கணிதம்
முதல் வகுப்பு
முதல் பருவம்
(1) நூறு வரை எண்கள் (திடமான பொருட்கள் மூலம்); தசம வழிமுறை.
(2) ஐந்து, பத்தின் மடங்குகள் 100 வரை.
(3) சிறிய பெரிய எண்களை அடையாளம் காணுதல்.
இரண்டாம் பருவம்
1. 160 வரை எண்கள். தசம எண் வழிமுறையின் அடுத்த கட்டம்.
2. மனக்கணக்கு. 10க்கு உட்பட்ட எண்களின் கூட்டல், கழித்தல்.
3. கூட்டல், கழித்தல் குறியீடுகள்.
4. பத்து வரையான எண்களின் எளிய கூட்டல் கழித்தல்.
5. 160 வரை எண்கள் எழுதுதல்
6. கெஜம், அடி, அங்குலம் / சேர், சட்டக், தோலா
7. எளிய வடிவ இயல் வடிவங்கள். நேர்கோடு, வளைகோடு, இரு புள்ளிகளுக்கு இடைப்பட்டதொலைவு
இரண்டாம் வகுப்பு
1. 999 எண்கள் வரை
2. 20 வரை கூட்டல் கழித்தல் அட்டவணை
3. இரட்டை இலக்கம், மூன்று இலக்க எண்களின் கூட்டல். கூட்டுத்தொகை 999ஐத் தாண்டாமல்.
4. இரட்டை இலக்க எண்கள், மூவிலக்க எண்களின் கழித்தல்
5. பத்து வரையான பெருக்கல் வாய்ப்பாடு
6. இரட்டை இலக்க எண்களின் பெருக்கல். விடை மூவிலக்கத்தைத் தாண்டாதவகையில்
7. மூவிலக்க எண்களை ஓரிலக்க எண்கள் கொண்டு வகுத்தல்
8. நீளம், எடை அளவிடக் கற்றுக்கொள்ளுதல்
பணம் : ரூபாய், அணா, பைசா
எடை : சேர், சட்டக், தோலா (உள்ளூரில் இருப்பவை)
நீளம் : அடி, கெஜம், கண்டி, லட்டி, கலி
9. சதுரம், செவ்வகம், முக்கோணம், வட்டம் போன்ற வடிவங்களை அடையாளம் காணுதல்
மூன்றாம் வகுப்பு
1. ஏழு இலக்க எண்கள் வரை எழுதுதல்
2. கூட்டல், கழித்தல் பாடங்களின் தொடர்ச்சி
3. 16-ம் வாய்ப்பாடு வரை
4. பெருக்கல். விடை ஏழு இலக்கங்களைத் தாண்டாமல்
5. மூவிலக்க எண்களின் வகுத்தல்
6. ஏறு வரிசை, இறங்குவரிசையில் பணம், நீள, அகலம், எடை
7. கடன் வாங்கிக் கழித்தல், சேர்த்துக் கூட்டுதல்
8. இந்திய முறை அளவீடுகள் (பணம் – அணா – பைசா; சேர்கள், தோலா)
9. பின்னங்கள் ¼, ½, ¾
10. ¼, ½, ¾ தொடங்கி 20 வரை பின்ன வாய்ப்பாடு
11. கோணங்களை அளவிடுதல் (சாய்கோணம், செங்கோணம்)
12. திடப் பொருட்களை அடையாளம் காணுதல் : உருளை, கூம்பு, கோளம், கன சதுரம்
13. எடை, நீளம், கொள்ளளவு, காலம் அட்டவணைகள்
(அ) சேர், பன்சேரி, மெளன்ட், கண்டி
அடி, கெஜம், ஃபர்லாங்க், மைல்
கொள்ளளவு குறித்த உள்ளூர் அளவுகள்
நொடி, நிமிடம், மணி, நாள், வாரம், மாதம், வருடம்.
நான்காம் வகுப்பு
1. எண்கள் மற்றும் எழுத்தால் எழுதுதல் முழுமையாக.
2. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முழுமையாக
3. கடன் வாங்கிக் கழித்தல், சிக்கலான கூட்டல் கணக்குகள்
4. உயர் நிலை பெருக்கல், வகுத்தல்
5. பின்னங்கள். ரூபாய், பைசா, அணா மற்றும் எடைகள், நீளம், அனைத்தின் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்.
(குறிப்பு: வகுத்தல் கணக்குகள் முழு எண்களுக்காக மட்டுமே. பின்னங்களுக்கு அல்ல)
6. எளிய பின்னங்கள், வகுக்கும் எண்களாக 10,12,14,16,20.
7. மேலே இடம்பெற்றிருக்கும் பின்னங்களின் பொது மடங்குகளுள் சிறியது.
8. மேலே சொல்லப்பட்டிருக்கும் வகு எண்களைக் கொண்ட பின்னங்களின் கூட்டல், கழித்தல்.
