Skip to content
Home » காந்தியக் கல்வி #26 – விரிவான பாடத்திட்டம் – 17

காந்தியக் கல்வி #26 – விரிவான பாடத்திட்டம் – 17

காந்தியக் கல்வி

அடிப்படைத் தொழில்கல்வியாக நெசவு மற்றும் நூற்பு கொண்ட பாடத்திட்டத்தில் பிற பாடங்களுடன் தொடர்புபடுத்தவேண்டிய அம்சங்கள் (தொடர்ச்சி)

வகுப்பு – 4

கணிதம்

கைத்தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை, உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி போன்ற புள்ளிவிவரங்களில் இருக்கும் பெரிய எண்களைப் பயன்படுத்தி கணிதப் பாடங்களை, பயிற்சிகளைச் செய்யவேண்டும். கைத்தொழில் மூலம் சம்பாதிக்கும் சம்பளத்தைப் பயன்படுத்திக் கூட்டல், பெருக்கல் கணக்குகளைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அடிப்படைக் கைத் தொழில் தொடர்பான வரவு செலவுகளைப் பதிவேட்டில் எழுதிக் கற்றுக்கொள்ளலாம்.

சமூகவியல் 
பழங்காலத்தில் இந்திய நெசவுத் தொழில்.
கிராமங்கள், மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் துணி உற்பத்தி, நெசவு, நூற்பு தொடர்பான விரிவான தகவல்களைக கற்றுத் தரவேண்டும்.
மாவட்டங்களில் துணி, உடை உற்பத்தி செய்யப்படும் மையங்கள்.
இந்திய வரலாற்றில் நெசவுத் தொழில் ஆற்றிய பங்கு. இந்தியாவில் இருந்து மேற்குலகுக்கு துணிகள் கொண்டுசெல்லப்பட்ட வர்த்தகத்தின் முக்கியத்துவம். கடல் பாதைகளைக் கண்டுபிடிக்க அவை தூண்டுதலாக இருந்த விதம்.
கிராமங்கள், மாவட்டங்களில் நெசவுத் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை; மொத்த துணிவகைகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் எண்ணிக்கை; துணி உற்பத்தி முறையில் இருக்கும் பல்வேறு வகைகள், ஒவ்வொன்றுக்கும் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை. நெசவாலைகள், நூற்பாலைகள், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு நடக்கும் இடப்பெயர்வு, அதன் அளவு, அபாயங்கள். முறையான திட்டமிடலின் அவசியம்.

பொது அறிவியல்

பருத்தி செடி வளர்ப்பு தொடர்பான பரிசோதனைகள்.
பருத்தி இழைகள், பஞ்சு இடைவெளிகளில் இருக்கும் காற்று, வெப்பத்தை கடத்தா தன்மை, மெத்தை, போர்வை தயாரிப்பு.
ஓவியம்
சமூகவியல் பாடம் தொடர்பான தொழில்கள், நிகழ்வுகள் பற்றிய போஸ்டர்கள், சார்ட்கள்

தாய் மொழிப் பாடம்

மேலே இடம்பெற்றிருக்கும் சமூகவியல் பாடங்கள் தொடர்பான வாய்மொழி விவரணைகள், உரையாடல்கள், சொற்பொழிவுகள் நிகழ்த்திப் பயிற்சி பெறவேண்டும்.
பாடப் புத்தகங்களிலும் துணைப் பாடங்களிலும் இடம்பெற்றிருக்கும் பாடங்களைப் படித்து மொழிப் பயிற்சி பெறவேண்டும்.
சமூகவியல் தொடர்பான தகவல்கள், தரவுகள் இவற்றை எழுதுதல். கைத்தொழில் மற்றும் விஞ்ஞான ஆய்வுகள் பற்றி விவரித்து எழுதுதல்; மாவட்ட நிர்வாக மையம், கிராம பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றுக்குக் கடிதம் எழுதிப் பழகுதல்.
அடிப்படைக் கைத்தொழிலில் தனி நபர் மற்றும் ஒட்டுமொத்த வகுப்பின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணப் பதிவேடு தயாரித்தல்.

வகுப்பு : 5

கணிதம்

சம்பளக் கணக்கு, நூற்ற பஞ்சு நூலின் அளவு, ஆண்டு உற்பத்தி, செலவுகள் இவை தொடர்பான நடைமுறை கணக்குப் பயிற்சிகள்.
அடிப்படைக் கைத்தொழில் மற்றும் கூட்டுறவு அங்காடியின் வரவு செலவு தொடர்பான பதிவேடு நிர்வகித்தல்.

