கல்விக்கான அடிப்படைத் தொழிலாக விவசாயம் (தொடர்ச்சி)
ஐந்தாம் வகுப்பு
செய்முறைப் பயிற்சி வகுப்புகள்
- களை பறித்தல்
- மரக் கலப்பை, இரும்புக் கலப்பை. அவற்றின் பயன்பாட்டை வயலில் உழும்போது அருகில் இருந்து கவனித்தல்.
- அறுவடை முடிந்த பயிர்களின் வேர் முடிச்சுகளை அகற்றுதல், உழவு, களை நீக்கம் ஆகியவற்றுக்கு கருவிகளைப் பயன்படுத்துதல்
இவற்றுக்கு பல்வேறு வழிகள், கருவிகள் பயன்படுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்ளுதல். - காய்கறிகள் பயிரிடுதல். குளிர்கால காய்கள் நீங்கலாக காலி ஃப்ளவர், முட்டைகோஸ், நூக்கல், பச்சடி கீரை, ஃப்ரெஞ்ச் பீன்ஸ், தக்காளி, பட்டாணி போன்ற குளிர் கால காய்களைப் பாத்திகளில் வளர்த்தல்
- பருத்தி, சணல், உளுந்து போன்ற பயிர்களின் வேர்களை ஆராய்ந்து தெரிந்துகொள்ளுதல்.
- முள்ளங்கி, கேரட் ஆகியவற்றின் வேர் பாகங்களை நடுதல், இஞ்சி, உருளைக் கிழங்கின் தண்டுகளை நடுதல்.
- பல்வேறு விதமான இலைகளைச் சேகரித்து அவற்றின் வடிவமைப்பு, நரம்பு அமைப்பு ஆகியவற்றை ஆராய்தல்.
- தோட்டங்களில் பூக்கள் மலர்வதைப் பார்த்தல், மலரும் நேரத்தைக் குறித்துக்கொள்ளுதல்
- தோட்டத்தில் இருந்து கிடைக்கும் காய்கறிக் கழிவுகள், களைகள் ஆகியவற்றைக் கொண்டு உரம் தயாரித்தல்
- தோட்டப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய மண் சட்டிகளில் உரமிடுதல், களையெடுத்தல், மூடாக்கு போடுதல் ஆகியவற்றைச் செய்து பார்த்தல்.
(அ) ஒரே பயிருக்கு பிற விஷயங்களில் ஒரே மாதிரியாகவும் உரம் போட்டு மற்றும் போடாமல் விளைவுகளை ஆய்வு செய்தல்.
(ஆ) களை எடுக்கப்பட்ட பாத்தி, களை எடுக்காமல் விடப்படும் பாத்தி இவற்றில் செடிகளின் வளர்ச்சி பற்றிய ஆய்வு
(இ) களை எடுத்து உழுத நிலத்துக்கும் களை மட்டும் எடுத்த நிலத்துக்கும் இடையிலான விளைச்சல் வித்தியாசம்
கோட்பாட்டு வகுப்பு
- களைகளின் வகைகள்
- களை எடுப்பதன் அவசியம். எப்போது, எப்படிக் களையெடுக்க வேண்டும்?
- களைகள் பயிர் வளர்ச்சியைப் பாதிக்கும் விதம்.
(அ) பல்லாண்டுப் பயிர்களுக்கான ஆழமான, தீவிரமான களையெடுப்பு
(ஆ) ஓராண்டுப் பயிர்களுக்கு லகுவான களையெடுப்பு - மழை பெய்து முடித்ததும் மூடாக்கு போடுதல்
(அ) குளிர் காலப் பயிர்களுக்கு ஈரப்பதத்தைத் தக்கவைத்தல், நீரை மண் உறிஞ்சிக் கொள்ள வைத்தல்
(ஆ) களைகள் - நாட்டு மரக் கலப்பை, இரும்பு கலப்பை ஒப்பீடு
(அ) உருவாக்குதல்
(ஆ) செயல்பாடு
(இ) இரண்டின் சாதக பாதகங்கள் - கூர் நுனிக் கலப்பைக்கும் வட்ட வடிவ கலப்பைக்கும் இடையிலான வித்தியாசம். மழை விட்ட பின் இரண்டையும் குளிர் காலப் பயிர்களுக்குப் பயன்படுத்தும் விதம், அவற்றின் விளைவுகள்
- வேர்கள் உருவாகும் விதம், ஆணிவேர், சல்லி வேர் வகைகள்.