9. இந்திய, பிரிட்டிஷ் எடைகளின் ஒப்பீடு. பவுண்ட், சேர், டன், கிலோ கிராம்.
10. மூன்றாம் நான்காம் வகுப்புகளில் கற்றுக் கொண்ட அளவுகளின் அட்டவணை. விரிவாக.
11. கணக்குகள் எழுதுதல் – ஒவ்வொரு மாணவரும் தமது கைத் தொழில் – கிராஃப்ட் தொழிலின் கணக்கு வழக்குகளை எழுதுதல்
12. சதுரங்கள், முக்கோணங்களின் பரப்பளவு, நீள அகல அளவுகள், ஒரு கோட்டுக்கு செங்குத்துக் கோடு வரைதல், இணை கோடுகள் வரைதல், சாய் கோணக் கோடுகள் வரைதல்
ஐந்தாம் வகுப்பு
1. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகள், உயர் நிலைப் பயிற்சிகள்
2. மீச் சிறு பொது மடங்கு, மீப் பெரு பொது மடங்கு
3. சிக்கலான பின்னஙள் (கலப்பு பின்னங்கள் வேண்டாம்)
4. எளிய, சிக்கலான கணக்குகள்.
5. ஒற்றை அலகு முறை (யூனிட்டரி முறை)
கணக்கு எழுதுதல்
1. வரவு செலவுக் கணக்கு (வீடு, பண்ணை, விழாக்கள்)
2. பொருட்கள் இருப்பு, பதிவேடு (தனி நபர், மொத்த வகுப்பு)
3. பணப் புத்தகம், பதிவேடு ( கைத் தொழில், பள்ளி, வீடு வருமானக் கணக்கு)
4. மாதாந்திரக் கணக்கு (வரவு, செலவு)
5. லாப நஷ்டக் கணக்கு, ஆண்டு இறுதியில் நிலுவையில் பொருள் எதுவும் இல்லாத அளவில்)
வடிவ இயல் – செய்முறை
1. பரப்பளவுக் கணக்கீடு – முக்கோணம், இணைகரம்
2. வட்டம், விட்டத்துக்கும் சுற்றளவுக்குமான விகிதம், வட்டத்தின் பரப்பளவு
3. கள அளவீடுகள். ஏக்கர், பிகா ஒப்பீடு
இவற்றோடு தொடர்புடையதாக
1. குறிப்பிட்ட கோணத்துக்கு இணையான கோணத்தை உருவாக்குவது எப்படி?
2. கொடுக்கப்படும் முக்கோணத்துக்கு இணையான முக்கோணம், செவ்வகம், நாற்கரம் உருவாக்கும் விதம்
3. ஒரு வட்டத்தின் மையம், வில்லின் மையம்.
ஆறாம் வகுப்பு
1. தசம பின்னங்களை எழுதுதல், வாசித்தல்
2. தசம பின்னங்களின் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்
3. தோராய கணிப்பு (முழு எண் ஆக்கம்)
4. சதவிகிதங்கள்
5. தனி வட்டி
6. லாப நஷ்டக்கணக்கு
கணக்குப் புத்தகம் எழுதுதல்
1. ஐந்தாம் வகுப்பில் இது தொடர்பாகக் கற்றுக் கொண்டவற்றில் அடுத்த கட்டப்படிப்பு
2. கடன் மற்றும் பணப் பரிமாற்றம்
3. இருப்பு நிலைக் கணக்கு
வடிவ இயல் – செய்முறைப் பயிற்சி
1. ஐந்தாம் வகுப்பில் பரப்பளவு தொடர்பான பாடங்களின் அடுத்த கட்டப் படிப்பு. வயல்கள், தோப்புகள் இவற்றைக் களத்தில் சென்று அளவிடுதல்.
2. கன சதுரம், கன செவ்வகம், உருளை ஆகியவற்றின் கொள்ளளவு
குறிப்பு: கிணறுகள் வெட்டுதல், சுவர்கள் எழுப்புதல் போன்றவற்றுடன் இவை செய்துபார்க்கப்படவேண்டும்.
ஏழாம் வகுப்பு
1. முந்தைய வகுப்புகளில் படித்தவற்றை மீள் வாசித்தல், விரிவாகப் படித்தல்
2. மும்மடி விதி – விகிதம்
3. காலம், வேலை, வேகம்.
4. பரப்பளவு, கொள்ளளவு, வட்டி போன்றவற்றுக்கான விதிகள்
5. கிராஃப்கள்
6. வர்க்க மூலம்
கணக்குப் புத்தகம்
1. வர்த்தகக் கணக்கு
2. லாப நஷ்டக்கணக்கு
3. இருப்பு நிலைக்குறிப்பு
வடிவ இயல்- செய்முறை
1. முந்தைய வகுப்புகளில் படித்தவற்றின் மீள் வாசிப்பு
2. பரப்பளவு, கொள்ளளவுக்கான விதிகள், சூத்திரங்கள்
3. பரப்பளவைச் சுருக்கி விகிதாசரத்தோடு வரைதல்
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.