மெட்ராஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளெல்லாம் அதன் பொறியியல் திறமைக்குப் பெயர் பெற்றது. இன்று மெட்ராஸைச் சேர்ந்த பொறியாளர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.
இந்தியாவின் முதல் அணைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் மற்றும் நவீனத் தொழிற்சாலைகள் துணைக் கண்டத்தின் இந்தப் பகுதியில் மட்டுமே வந்ததற்கு மெட்ராஸின் பொறியியல் விழிப்புணர்வுதான் காரணமாக இருக்க வேண்டும்
அதற்கு முக்கியக் காரணம் நாட்டின் இந்தப் பகுதியில் 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வடிவில் பொறியியல் பயிற்சி நடைபெற்று வருகிறது என்பதுதான் என்று சரித்திரம் சொல்லும். எனினும் இவை அனைத்துக்கும் சில அனாதை குழந்தைகளுக்கு முதற்கண் நன்றியைச் சொல்ல வேண்டும்.
இவை அனைத்தும் கிழக்கிந்திய நிறுவனம் ஒரு சிக்கலில் சிக்கியபோது தொடங்கியது. மைசூருடனான போரில் பல பிரிட்டிஷ் வீரர்கள் இறந்தனர். இன்னும் பலர் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமல், ஆசிய நோய்களால் இறந்தனர். அவர்களது குழந்தைகள் கீழ்ப்பாக்கத்திலுள்ள ஜார்ஜ் அனாதை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். அந்தப் பிரிட்டிஷ் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கிழக்கிந்திய நிறுவனம் கவலைப்பட்டது. இந்த இளம் சிறுவர்கள் எதிர்காலத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்குச் சில திறன்களைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்
அதே சமயம் கம்பெனியின் வர்த்தக நோக்கங்களிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முழு இந்திய துணைக்கண்டத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் மேலும் மேலும் நிலப்பரப்பைப் பெற்றது. நிறுவனம் மெதுவாக வர்த்தகத்திலிருந்து ஆட்சிசெய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்று எண்ணத் தொடங்கியபோது, புதிய பிரதேசத்தைக் கையகப்படுத்தியதன் மூலம், அதன் பிரதேசங்களில் வரைபடங்கள் மற்றும் பிற தகவல்களை வழங்குவதற்குப் பல ஆய்வாளர்கள் மற்றும் வரைபட வல்லுனர்களைப் பணியமர்த்தியது. அவர்கள் வரைபடங்களைத் தயாரிக்கத் தொடர்ந்தபோது, துல்லியமான அளவீடு இல்லாதது கவனிக்கப்பட்டது.
பிரிட்டிஷாருக்கு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தின் துல்லியமான அளவீடுகள் தேவைப்பட்டன. விஞ்ஞான ரீதியாக நிலத்தை அளந்த சர்வேயர்களுக்கான தேவை திடீரென அதிகரித்தது.
வரலாற்றின் தொடக்கத்திலிருந்து சமுதாய வளர்ச்சியில் நில கணக்கெடுப்பு ஒரு அங்கமாக இருந்து வருகிறது. கட்டுமானத்தின் பெரும்பாலான வடிவங்களின் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டிற்கு இது தேவைப்படுகிறது. இது கட்டடக்கலை போக்குவரத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆங்கிலேயர்கள் அதைச் சரியான அளவீடு மற்றும் நில உரிமைக்கான சட்ட எல்லைகளை வரையறுத்து, நில வருவாயைக் கூட்ட விரும்பினர்.
‘சர்வே எண்’ என்று அழைக்கப்படும் நில அளவீடு ஆதி காலம் போலல்லாமல் எல்லைக் குறியீடுகளுக்கு இடையே உள்ள தூரம் மற்றும் கோணங்களைத் தீர்மானித்துப் பின் அதை வைத்துக் கொண்டு நிலப்பரப்பை வரைபடத்தில் தீர்மானிக்கும் நுட்பம்.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டபோது, ராணுவத்தில் பணிபுரிய சர்வேயர்கள் தேவைப்பட்டனர். எனவே, மைக்கேல் டாப்பிங் என்ற பொறியாளர் அளித்த ஆலோசனையின் அடிப்படையில், சர்வே பள்ளி தொடங்க முடிவு செய்யப்பட்டு, 1794ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கல்லூரி தொடங்கப்பட்டது.