- வேர்கள், தண்டுகளை மாற்றியமைத்தல்
முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் ஆகியவற்றின் வேர்கள், - உருளைக்கிழங்கு, இஞ்சி ஆகியவற்றின் தண்டு இவற்றின் பண்புகள், செயல்பாடுகள், வித்தியாசங்கள்.
- ஆல மர விழுதுகள், சணல், கோதுமை, படர் கொடிகள் ஆகியவற்றின் வேர்கள்.
- மலர்களின் பாகங்கள், நிறம், மலரும் நேரம் இவற்றின் அடிப்படையில் மலர்களைப் பற்றிய பாடங்கள்.
- உரங்கள் தயாரிப்பு. கோமியம், கோ மூத்திரம் பயன்படுத்தி தயரிக்கப்படும் உரங்கள்.
குறிப்பு: வயல்கள், பாத்திகளில் மாணவர்கள் இறங்கி வேலை செய்து படிக்கவேண்டும்.
ஆறாம் வகுப்பு
செய்முறைப் பயிற்சி
- கலப்பையில் எருதுகளைப் பூட்டி நேராக உழுதல்
- சரியான பருவத்தில் சரியான பயிர்களை வளர்த்தல். நிலத்தை சீர்திருத்துவது தொடங்கி தானியங்களைச் சுத்தம் செய்தல் வரை அனைத்தையும் செய்து பார்த்தல். உள்ளூர் கோடைக்கால, குளிர்காலப் பயிர்களைப் பயிரிடுதல்.
- வயல் மற்றும் தோட்டப் பயிர்கள் வளர்க்க அனைத்து பணிகளையும் செய்தல். மண்ணை இளக்குதல், உழுதல், விதைக் கலப்பை பயன்படுத்துதல்.
- மிளகாய், கரும்பு உருளைக் கிழங்கு, இஞ்சி, மஞ்சள், பட்டாணி போன்ற தோட்டப் பயிர்களை வளர்த்தல்
- சாணக் கிடங்குகள், கோ மூத்திரம் சேகரித்தல்.
- பசுமை – இயற்கை உரம் தயாரித்தல்
- சாணம், கோ மூத்திரம் கொண்டு உரமிடுதல்
- தோட்டப் பயிர்களுக்கு இயற்கை உரமிடுதல்
- திரவ உரங்கள் பயன்படுத்துதல்
- பயிர் சுழற்சி விளக்கப் பயிற்சி.
- மலர்களைப் பறித்து சேகரித்தல், வகைப்படுத்தல். எந்தெந்தப் பூச்சிகள் மலர்களை மொய்க்கின்றன. அவற்றின் மூலம் நடக்கும் மகரந்தச் சேர்க்கையைக் கவனித்தல்
- தோட்டப் பயிர்கள்.
(அ) கொய்யா நடுதல்
(ஆ) ஆரஞ்சு பழச் செடி நடுதல்
(இ) மாம்பழம் பயிரிடுதல் - பல நிலைகளில் பயிர் நடவு.
(அ) நிலத்தைப் பண்படுத்துதல்
(ஆ) குழிகள் தோண்டுதல்
(இ) உரமிட்டு, குழிகளை மூடுதல்
(ஈ) பயிர்களை நடுதல்
(உ) பயிர்களின் அளவுக்கு ஏற்ப இடம் விட்டு நடுதல்
(ஊ) நீர்ப் பாசனம் - தோட்டங்களில் உள்ள பாத்திகளில் பல்வேறு பரிசோதனைகள் செய்து பார்க்கவேண்டும்.
(அ) பயிர் சுழற்சி
(ஆ) ஊடு பயிர்
(இ) உழுது பயிரிடுதல், உழவு இன்றிப் பயிரிடுதல். மழைக்காலத்தில் நிலத்தில், பயிரில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்த்து கவனித்தல். செடிகள் நீரை உறிஞ்சுதல், மண் நீரை உறிஞ்சித் தக்கவைத்தல். மழை பெய்ததும் மண்ணைக் கிளறி விடுவதன் பலன். மூடாக்கு போட்டு ஈரப்பதத்தைத் தக்கவைத்தல்.
