிப்புகள்
(உ) சம கால நிகழ்வுகள்.
மொழிப் பாடம் : ஐந்தாம் வகுப்பு
நான்காம் வகுப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்து, வாய் மொழி, மற்றும் வாசிப்பு தொடர்பான பாடத் திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படவேண்டும். கூடுதலாகப் புதிய விஷயங்கள் சில அறிமுகப்படுத்தப்படவேண்டும்.
1. தாய் மொழியின் கட்டமைப்பு, இலக்கணம், வார்த்தைகள், வாக்கியங்கள் பற்றிய எளிய, பயிற்சிகள்
2. அகராதியைப் பயன்படுத்தும் முறை, உள்ளடக்கம், அட்டவணை முதலியவை.
3. ஹிந்துஸ்தானி மொழியின் அடிப்படை அறிமுகம், குழந்தையின் தாய் மொழியுடனான அதன் தொடர்பு. குழந்தைக்குத் தெரியாத உருது அல்லது ஹிந்தி எழுத்துகள் (ஹிந்துஸ்தானி பேசப்படும் பிரதேசங்களில்), அல்லது இந்த இரண்டில் குழந்தை விரும்பும் ஏதேனும் ஒன்று (பிற பிரதேசங்களில்) கற்றுத் தரப்படவேண்டும். ஹிந்துஸ்தானி மொழியில் எளிய உரையாடல் பயிற்சி.
மொழிப் பாடம் : ஆறாம் வகுப்பு
1. ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில், நான்காம் வகுப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பான எளிய புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் சார்ந்த பொதுவான வாசிப்பு; அவற்றோடு சேர்ந்து கீழ்கண்டவையும் கற்றுத் தரப்படவேண்டும்.
(அ) சமீபத்திய சாகசப் பயணங்கள். உதா :எவரெஸ்ட் ஏற்றம் , வட துருவப் பயணம்.
(ஆ) சமூக சேவைகள், சமூக சுகாதாரம், பிற நாடுகள் தொடர்பான உதாரணங்கள்.
(இ) நம் தேசத்திலும் பிற நாடுகளிலும் பின்பற்றப்படும் விவசாயம் இந்திய விவசாயியின் வாழ்க்கை மற்றும் பிற நாட்டு விவசாயிகளின் வாழ்க்கை.
2. இலக்கியம்
(அ) தாய் மொழியில் இருக்கும் இலக்கியங்களின் பிரதிநிதித்துவ தொகுப்பு.
(ஆ) பல்வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்கள்; (குழந்தையின் தாய் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டவை)
(இ) மாணவரின் தாய்மொழி சார்ந்த அடுத்தகட்டப் படிப்புகள்
எழுத்துகள் உருவாக்கம்
வாக்கிய அமைப்பு
இலக்கண அமைப்பு
4. சுய வெளிப்பாடு – வாய்மொழியாக, எழுத்துபூர்வமாக
நான்காம் வகுப்பு ஐந்தாம் வகுப்புகளில் இடம்பெற்றிருக்கும் பாடத் திட்டத்தோடு சேர்ந்து கீழ்க்கண்டவையும் இடம்பெறவேண்டும்.
(அ) அன்றாட செய்தி- அறிக்கை
(ஆ) ஆறாம் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான பத்திரிகைகளின் ஆசிரியப் பயிற்சி.
(இ) அறிவிப்புகள், நோட்டீஸ்கள், விளம்பரங்கள் தயாரித்தல்
(ஈ) வணிகப் பத்திரங்களை நிரப்புதல்.
(உ) விழா அழைப்பிதழ், அஞ்சலி, மன்னிப்பு கடிதம் போன்றவை எழுதுதல்
(ஊ) மேடைப் பேச்சு அல்லது ஏதேனும் ஒரு விஷயம் தொடர்பான உரையாடலில் பங்கு பெறுதல்
5. ஹிந்துஸ்தானி மொழியின் அடுத்தகட்ட படிப்பு. எழுதுதல், எளிய உரையாடல் பயிற்சி
மொழிப் பாடம் : ஏழாம் வகுப்பு
1. ஆறாம் வகுப்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பாடங்களின் பொதுவான வாசிப்பு.