இறந்த பிரிட்டிஷ் வீரர்களின் அனாதைக் குழந்தைகள் 8 பேருடன் பயிற்சி அளிப்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஆங்கிலத்தில் பாடங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு இந்துஸ்தானியும் கற்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் ஆசைகள் குறித்த இந்த ஒரு முடிவிலிருந்து வரலாற்றாசிரியர்கள் நிறையக் கற்றுக்கொள்ள முடியும்.
ஆய்வுப் பள்ளிக்கு அதிர்ஷ்டம். அதை நடத்திய முதல் இரு தலைவர்களும் சிறந்த விஞ்ஞானிகள். மெட்ராஸில் பொறியியல் கல்வியின் தோற்றம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வகத்தில் இருந்து வந்தது.
மெட்ராஸ் ஒரு கப்பல் நகரமாக இருப்பதால் வானிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வெப்பநிலை மற்றும் மழைப் பதிவு, நகரத்தில் ஆரம்ப காலத்தில் நடந்தது.
மைக்கேல் டாப்பிங் அந்த வேலையைச் சிறப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கோல்டிங்காம் ஒரு கட்டடக் கலைஞராகவும், மிகச்சரியான வடிவியல் விருந்து மண்டபத்தை (இன்றைய ராஜாஜி ஹால்) கட்டியவர்.
சர்வே பள்ளி பெரிதாகவே கோட்டைக்குள் இடம் போதவில்லை. தற்செயலாக நவாபின் கடனை அடைக்க அவரது சேப்பாக்கம் அரண்மனை ஏலத்திற்கு வந்தது. அரசாங்கத்தால் மட்டுமே இவ்வளவு தொகையைச் செலுத்த முடிந்தது. ஆனால் அதை எடுத்துக் கொண்ட பிறகு, அரண்மனை மற்றும் அதன் பெரிய அறைகளை என்ன செய்வது என்று அவர்கள் யோசித்தனர். சர்வே பள்ளியை சிவில் எஞ்ஜினியரிங் கல்லூரியாக விரிவுபடுத்தும் திட்டமும் அந்த நேரத்தில் சரியாக வந்தது. கல்லூரி, கலாஸ் மஹாலுக்கு மாற்றப்பட்டது. பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
வட இந்தியாவில் ரூர்க்கியில் உள்ள பொறியியல் கல்லூரிக்குப் பிறகு நாட்டில் அமைக்கப்பட்ட இரண்டாவது பொறியியல் கல்லூரி இதுவாகும்
1800, திப்பு சுல்தானின் மீது கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே, கணக்கெடுப்பில் அனுபவம் பெற்ற வில்லியம் லாம்ப்டன் என்ற காலாட்படை வீரர், தொடர் முக்கோணங்கள் மூலம் துல்லியமாக இந்தியாவை அளவெடுக்கும் முயற்சியில் தீர்வு காண முன்மொழிந்தார்.
இந்தியாவின் பெரிய முக்கோணவியல் ஆய்வு 1802 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மெட்ராஸ் அருகே செயின்ட் தாமஸ் மவுண்ட் மேல் தொடங்கியது. தெற்கு முனையில் அவர் முதலில் பார்த்தது பெரும்பாக்கம் மலை.
மெட்ராஸில் பல சர்வேயர்கள் இருப்பதால் லாம்ப்டன் இவ்வளவு பெரிய ஹாப் செய்யத் தூண்டப்பட்டிருக்கலாம். கணக்கெடுப்பு இந்தியாவைத் துல்லியமாக அளவிடுவது மட்டுமல்லாமல், இயற்பியலில் பல விஷயங்களையும் கண்டுபிடித்தது. எடுத்துக்காட்டாக, இது பூமியின் கோளத்தில் வளைவின் அளவைத் தீர்மானிக்கிறது. உலகின் உயரமான மலையையும் தான்.