(ஈ) மேலடுக்கு மண், கீழடுக்கு மண் பயன்படுத்தி சிறு சட்டிகளில் பயிர் வளர்த்தல்
கோட்பாட்டு வகுப்பு
- விதை பாதுகாப்பு, சேகரம்
- நல்ல விதைகளைத் தேர்ந்தெடுத்தல்
(அ) முளைவிடுதல்
(ஆ) பயிராக வளரும் சதவிகிதம் - விதைகளின் அளவுக்கு ஏற்ப பாத்திகள் அமைத்தல்
(அ) மெல்லிய விதைகளுக்கு நுண் மணல் பாத்தி
(ஆ) பெரிய விதைகளுக்கு மணற்பாங்கான பாத்தி - நீர்ப்பாசன முறைகள்
(அ) நிலத்தைப் பண்படுத்துதல்
(ஆ) வெள்ள நீர்ப் பாசனம்
(இ) மண்ணின் தன்மை மற்றும் கால நிலைக்கு ஏற்ப பின்பற்றவேண்டிய நீர்ப்பாசன வழிகள் - மண்
மேலடுக்கு, கீழடுக்கு மண் ஒப்பீடு
(அ) மேலடுக்கின் கனம், கீழடுக்கு ஆரம்பிக்கும் ஆழம்
(ஆ) மண் தொடுவதற்கு எப்படி இருக்கிறது, துகள் , நிறம்
(இ) பசைத் தன்மை, ஈரப்பதம்
(ஈ) மண்ணில் இருக்கும் கனிம சத்து
(உ) மேலடுக்கு மற்றும் கீழடுக்கு மண்ணின் பயிர் வளம்
(ஊ) கீழடுக்கு மண்ணை மேலே கொண்டுவந்துவிடாமல் உழுதல் - உழுதலின் அவசியம்
(அ) களைகளை அகற்றுதல், பூச்சிகளை அகற்றுதல்
(ஆ) வயல்களைப் பண்படுத்துதல்
(இ) மண்ணைக் கிளறிவிடுதல்
(ஈ) தாவரங்களுக்கான உரம்/ஊட்டச் சத்து தயாரித்தல்
(உ) உழுத மற்றும் உழாத நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் சக்திகள்
(ஊ) குளிர்காலப் பயிர்களின் மீதான தாக்கம்
(எ) பருவ கால உழவு மற்றும் மழைகளுக்கு இடையே தொடர்ச்சியான உழவு - பண்ணைப் பயிர்கள்
(அ) விதை நடும் காலம் மற்றும் வழிமுறைகள்
(ஆ) ஒரு ஏக்கருக்கு எவ்வளவு விதை தேவை?
(இ) ஒவ்வொரு நிரைக்கும் இடையிலான இடைவெளி’
(ஈ) பயிர் வளரும் காலத்தில் செய்யும் பல்வேறு பணிகள். ஏன்? எப்படி?
(உ) அறுவடைக்காலம்
(ஊ) ஏக்கருக்கு விளைச்சல் - கலப்பைகளின் பல வகைகள்
(அ) அவற்றில் பல்வேறு பாகங்கள் மற்றும் செயல்பாடுகள்
(ஆ) வட்ட வடிவ தட்டு போன்ற கலப்பை, கூர் நுனிக் கலப்பை செயல்பாடுகளில் உள்ள வித்தியாசம்
(இ) எப்போது தட்டு வடிவ கலப்பையைப் பயன்படுத்தவேண்டும். மண் கட்டிகளை உடைத்தல், களைகள் மண்டிய நிலத்தில் கலப்பை நன்கு செயல்பட வழி வகுத்தல். - உழுத பின்னர் மண் கட்டிகளை உடைத்து விதை ஊன்றத் தோதாக நிலத்தை சமப்படுத்தும் கருவியின் செயல்பாடு
- பயிர் பரவல். ஆரஞ்சு, மாம்பழம், கொய்யா என வெவ்வேறு வழிகளில் நடப்படும் பயிர்கள்
- கனிவகைகள் பயிரிடுதல்
(அ) ஆரஞ்சு பழம்
(ஆ) எலுமிச்சை
(இ) கொய்யா
(ஈ) பிற பழங்கள் - பயிர்ச்சுழற்சி
(அ) அதன் அவசியம்
(ஆ) பயன்
(இ) நில வளம் மற்றும் பயிர் விளைச்சலில் அதன் பங்கு
(ஈ) எப்படி நடுவது? - கரும்பு பயிர் பற்றிய விரிவான பாடம்
- உரங்கள் மற்றும் வகைகள்
(அ) சாம்பல் உரம் தயாரிக்கும் விதம்
(ஆ) நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் – உரங்களின் முக்கிய அம்சங்கள்
(இ) ஒவ்வொன்றும் பயிர் வளர்ச்சியில் வகிக்கும் பங்கு
(ஈ) திடமான, வீரியமான உரங்கள்
(உ) பசுமை உரமாக எவற்றையெல்லாம் பயன்படுத்தலாம்? அதற்கான நேரம். - மண்ணின் வளத்தைத் தக்கவைக்கும் பிற வழிகள்: பயிர் சுழற்சி, ஊடுபயிர்
- வயல் மற்றும் தோட்ட பயிர்கள் பற்றிய விரிவான படிப்பு
- குதிர்கள், சேமிப்பு கிடங்குகள், வைக்கோல் போர்கள் போன்றவற்றை உரிய பயிற்சி பெற்று அமைத்தல்
- விவசாயக் கருவிகள் செய்வதற்குத் தேவையான தச்சு வேலைகள், இரும்பு பட்டறைப் பணிகள் கற்றுக்கொள்ளுதல்
வகுப்பு ஏழு
செய்முறைப் பயிற்சி
- அறுவடை செய்த பயிர்களைச் சூடடித்தல், சுத்தம் செய்தல், உமி நீக்குதல். பல்வேறு தானியங்களைச் சுத்தம் செய்யும் கருவிகளை உருவாக்கிப் பயன்படுத்துதல்
- பயிர்களில் வளரும் பூச்சிகள். பூச்சிக் கொல்லிகள், தெளிப்பான்கள் தயாரித்தல்.
