Skip to content
Home » காந்தியக் கல்வி #22 – விரிவான பாடத்திட்டம் – 13

காந்தியக் கல்வி #22 – விரிவான பாடத்திட்டம் – 13

காந்தியக் கல்வி

சமூகவியல் பாடம் (தொடர்ச்சி)

வகுப்பு – 4

I. பழங்கால வரலாறு – பழங்கால இந்தியா, பெளத்த சீனா, இந்தியாவைத் தாண்டிய இந்தியச் செல்வாக்கு, ஆரம்ப கால கிறிஸ்தவர்கள்.
(அ) பழங்கால இந்தியா – சமுத்திர குப்தர், காளிதாசர், ஆர்யபடர், இந்தியாவில் வணிகத்துக்கு வந்த அராபியர், அயல் நாடுகளுக்கு வர்த்தகத்துக்குச் சென்ற இந்தியர். ஹர்ஷவர்த்தனர், பிருத்விராஜ், ஹாருன் – உர் – ரஷீதின் அரசபையிலிருந்த இந்திய மருத்துவர்.
(ஆ) பெளத்த சீனம் – சீனப் பயணிகள் ஃபாஹியான், யுவான் சுவாங் பற்றிய வரலாறு
(இ) இந்தியாவைத் தாண்டிய இந்தியச் செல்வாக்கு – ஜாவா அல்லது சியாமுக்கு கலை, வர்த்தகம் சார்ந்து சென்று அங்கே தங்கிய இந்தியர்கள் பற்றிய வரலாறு.
(ஈ) கிறிஸ்து மற்றும் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பற்றிய வரலாறு

II. மனித குலத்தின் பூகோள, சுற்றுச் சூழல்கள்
1. ஒரு மாவட்டத்தின் தொழில் சூழல் – செய்முறைப் பயிற்சி: ஒரு மாவட்டத்தில் இருக்கும் தொழில்கள் பற்றிய வரைபடம். கூட்டு முயற்சியாக வழிகாட்டிக் குறிப்பு நூல் தயாரித்தல்.
2. இயற்கையான நில வகைகள், தட்பவெப்பநிலை, விவசாயம், தொழில் துறைகள் தொடர்பாக ஒரு பிராந்தியத்தின் பூகோளம்
3. உலகில் வேட்டை, மீன் பிடித்தல், கானக வாழ்க்கை போன்றவை நிலவும் விதம். செய்முறைப் பயிற்சி: பலர் கூடிக் களிமண்ணில் ஒரு பிராந்தியம் பற்றிய உருவம் செய்தல், வரைபடங்கள், அட்டவணைகள், திட்டங்கள், படங்கள் வரைதல்
4. உலக சாகசப் பயணங்கள் பற்றிய கதை – மார்க்கோ போலோ, வாஸ்கோடகாமா, கொலம்பஸ்
5. உலகின் முக்கியமான கடல் வழிகள். இந்தியாவிலிருந்து தூரகிழக்கு நாடுகள், இந்தியாவிலிருந்து ஐரோப்பா, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா, இந்தியாவிலிருந்து அரேபியா, இந்தியாவிலிருந்து ஆஃப்ரிக்கா, ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா.
6. (நெசவுத்தொழில் அடிப்படைத் தொழில் கல்வியாக இருக்கும் பள்ளிகளில்) பல்வேறு நாடுகளில் பருத்தி, பஞ்சு ஆகியவற்றை எப்படிச் சுத்திகரிக்கிறார்கள், நெசவு செய்கிறார்கள்?