இந்தியாவின் சீன எல்லை வரை நடைபெற்ற இந்த ஆய்வில் சில நேரங்களில் கணக்கெடுப்பு குழுவில் 700 பேர் இருந்தனர். அவர்களில் பலர் இந்தச் சர்வே பள்ளியைச் சேர்ந்தவர்கள்.
அடையாறு ஆறு மற்றும் கிண்டி வனப்பகுதிக்கு இடையே சுமார் 223 ஏக்கர் நிலத்தைக் கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளடக்கியுள்ளது.
இந்தக் கல்லூரியைக் கட்டடக் கலைஞர் WA ஜேம்ஸ் இந்தோ சாராசெனிக் பாணி (முகலாய மற்றும் இந்து கட்டடக்கலையின் கலவை) அடிப்படையில் கட்டடத்தை உருவாக்கினார்.
இக்கல்லூரி உலகின் அறிவியல் வளர்ச்சிகளுடன் எப்போதும் தொடர்பில் உள்ளது. உலகப் போரின் போது மின்னணுவியல் முக்கியத்துவம் பெற்றபோது அதற்கென ஒரு துறை அறிமுகப்படுத்தப்பட்டது. கணினி யுகம் வந்தபோது, கல்லூரியின் மென்பொருள் கற்பித்தல் மிகவும் தீவிரமானது.
கணினி முதல் தோல் உற்பத்தி வரை, ரசாயனம் முதல் சிவில் எஞ்ஜினியரிங் வரை, விண்வெளி முதல் புவியியல் வரை, ஒவ்வொரு பாடமும் இங்குத் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, மாநிலத்தில் பள்ளித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
மாணவர்கள் சேர்வதற்குத் தமிழ்நாட்டின் மிகவும் விருப்பமான பொறியியல் கல்லூரியாக இது மாறியதில் ஆச்சரியமில்லை.
பல விஞ்ஞானிகள் மற்றும் தொழிலதிபர்கள் இங்குப் படித்துள்ளனர். அமுல் பால் பண்ணையை ஆரம்பித்த டாக்டர் வர்கீஸ் குரியன் இங்கு மெக்கானிக்கல் (ஆச்சரியப்படும் விதமாக) படித்தவர்.
1970இல் இந்தப் பொறியியல் கல்லூரியைத் தமிழகத்தின் அனைத்துப் பொறியியல் கல்வியின் மையப் புள்ளியாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு ‘அண்ணா பல்கலைக்கழகம் என அண்ணாதுரையின் பெயர் சூட்டப்பட்டது.
’ராயல் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் அதிகாரியான ஹென்ரி டேவிஸன் லவ், பொறியியல் கல்லூரியின் முதல்வராக 27 ஆண்டுகள் பணியாற்றியவர். தனது 27 ஆண்டுகாலப் பணியின் போது, அதன் பாடத்திட்டத்தைத் தொடர்ந்து மாற்றியமைப்பதன் மூலம் அவர் முக்கிய பங்களிப்புகளைச் செய்தார்.
1900களின் முற்பகுதியில் மதராஸ் அரசாங்கத்தால் லவ் பண்டைய பதிவுகளில் சிதறிக்கிடக்கும் நிலப்பரப்புக் குறிப்புகளைச் சேகரிக்க நியமிக்கப்பட்டார்.
தற்செயலாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை காப்பகத்தில், மதிப்புமிக்க மற்றும் இதுவரை வெளியிடப்படாத தகவல்களின் மிகுதியைக் கண்டறிந்தார்.
அவற்றைக் கொண்டு 1640-1800 மெட்ராஸ் வரலாற்றை வெளியிடுமாறு அவர் மெட்ராஸ் அரசாங்கங்கத்தை வற்புறுத்த, 1913இல் சுமார் 600 பக்கங்கள் கொண்ட மூன்று தொகுதிகளாகப் புத்தகம் வெளியிடப்பட்டது. ‘வெஸ்டீஜஸ் ஆஃப் ஓல்ட் மெட்ராஸ்’ சரித்திர ஆய்வாளர்களுக்கு ஒரு புது மெட்ராஸைக் காட்டியது என்று தான் சொல்லவேண்டும்.
0