Skip to content
Home » Archives for டி.ஜி. பிரசன்னா

டி.ஜி. பிரசன்னா

திருச்சியில் பிறந்து சென்னையில் வளர்ந்த டி.ஜி. பிரசன்னா, வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பொறியியலும், பி.ஐ.எம் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி-பாதுகாப்புத் துறைகளில் முன்னணி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். தொழில்நுட்பம், மேலாண்மை சார்ந்து பல தேசிய அளவிலான விருதுகளை வென்றுள்ளார். புவிசார் அரசியலை மையப்படுத்திய 'தி டெட்லி டெஸன்ட்' (The Deadly Descent) என்ற ஆங்கில உளவு நாவலையும், 'இருளின் நிழலில்' என்ற தமிழ் குறுநாவலையும் எழுதியுள்ளார். சர்வதேச அரசியல், வரலாறு மற்றும் பொருளாதாரக் கூறுகளை ஆழமாக ஆராய்வதில் ஈடுபாடு கொண்டவர்.

பனிப்போர் #1 – வெற்றியின் மரபு

1945 வசந்த காலம். ஐரோப்பியக் கண்டம் முழுக்க மரணமும் அழிவும் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. முப்பதாண்டுப் போருக்குப் பிறகு அப்படி ஒரு கோரத்தை உலகம் பார்த்ததே இல்லை. ஹாம்பர்க்… Read More »பனிப்போர் #1 – வெற்றியின் மரபு