III. குடிமை வாழ்வுக்கான பயிற்சி
1. கிராமம் – சமூக அமைப்பு – கீழ்க்கண்ட விஷயங்களின் அடிப்படையில்.
(அ) கிராமம் – சமூகக் குழுக்கள், பரஸ்பர தொடர்புகள், கிராமத்திலிருந்து வெளியூர்களுக்குச் செல்லுதல்
(ஆ) டவுன் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், குடிமகன்களின் உரிமைகள், கடமைகள், வரி, காவல்துறை, நீதித்துறை.
(இ) சமூகப் பணிகள் : மருத்துவமனை, குழந்தைகள் காப்பகம், குடி நீர் பணிகள், தெரு விளக்குகள், மைதானங்கள், மடாலயங்கள்.
(ஈ) வழிபாட்டு மையங்கள்; அனைத்து மத வழிபாட்டு மையங்களுக்கும் மரியாதை.
(எ) பொழுதுபோக்கு மையங்கள்: நாடக அரங்குகள், திரையரங்குகள்
(ஏ) கல்வி மையங்கள்: பல்கலைக்கழகம், கல்லூரிகள், பள்ளிகள், தொழில் கல்வி மையங்கள்.
செய்முறைப் பயிற்சி
அருகில் இருக்கும் டவுனுக்குப் பயணம்.
2. சம கால நிகழ்வுகள் பற்றிய படிப்பு.
செய்தித்தாள்கள் வாசிப்பு. பூகோள வரைபடங்கள், தாய்மொழி மூலமான வாசிப்பு.
3. செய்முறைப் பயிற்சி
(அ) சுய ஆட்சிக் கொள்கைகளைக் கொண்டு பள்ளியில் சுய நிர்வாக அமைப்புகள் அமைத்தல்.
(ஆ) மூன்றாம் வகுப்பில் இடம்பெற்றுள்ள பாடங்களின் அடிப்படையில் சமூக சேவைப் பணிகள்
(இ) தேசிய,மத, பருவ கால விழாக்கள் கொண்டாடுதல்
(ஈ) செய்தி வாசிப்பு மையங்கள், சம கால நிகழ்வுகள் தொடர்பான விவாதங்கள்.
4. குடிமைச் செயல்பாடுகள் – மூன்றாம் வகுப்பில் சொல்லப்பட்டிருப்பவற்றின் தொடர்ச்சி.