2. இலக்கிய வாசிப்பு
(அ) மாணவர்களின் தாய் மொழியில் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், கால வரிசைப்படியான தேர்வு, தாய் மொழி இலக்கியத்தின் வரலாறு
(ஆ) இந்திய மொழிகளின் ஆகச் சிறந்த இலக்கியப் படைப்புகள், மாணவர்களின் தாய்மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டவை.
(இ) உலக இலக்கியத்தின் மாபெரும் படைப்புகள், மாணவர்களின் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டவை.
குறிப்பு:
இந்தப் பாடப் புத்தகங்களில் கீழ்கண்டவையும் இடம்பெறலாம்:
(அ) தீவிர இலக்கியங்களில் இருந்து சில பத்திகளைக் கூடுதல் புரிதலுக்கும் வாசிப்புக்கும் தரலாம்.
(ஆ) உலகின் பிரதான மதங்களின் புனித நூல்களில் இருந்து சில பகுதிகள்.
3. மாணவர்களின் தாய் மொழி இலக்கணம், அந்த மொழியின் வரலாறு தொடர்பான எளிய அறிமுகம், இந்தியாவின் பிற மொழிகளுடன் அதற்கு உள்ள தொடர்பு.
4. சுய வெளிப்பாடு – எழுத்திலும் பேச்சிலும்
(அ) ஆறாம் வகுப்பு படங்களின் தொடர்ச்சி
(ஆ) சுகாதார முகாம்கள், கிராம ஆரோக்கிய முகாம்கள் போன்ற செய்துமுடித்த விஷயங்கள் குறித்த அறிக்கை தயாரித்தல்.
(இ) மாணவர் தாமாகத் தேர்ந்தெடுத்த விஷயம் தொடர்பாக ஒரு சிறிய துண்டு பிரசுரம் தயாரித்தல்
(ஈ) செய்ய விரும்பும் விஷயம் தொடர்பான திட்டமிடல் அல்லது செய்முறைக் குறிப்புகள்
(உ) மூத்த மாணவர்கள் (13-14 வயது) தமக்கான கலந்துரையாடல் விஷயங்களைத் தீர்மானித்து தாமே முன்னெடுப்பார்கள். 10-12 வயது மாணவர்கள் தனிக் குழுவாக நாடகம் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். கிராம வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையதாக இந்தக் கலந்துரையாடலும் நாடகங்களும் அமையவேண்டும். இவற்றில் கிராமப் பெரியவர்களும் வந்து கலந்துகொள்ளவேண்டும்.
கடைசி இரண்டு ஆண்டுகளில் கிராமங்களில் சமூக நலன் சார்ந்த கூட்டங்கள், முகாம்களை ஒருங்கிணைக்கவேண்டும். முதியோர் கல்வி, சுகாதார முகாம்கள், தேசிய, கலாசார விழாக்களைக் கொண்டாடுதல். நடைமுறை விஷயங்கள் சார்ந்து மாணவர்கள் கிராமத்தினர் மத்தியில் சிறிய உரை நிகழ்த்தவேண்டும்.
5. ஹிந்துஸ்தானி மொழியில் அடுத்த கட்டப் படிப்பு
(அ) ஹிந்துஸ்தானி மொழியில் சிறிய உரை நிகழ்த்தவேண்டும். உரையாட வேண்டும்.
(ஆ) எளிய, வர்த்தக கடிதங்கள் எழுதுதல்
(இ) எளிய புத்தகங்கள், வார, மாத பத்திரிகைகள், செய்தித் தாள்கள் வாசிப்பு
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.