இதுவரை கற்றதைத் தொகுத்துப் பார்க்கும் ஒரு முயற்சியாகவே இந்தக் குறிப்பிட்ட அத்தியாயம் அமைந்திருக்கும். கொள்குறி வினாக்கள் அடிப்படையில் 25 கேள்விகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன, முதலில் அவை கேட்கப்பட்டு அத்தியாயத்தின் இறுதியில் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கும்.
வெளியீட்டைக் கணித்தல், பிழையைக் கணித்தல் என்கிற அடிப்படையில் வினாக்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
ஏன் அப்படி?
ஒரு வரி தொடங்கி அதிகபட்சம் நான்கைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும் வகையில் நிரல் எழுதப்பட்டு இருக்கிறது. கற்றதை வைத்து நிரலைப் புரிந்துகொண்டு விடையைக் கண்டறிதல் என்னும் சுழற்சியே இவ்வினாக்களின் அடிப்படை. கூடுதலாக நேர்காணல்களில் அதிகம் இடம்பெற வாய்ப்பிருக்கும் வினாக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது.
‘அப்போ நேரடியா அந்த பதினாலாவது கேள்விய கேட்டீங்கன்னா, ஒரு கோடிய வாங்கிக்கிட்டு இப்படியே போயிட்றேன்’ என்ற யுக்தியை எல்லாம் இங்கே பயன்படுத்தாமல், பேனா பேப்பர் எடுத்து சின்சியராக இவ்வினாக்களை எதிர்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
ஆல் தி பெஸ்ட். தாங்கள் பெற்ற மதிப்பெண்களை 9789855667 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் ராஜரகசியம் காக்கப்படும்.
0
உங்களில் யார் அடுத்த நிரலாளர்?
அனுமதிக்கப்பட்ட நேரம்: 40 நிமிடங்கள்
கேள்வி 1: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
print(“Hello, world!”)
a) Hello, world!
b) Hello
c) world!
d) SyntaxError
கேள்வி 2: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
print(2 + 3 * 4)
a) 14
b) 20
c) 10
d) 9
கேள்வி 3: பின்வரும் நிரலில் உள்ள பிழையைக் கணிக்கவும்
x = 5
print(“The value of x is ” + str(x))
a) The value of x is 5
b) The value of x is 10
c) The value of x is “5”
d) TypeError
கேள்வி 4: பின்வரும் நிரலில் உள்ள பிழையைக் கணிக்கவும்
print(“Hello, world!”)
a) SyntaxError
b) ValueError
c) TypeError
d) None of these
கேள்வி 5: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = 10
y = 3
print(x // y)
a) 3
b) 3.0
c) 3.3333333333333335
d) 3.33
கேள்வி 6: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = 7
y = 2
print(x % y)
a) 3.5
b) 2
c) 1
d) 0.5
கேள்வி 7: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
print(“Hello” * 3)
a) Hello
b) HelloHelloHello
c) 3
d) Hello3
கேள்வி 8: பின்வரும் நிரலில் உள்ள பிழையைக் கணிக்கவும்
print(“Hello, world!”)
a) SyntaxError: missing parentheses
b) SyntaxError: missing quotation mark
c) SyntaxError: unexpected EOF while parsing
d) SyntaxError: invalid syntax
கேள்வி 9: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
for i in range(5):
if i == 3:
continue
print(i)
a) 0 1 2 4
b) 0 1 2 3 4
c) 0 1 2 3
d) 1 2 3 4
கேள்வி 10: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
i = 0
while i < 5:
print(i)
i += 1
if i == 3:
break
a) 0 1 2
b) 0 1 2 3 4
c) 0 1 2 3
d) 1 2
கேள்வி 11: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
print(10 / 2)
a) 5
b) 5.0
c) 2
d) 2.0
கேள்வி 12: பின்வரும் நிரலில் உள்ள பிழையைக் கணிக்கவும்
print(“The answer is: ” + 42)
a) TypeError: can only concatenate str (not “int”) to str
b) SyntaxError: invalid syntax
c) TypeError: unsupported operand type(s) for +: ‘str’ and ‘int’
d) ValueError: invalid literal for int() with base 10
கேள்வி 13: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = “5”
y = 2
print(x * y)
a) 52
b) 10
c) 55
d) TypeError
கேள்வி 14: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = 10
y = 3
print(x % y)
a) 1
b) 3
c) 0.3333333333333333
d) 3.33
கேள்வி 15: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = “Hello”
y = “World”
print(x + y)
a) Hello
b) World
c) HelloWorld
d) Hello World
கேள்வி 16: பின்வரும் நிரலில் உள்ள பிழையைக் கணிக்கவும்
print(“Hello” – “o”)
a) Hell
b) o
c) H
d) TypeError
கேள்வி 17: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = 7
y = 3
print(x / y)
a) 2.3333333333333335
b) 2.33
c) 2
d) 2.0
கேள்வி 18: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
for i in range(1, 6):
if i == 3:
continue
print(i)
a) 1 2 4 5
b) 1 2 3 4 5
c) 1 2 3
d) 2 4
கேள்வி 19: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
i = 0
while i < 5:
print(i)
i += 1
if i == 3:
continue
a) 0 1 2 3 4
b) 1 2 3 4 5
c) 0 1 2
d) 0 1 2 3
கேள்வி 20: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = 5
if x > 10:
print(“x is greater than 10”)
elif x > 5:
print(“x is greater than 5”)
else:
print(“x is 5 or less”)
a) x is greater than 10
b) x is greater than 5
c) x is 5 or less
d) No output
கேள்வி 21: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = 5
y = 10
if x > 5 and y > 5:
print(“Both x and y are greater than 5”)
else:
print(“Either x or y is not greater than 5”)
a) Both x and y are greater than 5
b) Either x or y is not greater than 5
c) No output
d) SyntaxError
கேள்வி 22: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = 5
y = 10
if x > 5 or y > 5:
print(“Either x or y is greater than 5”)
else:
print(“Both x and y are not greater than 5”)
a) Either x or y is greater than 5
b) Both x and y are not greater than 5
c) No output
d) SyntaxError
கேள்வி 23: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = 10
if x % 2 == 0:
print(“x is even”)
elif x % 3 == 0:
print(“x is divisible by 3”)
else:
print(“x is neither even nor divisible by 3”)
a) x is even
b) x is divisible by 3
c) x is neither even nor divisible by 3
d) No output
கேள்வி 24: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = 5
y = 10
if x > 2:
if y > 5:
print(“A”)
else:
print(“B”)
else:
print(“C”)
a) A
b) B
c) C
d) None of the above
கேள்வி 25: பின்வரும் நிரலின் வெளியீட்டைக் கணிக்கவும்
x = 5
while x > 0:
print(x)
a) 5
b) 5 4 3 2 1
c) No output
d) Endless loop
000
விடைகள்: 1)a 2)a 3)a 4)d 5)a 6)c 7)b 8)a 9)a 10)a 11)b 12)a 13)c 14)a 15)c 16)d 17)a 18)a 19)a 20)c 21)b 22)a 23)a 24)a 25)d
இக்கேள்விகளின் மூலம் பைத்தான் கற்றலில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்று பிரித்தறிய முடிந்தால், அது உங்களுக்கும் இந்த அத்தியாயத்திற்குமான வெற்றி.
அடுத்த வாரம், புதிய ஒரு எட்டு வைக்க இருக்கிறோம்.
(தொடரும்)