சமூகவியல்

அரேபியாவில் உடைகள் எப்படி உற்பத்தி செய்யப்பட்டன; இறைத்தூதரின் எளிய உடை எப்படியாக இருந்தது?
இந்திய-இஸ்லாமிய உடைகள்; துணி உற்பத்தி, தயாரிப்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள்; நெசவு, சாயம் ஏற்றுதல், ஆடை அலங்காரங்கள், உருவங்கள் அச்சிடுதல்; தரை விரிப்பு தயாரித்தல். பிரதான துணி விற்பனை மையங்கள். தட்பவெப்பநிலை, பூகோள அமைப்புகள் பருத்தி உற்பத்தி மற்றும் உடை தயரிப்பில் ஆற்றும் பங்களிப்பு; அரசின் சலுகைகள், ஆதரவுகள். தரை வழி மற்றும் கடல் வழியிலான ஆடை வணிகப் பாதைகள். மேற்குலகில் செழிக்கும் ஆடை வணிகம். தனியார் மற்றும் அரசு நெசவு ஆலைகள்.
பருத்தி, கம்பளி உற்பத்தி தொடர்பாக உலகின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படுபவை.
காதி உடை உற்பத்தி மற்றும் விற்பனைக்கான கூட்டுறவு மையங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள். மாவட்டத்தில் காதி உடைகள் உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்புகள். இன்றைய இந்தியாவில் காதி துணிகளின் அவசியம்.

பொது அறிவியல்

பருத்தி செடி வளர்ப்பு தொடர்பான பயிற்சிகள்.

ஓவியம்

சமூகவியல் பாடங்கள், பொது அறிவியல் பாடங்கள் தொடர்பான நிகழ்வுகளை ஓவியமாக வரைந்து பழகலாம்.
பருத்தி இலை, பருத்தி காய் போன்றவற்றின் ஓவியங்களை பென்சில், பேனா, வண்ணம் கொண்டு வரைந்து பழகலாம்.

தாய்மொழி மற்றும் ஹிந்துஸ்தானி மொழி

இந்த மொழிகள் தொடர்பான பாடங்கள், துணைப்பாடங்கள் உருவாக்கித் தரவேண்டும்.
காதி உற்பத்தி, விற்பனை, கூட்டுறவு மையங்கள் அமைப்பதன் சாத்தியக்கூறுகள் தொடர்பாக பல்வேறு அரசு அமைப்புகளுக்கு கடிதங்கள் எழுதுதல்.
கைத்தொழில் தொடர்பான ஆவணப் பதிவேடு பராமரித்தல்.
கைத் தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகள், செயல்பாடுகள் தொடர்பான ஹிந்துஸ்தானி பெயர்கள், வாக்கியங்கள்.

வகுப்பு – 6

கணிதம்

லாப நஷ்டம் தொடர்பான கணக்குகளில் பயிற்சி பெற பள்ளியில் இருக்கும் மாதிரி கடைகளில் பணி புரிந்து கற்றுக் கொள்ளுதல்.
கைத்தொழிலில் ஏற்படும் இழப்பு விகிதங்கள்.
ராட்டை அளவுகள் மூலம் கணிதப் பாடங்களைக் கற்றுக் கொள்ளுதல். கன சதுரங்கள், கன செவ்வகங்கள், உருளை இவற்றின் கொள்ளளவு பரப்பளவு கணக்கிடுதல்.

சமூகவியல் 

மேற்குலகில் பருத்திக்கு இருக்கும் முக்கியத்துவம். இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பு பற்றிய முழு வரலாறு.
கம்பள விரிப்புகளுக்குத் தேவைப்படும் துணியின் விலை. உடைகள் தயாரிப்புக்கான விலை.
கிழக்கிந்திய வர்த்தக நிறுவனங்களின் வருகை; ஆரம்பகட்ட வர்த்தக சலுகைகள்; ஐரோப்பிய நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள்; கிழக்கு இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்திய வணிகர்கள்; இந்திய விவசாயிகள், கைத்தொழில் கலைஞர்கள், வணிகர்கள் ஆகியோர் ஏய்க்கப்பட்ட விதம்; தொழில் புரட்சி; இந்திய வர்த்தகத்துடனான போட்டி; இந்திய துணிகளுக்கு எதிராக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
இந்திய தேசிய விடுதலைப் போராட்டம்; சுதேசி இயக்கம்; காந்திஜியின் தலைமையில் சுதேசி இயக்கம். இந்திய விடுதலையின் சின்னமாக ராட்டை, காதி. காதியின் பொருளாதாரம்.
கிராமங்களில் இருக்கும் பெரியோருக்கான கைத்தொழில் பயிற்சி மையம்.
பல்வேறுவிதமான பருத்திவகைகள். அவை உலகில் எங்கெலாம் வளர்க்கப்படுகின்றன. பல்வேறுவிதமான பருத்திவகைகளின் மாதிரிகளைச் சேகரித்தல்; மண், ஈரப்பதம், வெப்பம் போன்றவை பருத்தி வளர்ச்சிக்கு உதவும் விதம். பூகோள அமைப்புகள் ஏற்படுத்தும் தாக்கம். இந்தி மற்றும் சர்வதேச நாடுகளில் பருத்தி ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தகவல்கள்.
துணி சந்தைகள், கச்சாப் பொருட்கள். அபிசினியா, மஞ்சூரியா, சீனா ஆகியவற்றைக் கைப்பற்றியதால் வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்கள்.