- பூக்கள் பற்றி கூடுதல் ஆராய்ச்சி
- வயல்கள், தோட்டப் பயிர்கள், கனிவகைகள் பற்றி கூடுதல் படிப்பு
- வெல்லம் தயாரிப்பு
- பயிர்கள் உணவு தயாரிக்கும்போது ஆக்ஸிஜனை வெளிவிடுவது பற்றிய பரிசோதனை
- கரும்பு பிழியும் இயந்திரத்தைக் கழற்றி மாட்டி பயிற்சி பெறுதல்
- பல்வேறு கலப்பை வகைகளைக் கழற்றி மாட்டி பயிற்சி பெறுதல்
- விலங்கு வளர்ப்பு. விலங்குகளுக்குத் தூய்மையான பாதுகாப்பான வீடு/இருப்பிடம் அமைத்துத் தருதல்; போஷாக்கான உணவு தருதல், எளிய வேலைகள்.
- பால் பண்ணை. பால் கறப்பது, பால் பொருட்கள் தயாரித்தல். பால் கறக்கும் வழிமுறைகள். செய்முறைப் பயிற்சி.
- கால்நடைகளுக்கு வரும் நோய்கள்.
(அ) வெட்டுக் காயங்கள், கொப்பளங்கள், தோல் நோய்கள் போன்ற பொதுவான நோய்களுக்கான சிகிசைகள்
(ஆ) தொற்று நோய்கள். பாதிக்கப்படும் விலங்குகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு உடனே சிகிச்சை தர ஏற்பாடு செய்தல். - முடிந்தால் மாணவர்கள் பள்ளியில் ஒரு கூட்டுறவு கடை நடத்தலாம்.
- பண்ணைக் கணக்கு வழக்குகள் – பள்ளி பண்ணையின் அனைத்துவகையான கணக்கு வழக்குகளையும் மாணவர்களே நிர்வகிக்கவேண்டும். தனித்தனி பயிர் விளைச்சலில் வரும் லாப நஷ்டங்கள் மற்றும் ஒட்டு மொத்த பண்ணை வருமானம், செலவு ஆகியவற்றை முறையாகப் பதிவு செய்யவேண்டும்.
- தோட்டங்களில் பாத்திகள் அமைத்து பல்வேறு பயிர்களை வளர்த்து அவற்றைப் பற்றிய விவரங்களைத் தொடர்ந்து பதிவு செய்துகொள்ளவேண்டும்.
(அ) நெருக்கமான நடவு, முறையான இடைவெளி விட்டு நடவு
(ஆ) வெய்யில் படும் பாத்தி, நிழலான பாத்தி ஆகியவற்றில் வளர்ந்த செடிகள்
(இ) நெகிழ்வான மணல், மக்கிய இலை உரம் சேர்க்கப்பட்ட மணல் இரண்டின் நீர்ப்பிடிமான சக்தி. இறுகிய மண், உரம் சேர்க்கப்பட்ட மண் ஆகியவற்றின் நீர் பிடிக்கும் சக்தி.
(ஈ) பயிர் செய்யப்பட்டிருக்கும் நிலம் ஈரமாக அல்லது உலர்ந்து இருக்கும்போது தட்ப வெப்ப மாறுதல்களினால் அடையும் பாதிப்பு.
கோட்பாடுகள்
- (அ) விதை நடுதல்
(ஆ) அறுவடை எந்திரம்
(இ) தானியம் தூற்றுதல் - பூச்சிகள்
(அ) பூச்சிகளின் வகைகள்
(ஆ) பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை மற்றும் செயற்கை வழிகள்
(இ) தீமை மற்றும் நன்மை தரும் பூச்சிகள் - மலர்கள், கனிகள்
(அ) மலர்களின் ஆண், பெண் பாகங்கள்
(ஆ) மகரந்தச் சேர்க்கை நடக்கும் விதங்கள்
(இ) உலர், சதைப்பிடிப்பு மிகுந்தவை, வெடித்துப் பரவும் விதைகள், என பழங்களின் வகைகள்
(ஈ) விதை பரவலின் பல வகைகள் - இலைகளில் ஆக்ஸிஜன் உள்ளிழுக்கப்படுதல்
(அ) ஊட்டச் சத்து
(ஆ) பச்சை நிறம், சூரிய ஒளியின் தாக்கம்
(இ) தாவரங்களின் இலைகளில் இருந்து நீர் வெளியேறுதல் – இதை அதிகரிக்கச் செய்பவை, குறையச் செய்பவை - கருவிகள்
(அ) கரும்பு பிழியும் எந்திரம்
(ஆ) பயிர், தீவனம் வெட்டும் கருவி. இவை இயங்கும் விதம், உற்பத்திச் செலவு - பூச்சி, களை அகற்றுதல்
(அ) கன்ஸ் புல்- வேலி போல் வளர்த்தல்
(ஆ) நாகர்மோதா – சணல் தாவரம் வளர்த்தல்
(இ) வெப்பம் மிகுந்த காலத்தில் ஆழமாக உழவேண்டும். மழை பெய்தவுடன் நிலத்தை கிளறிவிடவேண்டும். - ஆழமாக உழுதல், மேலோட்டமாக உழுதல் மூலம் களைகள், பூச்சி, புழுக்களை அகற்றுதல். பருவ காலம், மண்ணின் தன்மைக்கு ஏற்ப இதைச் செய்ய்யவேண்டும். பல்வேறு வகையான உழவுக் கருவிகளை பயன்படுத்தும் விதம்.
- கால் நடை வளர்ப்பு. கால் நடை பெருக்கம், பராமரிப்பு. உயர் ரக காளைகள், பசுக்களைத் தேர்வு செய்தல். கலப்பு மற்றும் முறையான இனப்பெருக்கம்.
- கால்நடை நோய்கள்
(அ) நோய் வாய்ப்பட்ட விலங்கை ஆரோக்கியமான விலங்கிடமிருந்து பிரித்து அடையாளம் காணுதல்.
(ஆ) நோய்வாய்ப்பட்ட விலங்குகளைத் தனிமைப்படுத்துதல்
(இ) நோய்வாய்ப்பட்ட விலங்குக்கு சிகிச்சை. மருந்துகள், சத்தான உணவு தருதல். தொற்று நோய்களில் இருந்து மந்தையைப் பாதுகாத்தல். - வயல் மற்றும் தோட்டப் பயிர்கள் தொடர்பான கூடுதல் படிப்பு.
- கூட்டுறவு அமைப்புகள்
(அ) கிராமங்களில் கூட்டுறவின் கோட்பாடுகளை அறிமுகப்படுத்துதல்
(ஆ) அதன் நன்மைகள் - பண்ணைக் கணக்கு வழக்குகள்
(அ) மொத்த இருப்பு பதிவேடு
(ஆ) வரவு செலவு பதிவேடு
(இ) ஒவ்வொரு செலவுக்கான பட்டியல்
(ஈ) நாட்குறிப்பு
(உ) மாதாந்திர வாராந்திர வருகைப் பதிவேடு
(ஊ) லெட்ஜர் பொது விவரப் பதிவேடு - வருடாந்தர கணக்கேடு. வரவு செலவு கணக்கைப் பார்த்து லாபத்தை அதிகரிக்கும் வழிகளைத் தீர்மானித்தல்
குறிப்பு : மண் வகைகள், பயிராக்கம், உரங்கள், பயிர்கள் தொடர்பாக முந்தைய வகுப்புகளில் படித்தவற்றை மீள் நினைவு செய்துகொள்ளுதல். மாணவர்கள் ஆண்டு முழுவதும் தோட்டங்கள், வயல்கள், தோப்புகளில் தாங்கள் விளைவிக்கும் பயிர்களைத் தொடர்ந்து பராமரித்துவரவேண்டும்.
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.