வகுப்பு – 5

I. இந்தியாவிலும் உலகிலும் இஸ்லாமிய நாகரிகத்தின் வரலாறு
(அ) இறைத்தூதர் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு, அராபிய சமூக, பூகோளப் பின்னணியில்
(ஆ) ஆரம்ப கால இஸ்லாமிய நாயகர்கள் : ஓமர், அலி, ஹுசைன், காலிஃப், அப்துல் அஜீஸ்
(இ) இந்திய இஸ்லாமியத் தொடர்பு : இஸ்லாமிய வணிகர்கள், பயணிகள் – முஹம்மது பின் காசிம், க்வாஜா மோய்ன் உதின் சிஷ்தி.
(ஈ) இந்து- இஸ்லாமியக் கலாசாரத்தின் வரலாறு (தெளிவான, அழுத்தமான உதாரணங்கள் மூலம்)
(1) ஹிந்து முஸ்லிம் மதங்களின் பரிமாற்றங்கள்: அமீர் குஸ்ரு, கபீர், குரு நானக், அக்பர், தாரா ஷிகோ
(2) பொதுவான சமூக வாழ்க்கையை வளர்த்தெடுத்தல் : உணவு, உடை, பொழுதுபோக்குகள், பொதுவான விழாக்கள், சமூகச் சடங்குகள், பழக்க வழக்கங்கள்
(3) பொதுவான அரசியல், நிர்வாக அமைப்பு: ஷேர் ஷா, அக்பர், தோடர் மல்.
(4) மொழி, இலக்கியம் : இலக்கிய, ஆட்சி மொழியாக பாரசீகம்; பாரசீக மொழியில் எழுதிய ஹிந்து எழுத்தாளர்கள், அறிஞர்கள்; சம்ஸ்கிருதம் ஹிந்தியில் எழுதிய இஸ்லாமிய எழுத்தாளர்கள், அறிஞர்கள். சம்ஸ்கிருதம் ஹிந்தி, வங்காளி மொழிகளுக்கு முஸ்லிம்கள் தந்த ஆதரவு. இந்து முஸ்லிம்களின் பொது மொழியாக ஹிந்துஸ்தானி மொழியின் வளர்ச்சி.
(5) கலைகள், இசை: இந்து-இஸ்லாமிய இசை. அமீர் குஸ்ரு, தான் சேன். ஓவியம் – மொகலாயப் பாணி, ராஜபுத்ர பாணி, கங்கரா பாணி. கட்டடக்கலை -குதுப்மினார், ஃபாதேபூர் சிக்ரி, தாஜ்மஹல்.
கை எழுத்துக் கலை, சுவடி எழுத்துகளை அலங்கரித்தல்.
(6) கைவினைக் கலைகள் : நெசவு, சாயம் ஏற்றுதல், அச்சு. தங்க, வெள்ளி உலோக வேலைகள், போர்வை, கம்பள நெசவு, தோட்டக் கலை
(7) கீழ்க்காணும் நபர்களின் வாழ்க்கை வரலாறு, அன்றைய சமூகச் சூழல்கள் சார்ந்து: அல்பரூணி, இபின் – இ – பதூதா, ஃபெரோஸ் ஷா, துக்ளக், பாபர், சந்த் பீவி, நூர் ஜஹான் மற்றும் சில துறவிகள், சூஃபிகள், தாது, கபீர்,நானக், பாபா ஃபரீத்
(8) உலகுக்கு இஸ்லாமிய நாகரிகத்தின் பங்களிப்பு: அலி (அறிஞராகவும், தனி நபராகவும்); பலால் (நீக்ரோ ஜனநாயகம்); ஹாரூண் உர் ரஷீத் (கல்விக் கொடை); சலாலுத்தீன் (இஸ்லாமிய வீரம்); மூன்றாம் அப்துர் ரஹ்மான் (ஸ்பெயினில் மூர் கலாசாரம்) உலகில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் (பூகோளவியலுடன் இணைத்து)

II. மனிதகுலத்தின் பூகோள சுற்றுச் சூழல்
1. இந்தியாவின் பூகோளம்; நில வகைகள், தட்பவெப்பம், தாவரங்கள், காடுகள், தகவல் தொடர்பு, தொழில்கள், வணிகம், மக்கள் தொகை, அரசியல் பிரிவுகள், மொழிகள்.
செய்முறைப் பயிற்சி
(அ) இந்திய பூகோளத்தின் வரைபடங்கள், அட்டவணைகள், படங்கள்
(ஆ) உலகில் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் தொடர்பான வரைபடம்
2. உலகின் பல்வேறு பகுதிகள், தொழில்களின் அடிப்படையில். வணிகம், விவசாயம், தொழில்துறைகள்
செய்முறை : வரைபடங்கள், அட்டவணைகள், படங்கள்.
3. உலக நாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட கதை. லிவிங்ஸ்டோன், குக், பியர்ரி, ஷேகில்டென்
4. இந்தியாவிலும் உலகிலும் இருக்கும் நெசவு தொழில் வழிமுறைகள் (கைத்தொழில் வகுப்பில்). வாய்வழித் தகவல்கள், விவாதம், கட்டுரை.