பொது அறிவியல்

நீரின் பெளதிகத் தன்மைகள். அதன் வேதியல் கூறுகள். நீர்ப்பாசனத்துக்கான எந்திரங்கள். பருத்தியின் பூகோளம் மற்றும் வகைகள். பருத்தி, பூச்சிகள், நல்ல கெட்ட புழுக்கள் பற்றிய பாடங்கள், பரிசோதனைகள்.

ஓவியம்

காதியின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் போஸ்டர்கள் தயாரிப்பு. கைத் தொழில் தொடர்பான ஓவியங்கள்.

தாய் மொழி மற்றும் இந்துஸ்தானி

பொது விஞ்ஞானம், சமூகவியல் பாடங்கள் தொடர்பாக சுவாரசியமான பாடங்கள், துணைப் பாடங்களைக் கொண்டு மொழிப் பயிற்சி தரலாம். கைத்தொழில் மற்றும் பிற செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து கட்டுரைகள் எழுதுதல், உரையாடுதல் போன்றவற்றுக்கான பயிற்சிகள் தரலாம்.

வகுப்பு – 7 

கணிதம்

வட்டி விகிதங்கள் மற்றும் வட்டி கணக்கிடுவது பற்றிய பயிற்சி. பள்ளிகளில் சேமிப்பு வங்கி நடத்தி இந்த வட்டி விகிதங்களை எளிதில் புரியவைக்கலாம்.
அடிப்படைக் கைத்தொழிலில் வேகம், கால அளவு, செய்து முடித்த வேலை சார்ந்து நிஜமான கணக்குகள் செய்து பார்க்கலாம்.
கைத்தொழிலிலும் பள்ளிப் பாடங்களிலும் மாணவர்கள் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை கிரஃப் போல் வரைந்து பார்க்கலாம். குறுக்குவெட்டு, நெடுக்குவெட்டு நூல் நூற்பு, நூல் சுருள் இவற்றின் தொடர்புகள்.

சமூகவியல்
நெசவுத் தொழிலில் தொழில் புரட்சியின் தாக்கம்.
நெசவுத் தொழிலில் எந்திர விஞ்ஞான மாற்றங்களினால் ஏற்பட்டிருக்கும் தாக்கம்.
பருத்தி விளைவிக்கும் இடங்கள், துணிகளின் சந்தைகள் அடிப்படையில் தொழில்மயமாக்கம் மற்றும் ஏகாதிபத்திய விரிவாக்கம்.
உலகப் போர்.
பருத்தி விளையும் இடங்கள், ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள். உலக அளவில் பருத்தி உற்பத்தி, இறக்குமதி ஏற்றுமதிகள்.
பருத்தி விளைவிக்கும் விதங்கள். தனிநபர் மற்றும் கூட்டுப்பண்ணை பயிராக்கம். குத்தகை முறைகள். எகிப்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பருத்தி உற்பத்தி. அடிமை முறை. உள்நாட்டுப் போர்.
இந்தியா மற்றும் பிற நாடுகளில் நெசவுத் தொழில் வரலாறு.

பொது அறிவியல்

சாயம் ஏற்றுதல், வெண்மையாக்குதல், துணிகளில் உருவங்கள் அச்சிடுதல். நூற்பு, நெசவு தொடர்பான புதிய எந்திரங்கள், புதிய வழிமுறைகள்.

ஓவியம்

கைத்தொழில் வகுப்பில் உருவாக்கும் பொருட்களின் முழுமையான மற்றும் குறுக்கு வெட்டு ஓவியங்கள்.

தாய்மொழி மற்றும் ஹிந்துஸ்தானி

ஆறாம் வகுப்பில் கற்றுக் கொண்டவற்றின் தொடர்ச்சி.

(முற்றும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *