நிகோலா டெஸ்லா பிறந்தபோது இடியுடன் கூடிய புயல் சுழற்றியடித்துக்கொண்டிருந்ததாம். சகுனம் சரியில்லை, இந்தக் குழந்தையை இருள் வந்து தீண்டப்போகிறது என்று பிரசவம் பார்த்த செவிலியர் வருந்தினாராம். அதைக் கேட்டதும் அம்மா சொல்லியிருக்கிறார். இல்லை, இந்தக் குழந்தை ஒளியோடு இருக்கப்போகிறது.
இன்று டெஸ்லா என்றதும் உடனடியாக நம் நினைவுக்கு வரும் சொல், ஒளி. நிகோலா டெஸ்லா 10 ஜூலை 1856 அன்று ஆஸ்திரியாவில் பிறந்தார். ஐரோப்பாவின் இயற்கை அழகுமிக்க, கனிம வளம் கொழிக்கும் நாடுகளில் ஒன்று ஆஸ்திரியா. இரு உலகப் போர்களும் நடைபெறுவதற்கு முன்பே ஐரோப்பாவில் ரத்த வெறிகொண்ட போர்கள் நடந்திருக்கின்றன.
எடுத்துக்காட்டுக்கு, 19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரான்ஸுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் அணிதிரண்டு பலமுறை போரிட்டிருக்கின்றன. ஆறாவது முறையாக நடைபெற்ற போரில்தான் (மார்ச் 1813 முதல் மே 1814 வரை) கூட்டணி நாடுகளுக்கு வெற்றி கிடைத்தது. ஆறாம் கூட்டுறவுப் போர் என்று இது அழைக்கப்படுகிறது.
வெற்றி பெற்ற கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது ஆஸ்திரியப் பேரரசு. மத்திய ஐரோப்பாவின் மூன்று முக்கிய நாடுகளில் ஒன்றாக, உலகைத் தன் சொல்லுக்கு ஆட்டுவிக்கும் தன்மை கொண்ட, ஒரு சூப்பர்பவராகவும் ஆஸ்திரியப் பேரரசு இருந்தது. ஆஸ்திரியாவை ஹாப்ஸ்பர்க் வம்சம் ஆண்டு வந்தது. சுற்றி இருந்த நிலப்பரப்புகளை வளைத்துப் பிடித்து தன் செல்வாக்கையும் சக்தியையும் அதிகரித்து வைத்திருந்தார்கள் ஹாப்ஸ்பர்க் வம்சத்தினர். ரஷ்யாவுக்கும் இங்கிலாந்துக்கும் அடுத்த மூன்றாவது பெரிய ராஜ்ஜியம் இவர்களுடையதுதான்.
ஆஸ்திரியாவிலுள்ள எல்லையோர, ராணுவப் பகுதியில் ‘ஸ்மில்ஜன்’ என்ற எழில் கொஞ்சும் கிராமம் அமைந்துள்ளது. மிலுட்டின் டெஸ்லா, ஜுகா மெண்டிச் (மெண்டிக் என்றும் சொல்லலாம்) தம்பதியினர் வாழ்ந்து வந்தது அங்கேதான். இருவரும் செர்பியாவைச் சேர்ந்தவர்கள்.
மிலுட்டின் டெஸ்லா துருக்கியில் இஸ்தான்புல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த தேவாலயக் கூட்டமைப்பிலுள்ள ஒரு தேவாலயத்தில் (கிழக்கு மரபுவழி திருச்சபை) பாதிரியாராக இருந்தார். முன்னதாக, அவர் ஒரு ராணுவ வீரர்.
டேன், மில்கா என்கிற மிகா மற்றும் ஏஞ்சலினா ஆகிய மூன்று குழந்தைகளுடன் டெஸ்லா தம்பதியர் வாழ்ந்து வந்தனர். சற்றே பெரிய குடும்பத்தைக் கொண்டிருந்தாலும், மிலுட்டினும் ஜுகாவும் துடிப்புடனும் கடின உழைப்புடனும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நான்காம் குழந்தை பிறந்தது. அவர்களுக்கும் அவர்கள் நாட்டுக்கும், ஏன் உலகுக்குமேகூடப் பின்னாள்களில் பெருமை சேர்க்கப்போகும் அந்தக் குழந்தை, நிகோலா டெஸ்லா. அவருக்குப் பிறகு 1861ஆம் ஆண்டு பிறந்த கடைக்குட்டிப் பெண் மார்சியா எனும் மரிக்கா.
0
19ஆம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்த டெஸ்லாவை இன்று நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? அவரைப் பற்றி ஏன் படிக்கவேண்டும்? இன்று அவர் நமக்கு தேவைப்படுவாரா? ஆம் எனில் எவ்வாறு?
ஒரே சொல்லில் அடக்குவதென்றால் டெஸ்லாவை ஒரு கடவுள் என்று அழைக்கலாம். இதன் பொருள் அவர் மாய, மந்திர சக்திகள் கொண்டவர் என்பதல்ல. எண்ணற்ற மாயங்களையும் மந்திரங்களையும் நிகழ்த்த வல்ல கற்பனைத் திறனை அவர் கொண்டிருந்தார். தன் கற்பனையைக் கொண்டு அவர் உருவாக்கிய உலகங்கள் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியவை. தன் கற்பனையைக் கொண்டு அவர் வளர்த்த கனவுகள் இன்றும் நம்மை அதிசயிக்க வைப்பவை. அதனாலேயே அவரைப் பண்டைய கிரேக்க ஒலிம்பியக் கடவுள்களின் வரிசையில் நிறுத்திப் பார்ப்பவர்களும் உண்டு.
இதுவரையிலான மனிதகுல வளர்ச்சியின் வரலாற்றைப் புரட்டினால் ஒவ்வொரு காலகட்டத்திலும் திகைப்பூட்டும் அறிவோடு சிலர் தோன்றி, தங்கள் கனவுகளால், செயல்களால், சாதனைகளால் தாங்கள் வாழும் காலத்தின்மீது ஒளியைப் பாய்ச்சுவதைப் பார்க்கலாம். எதிர்காலத்தை முன்னறிவிப்பவர்களாகவும் எதிர்காலத்தை நோக்கி நம்மையெல்லாம் கைப்பிடித்து அழைத்துச் செல்பவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.
இங்கே விவேகானந்தர் ஓர் அமைதிப் புரட்சியை ஏற்படுத்திய அதே காலகட்டத்தில்தான் நிகோலா டெஸ்லா என்ற அறிவியல் மகா ஞானி, தன் கண்டுபிடிப்புகள் மற்றும் தயாரிப்புகள்மூலம் இவ்வுலகையே ஒரு கலக்கு கலக்கி ஆட்டுவித்துக்கொண்டிருந்தார். மனித முன்னேற்றத்தின் இருள் மண்டிய பாதையைப் பிரகாசமாக்கிய அற்புதமான மனிதர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார் டெஸ்லா.
டெஸ்லா ஒரு முழு நவீன யுகத்தையே உருவாக்கினார் என்று சொல்லலாம். சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகப் பெரும் மேதைகளில் ஒருவராக அவர் இருந்தார். இறக்கும்போது அவரிடம் பணமில்லை. தன்னுடைய கண்டுபிடிப்புகளிலிருந்து பெறக்கூடிய செல்வத்தை அவர் நிராகரித்தார்.
இன்று அவரே நம் செல்வமாகவும் மாறியிருக்கிறார். தன் கண்டுபிடிப்புகளின் வழியாக, தன் அறிவொளியின் வழியாக டெஸ்லா இன்னமும் நம்மோடு வாழ்ந்து வருகிறார்.
நிகோலா டெஸ்லா, மின்சாரத்தைத் தன் அடிமையாக்கியவர். மின்சாரம் கிட்டத்தட்ட ஒரு அமானுஷ்ய சக்தியாகக் கருதப்பட்டு, பயங்கரமான பிரமிப்புடனும் மரியாதையுடனும் பார்க்கப்பட்டு வந்த நேரத்தில், டெஸ்லா அதன் மர்மங்களுக்குள் ஆழமாக ஊடுருவிச் சென்றார்.
டெஸ்லா ஒரு கண்டுபிடிப்பாளராக இருந்தார் என்பதைவிட, புதிய சாதனங்களின் தயாரிப்பாளராக இருந்தார் என்று சொல்லலாம். தன் தயாரிப்புகள்மூலம் அறிவியல் உலகை அவர் செழுமைப்படுத்தினார்.
அவர் பல புதிய அறிவியல் கொள்கைகளைக் கண்டுபிடித்தவர். புதுமைகளின் கதவுகளைத் தன் ஆராய்ச்சிகளின் மூலம் திறந்தவர். அவர் முன்னெடுத்த ஆய்வுகள்மீது இன்றைய உலகம் ஆர்வம் கொண்டிருக்கிறது.
மின் சக்தியில் ஒரு புதிய சகாப்தத்தை டெஸ்லா உருவாக்கினார். இன்றைய சக்தி உலகத்தை (Energy World) உருவாக்கியதில் அவரே முன்னோடி. உலகின் தொழில்துறை அமைப்புகள் உருவாவதற்கு அடித்தளமாகத் திகழும் இன்ஜின்களை, வெகுஜன உற்பத்தி முறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கிய புரட்சியாளர் அவர்.
மனித உழைப்பை மாற்றும் மின்சார இயந்திர மனிதர்களான ரோபோக்களின் இனத்தை டெஸ்லா உருவாக்கினார். அதாவது, ரோபோக்கள் போன்று வேலை செய்யும் வல்லமை வாய்ந்த மெஷின்களை உருவாக்கியவர் அவர். அந்த வகையில், தற்கால ரோபோட்டிக்ஸ் துறை, அவரது ஆராய்ச்சிகளில் இருந்து நிறைய பெற்றிருக்கிறது. வல்லரசு அமைப்புகள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில், அவரது ரோபோ மெஷின் கோட்பாடுகள் இன்றளவும் மிகப் பிரபலம்.
நவீன வானொலியின் அத்தியாவசியத்தை மக்களுக்கு உணர்த்தியவர் டெஸ்லா. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்துவதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே அவர் ‘ரேடார்’ சாதனத்தைக், கண்டுபிடித்துவிட்டார்.
நவீன நியான் மற்றும் வாயு-குழாய் விளக்குகளின் பிற வடிவங்களைக் கண்டுபித்தவர் டெஸ்லா. மருத்துவத்துறையில் பயன்படும் ‘ஸ்பெஷல் சர்ஜிக்கல் லைட்ஸ்‘ எனப்படும் விளக்கையும், நியான் ஒளிக்குமிழ் விளக்குகளையும் பல்வேறு மின்னணு மருத்துவ உபகரணங்களையும் கண்டுபிடித்து, அவற்றைத் தயாரித்து விற்கவும் முற்பட்டவர் அவர்.
தொழில்துறை மற்றும் மருத்துவ உலகால் ஒருபோதும் டெஸ்லாவை மறக்க இயலாது. மின்னணு அதிசயங்களை நிகழ்த்தும் உயர் அதிர்வெண் மின்னோட்டங்களை வழங்கியவர் அவர்தான். வயர்லெஸ் மூலம் இயங்கும் ரிமோட் கண்ட்ரோல் அவர் கொடுத்ததுதான்.
அவர் கண்டுபிடித்த அறிவியல் சக்திகளை மனித குல அழிவுக்காகத் தவறாகப் பயன்படுத்திய நிகழ்வுகளும் வரலாற்றில் உள்ளன. டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தியே, இரண்டாம் உலகப் போரில் பல நாடுகள் பேரழிவை ஏற்படுத்தின.
டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளும் பங்களிப்புகளும் மட்டுமல்ல அவர் வாழ்வுமேகூட அசாதாரணமானதுதான். விஞ்ஞானிகளோடும் பிற உலக நாடுகளோடும் அவர் பனிப்போர் நடத்தியிருக்கிறார். சக ஆளுமைகளோடு கருத்து முரண்பாடுகள் கொண்டிருக்கிறார். டெஸ்லாவைக் கொல்ல பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அவரது தாய் ஜுகா அபாரமான நினைவாற்றல் கொண்டவர். காண்பவற்றைப் புகைப்படம் போல் பிரதியெடுத்துக்கொள்ளும் ஆற்றல் அவருக்கு உண்டு. இதே ஆற்றலை மரபுவழி டெஸ்லாவும் பெற்றிருந்தார். அவர் நிகழ்த்திக் காட்டிய பல அற்புதங்களுக்கு அவர் நினைவாற்றல் மிகப் பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது. அவரிடம் ஒன்றைக் கூறிவிட்டால் அதை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார். பார்த்தது, படித்தது, கேட்டுத் தெரிந்துகொண்டது எதையும் அவரால் மறக்கமுடியாது.
நிறம், நேரம், உருவம், சுற்றுப்புறம் என ஒரு துணுக்கைக்கூட விடாமல் உள்ளபடியே நினைவில் வைத்துக்கொள்ளவும் தேவைப்படும்போதெல்லாம் நினைவிலிருந்து மீட்டெடுத்துப் பயன்படுத்திக்கொள்ளவும் அவரால் முடிந்தது.
அவருடைய வாழ்க்கை, அறிவியல், கனவுகள், பண்புகள் எல்லாவற்றிலும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நிகோலா டெஸ்லாவை வாசிக்கும்போது ஓர் அதிசயத்தின் கதையை வாசிக்கும் உணர்வே ஏற்படுகிறது.
(தொடரும்)
டெஸ்லா வின் கண்டுபிடிப்புகளை நினைத்து ஆச்சரியம் கொள்ள வைக்கிறது… தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவும் அவரது கண்டுபிடிப்புகள் தான் என்ற தகவல்
பெருமை மிக்கது.அவரை பற்றிய தகவல்கள் மேலும் அறிய ஆவல்…
Thanks a lot Loganathan Ji, for taking time to read and appreciate the work. இனிவரும் அத்தியாயங்களில், மேலும் பல ஆச்சரியம் கொள்ள வைக்கும் விடயங்களும் காத்திருக்கின்றன. நன்றி!
Super starting keep it up
Thank you very much Bharathi ji, for your encouraging comment. I am glad that you liked the series.
அருமையான தொடக்கம்.
அருமையான தொடக்கம். உங்களின் எழுத்தின் மூலமாக நிகோலா டெஸ்லா பற்றி தெரிந்துக்கொள்வதில் மகிழ்ச்சி.
Thanks a lot Suba Madam, for kind words.
அலைஞனில் டெஸ்லா டவர் பற்றி அறிந்த போது டெஸ்லா விஞ்ஞானியை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
தொடர்ந்து எழுதுங்கள் ராம்….
வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
Thanks a lot Kalavathi Madam, for your support and encouragement!
அருமையான தொடக்கம். தொடர்ந்து எழுதுங்கள் ராம்…
வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
நல்ல ஆரம்பம் வாழ்த்துக்கள்🌷🌷
Thanks a lot for your encouragement!
Super Starting. Ezhuthalarin ezhuthu nadai sirappaga ullathu.Thodarai Melum padikka Aaval.”
Thanks a lot Nandhini Madam, for your support and appreciation.
மிக அருமையான தொடக்கம். டெஸ்லா என்ற மாபெரும் விஞ்ஞானியைப் பற்றியும் அவர்களின் அரிய கண்டுபிடிப்புகளையும் உங்களுக்கே உரித்தான எழுத்து நடையில் அறிந்து கொள்கிறோம். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
Thanks a lot Charumathi Madam, for your support and appreciation. இனிவரும் அத்தியாயங்களும், பற்பல தகவல்களை, படிப்போருக்கு அள்ளி வழங்க வல்லன, என்று உறுதி கூறுகிறேன்.
அருமையான தொடக்கம். டெஸ்லாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்
Thanks a lot for your valuable review!
Very good start with impressive writing style and very informative too
Thank you Shyamala Ji, for your valuable comment. 😊🙏🏼
Super starting congrats 👏keep it up ram kumar sir
Thank you Mrs. Bharathi Venkatesh ji, for your kind and positive comment. I am happy that you liked my work.
அ௫மையான தொடக்கம். டெஸ்லா பற்றிய தகவல்கள் அறிய ஆவல் அதிகமாகிறது. 👌👌👌👌
Thank you very much Rathna Selvakumar Ji, for your positive review. I am glad that you liked the start of the series. 😊🙏🏼🌻