III. குடிமை வாழ்க்கைக்கான பயிற்சி
1. சம கால நிகழ்வுகள்
(அ) செய்தித்தாள் – குழு வாசிப்பு
(ஆ) செய்தி அறிக்கையை எடிட் செய்தல்
(மொழிப்பாடத்தின் போது)
2. மாவட்டம் பற்றிய தகவல்கள்
(அ) மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகள், பொது சேவை அமைப்புகள், அரசால் கட்டுப்படுத்தப்படுபவை: விவசாயம், நீர்ப்பாசனம், கூட்டுறவு அமைப்புகள், சுகாதாரம், ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பராமரிப்பு, மருத்துவம், கல்வி.
(ஆ) நிர்வாகம்: துணை அலகுகள், மாவட்ட அதிகாரிகள், அவர்களின் பணிகள், சட்ட நிறுவனங்கள், நீதிமன்றங்கள், காவல் துறை.
(இ) சமூக சேவை அமைப்புகள்
(ஈ) பொழுதுபோக்கு வழிமுறைகள், பொது பரப்புரைகள்
IV. குடிமைச் செயல்பாடுகள்
நான்காம் வகுப்பில் இடம்பெற்றிருப்பவற்றின் தொடர்ச்சி.

வகுப்பு – 6

I. நவீன இந்திய வரலாறு.
(அ) மொகலாயப் பேரரசு, சிவாஜி – மராட்டிய எழுச்சி.
(ஆ) இந்து-முஸ்லிம் கலாசார வீழ்ச்சி
(இ) இந்தியாவில் ஆரம்பகால ஐரோப்பிய வணிகர்கள், வியாபாரிகள், படைவீரர்கள், மிஷனரிகள்.
(ஈ) இந்தியாவை பிரிட்டிஷார் ஆக்கிரமித்த வரலாறு
(உ) ரஞ்சித் சிங், சீக்கிய எழுச்சி
2. இந்திய கலாசாரத்தின் மீது மேற்குலகின் தாக்கம். கீழ்க்கண்ட அம்சங்களின் அடிப்படையில்:
(அ) மதம்
(ஆ) சமூக வாழ்க்கை
(இ) அரசியல், பொருளாதார வாழ்க்கை
(ஈ) மொழி, இலக்கியம்
(உ) கல்வி
(ஊ) தொழில்துறை, கலைகள், கைவினைக் கலைகள்
குறிப்பு : கோட்பாட்டுரீதியாகவோ தத்துவார்த்தரீதியாகவோ மட்டுமல்லாமல் தெளிவான, அழுத்தமான உதாரணங்களுடன் கற்றுத் தரவேண்டும்.
3. இந்திய தேசியப் போராட்டத்தின் வரலாறு.
4. இந்தியாவில் நெசவுத் தொழில், அதன் வீழ்ச்சி (கைத் தொழில் கிராஃப்ட் வகுப்புடன் சேர்த்து)

II. மனித குல பூகோளவியல், சுற்றுச் சூழல்
(அ) உலக நிலவியல். யூரேஷியா பற்றிக் கூடுதல் கல்வி. மனிதர்களின் தொழில், வாழ்க்கை ஆகியவற்றின்மீது நிலவியல் செலுத்தும் தாக்கம்.
(ஆ) சமீபத்திய சாகசக் கண்டுபிடிப்புகள், சாதனைகள்: எவரெஸ்ட் ஏற்றம், சாகசப் பயணங்கள், ரஷ்ய வட துருவப் பயணம்

III. குடிமை வாழ்க்கைக்கான பயிற்சி
(அ) கிராமங்களில் இருக்கும் மதங்கள், சமூக கலாசார வாழ்க்கை இவை பற்றிய விரிவான ஆய்வு. ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் மாணவர்கள் முன்னெடுக்கவேண்டும்.
செய்முறைப் பயிற்சி : ஆய்வு முடிவுகளின் செய்முறை வெளிப்பாடாக, 12-14 வயதான மாணவர்களைக் கொண்டு சமூக சேவை/பணிக் குழுவை அமைக்கவேண்டும்.
(அ) கிராம மக்களின் பொருளாதார, கலாசார தேவைகள் பற்றி முறையான ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும்.
(ஆ) கிராம சாலைகள், கிணறுகள் பராமரிப்பு, சுகாதாரம், தூய்மை தொடர்பான கண்காணிப்பு, கிராம காவல், கிராம குடிநீர் பராமரிப்பு
(இ) ஈக்கள், மூட்டைப் பூச்சிகள், மலேரியா, கொசு, பிற நோய் பரப்பும் உயிர்களிடமிருந்துபாதுகாப்பு
(ஈ) மூலிகைகளைச் சேகரித்தல், பயிரிடுதல், மக்களுக்கு விநியோகித்தல்
(உ) சுகாதாரம், தூய்மை தொடர்பான பொது பிரசார நிகழ்ச்சிகள்
(ஊ) தொற்று நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள்.
(எ) கிராமங்களில் முதியோர் கல்வி. செய்தித்தாள், பத்திரிகைகள் வாசித்தல், பஜனை, கதாகாலட்சேபம், சொற்பொழிவுகள். கல்வியைப் பரப்புதல்.
(ஏ) காடு, தோட்டங்களின் பராமரிப்பு, பிற இயற்கை அழகு நிறைந்த இடங்களின் பராமரிப்பு, பழங்கால கோவில்கள், மசூதிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பராமரிப்பு.
(ஐ) கிராமங்களில் நடக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான விழிப்புணர்வு
(ஒ) கிராமத்துப் பெரியவர்களுக்கு கை தொழில் பயிற்சி மையங்கள் அமைத்தல்.
(ஓ) தேசிய, மதம் சார்ந்த விழாக்களை நடத்துதல். பொழுது போக்கு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு விழாக்கள், பெரியவர்களுக்கான விழாக்கள் ஏற்பாடு செய்தல்.

வகுப்பு – 7

I. நவீன உலகம் குறித்த கல்வி
1. நவீன வாழ்க்கையில் விஞ்ஞானம். இயற்கை சக்திகளை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கருவிகளை உருவாக்குதல் மூலம் வெல்லுதல். அவற்றின் பயன்பாடு.
(அ) ரயில்கள், மோட்டார் வாகனங்கள், கப்பல்கள், விமானங்கள் போன்ற அதி வேகப் பயணங்களுக்கானவை.
(ஆ) அச்சு ஊடகம், தொலைபேசி, தந்தி, வானொலி, தொலைகாட்சி போன்றவற்றின் மூலம் தகவல் தொடர்பு வளர்ச்சி.
(இ) நவீன தொழில் துறை வளர்ச்சி. தொழில் புரட்சி.
(ஈ) விஞ்ஞானம் மற்றும் சுகாதாரம், மருத்துவம்
(உ) விஞ்ஞானமும் விவசாயமும்
(ஊ) அன்றாட வாழ்வில் விஞ்ஞானம் உணவு, உடை, விளக்குகள், கட்டடங்கள்.
(எ) விஞ்ஞானமும் நவீனப் போர்முறையும். சக்தியையும் இயற்கையையும் தவறாகப் பயன்படுத்துதல் (பொது விஞ்ஞானப் பாடத்துடன் இதை இணைத்துப் படிக்கவேண்டும்).

II. நவீன உலகில் ஏகாதிபத்தியமும் தொழில்மயமாக்கலும்.
(அ) மேற்குலகில் தொழில் புரட்சி, முதலாளித்துவம் மற்றும் தொழில் சார் நாகரிகத்தின் வளர்ச்சி.
(ஆ) தொழில்மய நாகரிகத்தின் வளர்ச்சியினால் உருவான ஏகாதிபத்தியம். மேற்குலக நாடுகள், ஜப்பான் போன்ற தொழில் மய நாடுகளினால் ஆசியா, ஆஃப்ரிக்கா போன்ற நாட்டினர் சுரண்டப்படும் விதம்.
(இ) உலகப் போர் (1914-1918)
(ஈ) உலகின் மாபெரும் சக்தியாக சோஷலிசத்தின் வரலாறு. முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிர்வினையாக அது செய்தவை. தொழில்மயம் மற்றும் சோஷலிச நாகரிகம் சார்ந்து சோவியத் குடியரசின் பரிசோதனை முயற்சிகள்

III. நவீன உலகில் ஜனநாயகம்
(அ) ஜனநாயகத்தின் அர்த்தம்.
(ஆ) பழங்கால, மத்திய கால இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள், சமூகங்கள்.
(இ) அமெரிக்கக் குடியரசின் வரலாறு.
(ஈ) ஃப்ரெஞ்சுப் புரட்சி
(உ) இந்திய அரசியல் சாசனத்தின் மேலோட்டமான சித்திரம். அதன் எல்லைகள்
(ஊ) ஐரோப்பாவில் ஜனநாயகம் ஒடுக்கப்பட்ட விதம்.
குறிப்பு:
நவீன உலகம் குறித்த தெளிவான சிந்தனை உருவாக்கும் நோக்கில் முறையாக இந்த விஷயங்கள் சார்ந்து எளிய முறையில் விரிவாக இந்த விஷயங்களைப் புரியவைக்கவேண்டும்.

IV. சம கால நிகழ்வுகள்
(அ) இன்றைய உலக நிலை (பரந்த அளவில்)
(ஆ) சர்வ தேச நீதி மற்றும் அமைதிக்குப் பாடுபடும் சக்திகள்.
(1) ஐக்கிய நாடுகள் சபை, அதன் செயல்பாடுகள், தோல்விகள்
(2) சர்வ தேச அமைதி நிறுவனங்கள்
(3) சத்தியாகிரகம் ஓர் உலக சக்தியாக.

V. நவீன இந்தியா எதிர்கொள்ளும் பிரச்னைகள்
(அ) சமூகம்: கிராமப்புற மறுகட்டமைப்பு.
தீண்டாமை பிரச்னை மற்றும் ஹரிஜன இயக்கம்.
இஸ்லாமியரிடையேயான சமூக சீர்திருத்தம்.
நவீன இந்தியாவில் பெண்களின் நிலை.
(ஆ) அரசியல்: தேசிய இயக்கத்தின் வரலாறு (முந்தைய வகுப்பின் தொடர்ச்சி). அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள்.
(இ) பொருளாதாரம்: பிரிட்டிஷ் ஆட்சியில் கைவினைத் தொழில்கள், பிற தொழில் துறைகளின் வீழ்ச்சி.
இந்தியாவில் ஏழ்மை.
சுதேசி இயக்கத்தின் மூலமும் கிராமப்புறத் தொழில் மேம்பாட்டு இயக்கங்கள் மூலமும் கைவினைத் தொழில்களை மேம்படுத்துதல்.
இந்தியாவில் நவீன தொழில்மயமாக்கத்தின் தொடங்க காலம்.
(ஈ) மொழி: இந்தியாவில் பல மொழிகள். தேசிய மொழியாக ஹிந்துஸ்தானி இருக்கவேண்டியதன் அவசியம்.
(உ) கலாசாரம்: இந்திய கலாசாரம் மற்றும் தேசியக் கல்வியின் மறுமலர்ச்சி.

VI. உலகின் பூகோளம்: பொருளாதாரம் அடிப்படையிலான அறிதல். பிற நாடுகளுடனான நம் தேசத்தின் பொருளாதாரத் தொடர்புகள்.
(கிராம சந்தை, மாவட்ட வணிக மையம் இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதில் இருந்து தொடங்கவேண்டும்)
(அ) நம் தேசத்திலும் உலகின் பிற நாடுகளிலும் நெசவுத் தொழிலில் பின்பற்றும் வழிமுறைகள், தொழில்நுட்பங்கள் (நூற்பு, நெசவு ஆகிய கைத்தொழில் வகுப்புடன் இணைந்து)
செய்முறை: ஆறாம் வகுப்பில் சொல்லப்பட்டிருப்பவற்றின் தொடர்ச்சி.

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *