தச்சு வேலையை அடிப்படையாகக் கொண்ட தொழில் வழிக் கல்வி முறை
இந்தப் படிப்பு இரண்டு பெரிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அ) அட்டைப் பலகை தொழில்கள் மூலமான கல்வி
ஆ) மரத்தொழில் மற்றும் உலோகத்தொழில் மூலமான கல்வி
1. ஒன்பது வயதுக்குக்குக் குறைவான குழந்தைகளால் மரம், உலோகம் அல்லது மர, உலோக வேலைக்குத் தேவையான கருவிகள் போன்ற கடினமான பொருட்களைக் கையாள முடியாது. எனவே அட்டைப் பலகை சார்ந்த தொழில்களையே முதல் இரண்டு வகுப்புகளுக்கு அடிப்படைக் கைத் தொழிலாக வைத்துக் கொள்ளவேண்டும்.
2. மரத் தச்சு வேலைகளை மூன்றாம் வகுப்பில் ஆரம்பிக்கவேண்டும். மர வேலைகளுடன் தொடர்புடைய உலோக வேலைகள் எல்லாம் ஐந்தாம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படவேண்டும்.
3. ஆறு, ஏழாம் வகுப்புகளில் மாணவர்கள் ஒன்று மர வேலை அல்லது உலோக வேலையை அவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
4. ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு மர வேலை மற்றும் உலோக வேலை என்ற இரண்டும் சேர்ந்தும்கூட விருப்பப் பாடமாக இருக்கலாம். அட்டைப் பலகை தொழில்கள் அடிப்படையிலான கல்வி ஆறு, ஏழாம் வகுப்புகளில் முதல் மூன்று மாதங்களுக்கு விருப்பப் பாடமாக இருக்கலாம்.
5. அட்டைப் பலகை, மரக்கட்டை, உலோகம் ஆகியவற்றின் அடிப்படையிலான தொழில்களைக் கொண்டு வடிவமைக்கப்படும் கல்வியானது முழுமையான பலனைத் தரவேண்டுமென்றால் கீழ்க்கண்ட விஷயங்களைச் செய்தாகவேண்டும்.
1. கற்றுத் தரப்படும் கல்வி, முறையான அடிப்படைகளைக் கொண்டதாக, நல்ல பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு வழங்கப்படவேண்டும். தச்சுத் தொழிலில் திறமை மிகுந்த கைத்தொழில் கலைஞர்களுக்குக் கைத்தொழில் மூலமான கல்வியைக் கற்றுத் தரும் திறமை இருக்காது. இப்படியான கைத் தொழில்களில் மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கவும் தெரிந்திருக்காது.
2. நன்கு வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள், மாதிரிகள் நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும். இந்த மாதிரிகள் அன்றாட வாழ்வில் பயன் தருபவையாக இருக்கவேண்டும். இவை மிகவும் எளிமையானதாகவும் அழகானதாகவும் கலை நயம் மிகுந்ததாகவும் இருக்கவேண்டும். இந்த மாதிரி பொருட்கள் எல்லாம் கிராமப்புற, தொழில் மயப் பகுதிகளுக்கு ஏற்ப மாறக்கூடியவையாக இருக்கலாம். இவற்றில் இறுக்கமான விதிகள் எதுவும் கிடையாது.
அட்டைப்பலகை கைத்தொழில் வகுப்பு – ஒன்று
கால அவகாசம் – தினமும் இரண்டு மணி நேரம்
செய்முறைப் பயிற்சி: அட்டைப் பலகை, காகிதம் துணி போன்றவற்றை வெட்டி, ஒட்டி மாற்றியமைக்கும் தொடர் பயிற்சிகள் தரவேண்டும். ஒன்று அல்லது பல கருவிகளை, பரிந்துரைக்கும் வழிகளில் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக இதில் 20 மாதிரிகளைப் (மாடல்களைப்) பயன்படுத்திக்கொள்ளலாம். இவற்றில் எட்டு மாதிரிகளை ஒவ்வொரு மாணவரும் தமது முதல் வருடப் படிப்பில் செய்து முடித்தாகவேண்டும்.
அ) வழக்கமான கரும்பலகை (பள்ளி மற்றும் வகுப்புகளின் பயன்பாட்டுக்கு)
ஆ) வகை மாதிரிகளைச் சேகரிக்க பெட்டி (இயற்கை ஆய்வுப் பாடம்)
இ) எளிய ஆல்பங்கள் – வரலாறு, இயற்கை ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு.
ஈ) உறிஞ்சு பலகை – எளியது, இரட்டை மடிப்பு.
(பள்ளிப் பயன்பாட்டுக்கும் விற்பனைக்கும்)
உ) போர்ட்ஃபோலியோ.
ஊ) நோட் புக் பைண்டிங் செய்தல்
எ) பை
ஏ) கூடுதல் மாடல்கள்
கோட்பாடு சார்ந்த கல்வி
1) கருவிகளும் அதன் பயன்பாடுகளும்
2) எளிய அளவுகள்
அ. அங்குலம், அடி, மெட்ரிக் அளவுகள்
ஆ. எடைகள் – சேர், சட்டக், தோலா.
3. எண்ணிக்கை – கூட்டல், கழித்தல் எளிய கணக்குகள்
4. எளிய வடிவ கணிக வகைகள்
அட்டைப் பலகை கைத் தொழில் வகுப்பு – இரண்டு
கால அவகாசம் – தினமும் இரண்டரை மணி நேரம்
வரைபடம் : அறிமுகம், வரைபட ஓவியங்களின் அவசியம், இப்படியான வரைபடங்கள் உருவாக்கும் விதம்.
கீழ்க்கண்ட உபகரணங்களைப் பயன்படுத்தி : ஸ்கேல், காம்பஸ், செங்கோண முக்கோண வரை கருவி.
இணை கோடுகள், செங்குத்துக் கோடுகள், சாய்வான கோடுகள், வட்டம் – மையம், ஆரம், சுற்றளவு, சதுரம், நாற்கரம், அறுகோணம், எண் கோணம், மாணவர்களின் சொந்தமான படைப்புகளின் வரை படங்கள்.
செய்முறைப்பயிற்சி
• கைவினைக் காகிதத்தில் வண்ண வேலைப்பாடுகள்
• கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் மாதிரிகளில் ஏதேனும் எட்டு செய்து பார்க்கவேண்டும்.
அ) ஸ்லைடிங் பாக்ஸ் – தூரிகைகள், பென்சில்கள், பேனா ஆகியவற்றைப் போட்டுவைக்க.
ஆ) பேனா நிப்கள், பென்சில்கள், பேனா ஆகியவற்றை போட்டு வைக்க சரிவான நாற்கர தட்டு
இ) அறு கோண தட்டு (இதே பயன்பாட்டுக்கு) காகித போர்டு
ஈ) அறுகோண பெட்டி. துணி அட்டை. (பின் குறிப்பு : கடைசி இரண்டு மாதிரிகள் பிற்காலத்தில் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கற்றுத் தரவேண்டும்.)
உ) கீல் இணைப்பு கொண்ட பெட்டிகள்
ஊ) அறுகோணப் பெட்டி கீல்களுடன்
எ) உறிஞ்சு அட்டை
ஏ) போர்ட்ஃபோலியோ – எளியது, சிக்கலானது.
ஐ) வட்ட பெட்டி
ஒ) இரண்டு மாறுபட்ட பெட்டிகள்
ஓ) தோல் அட்டை கொண்ட ஆல்பம். எளியது.
மரத் தச்சு வேலை வகுப்பு மூன்று
கால அவகாசம் – மூன்றரை மணி நேரம் – பத்துநிமிட இடைவெளிகளில்
கோட்பாட்டு மற்றும் செய்முறைப் பயிற்சி இணைந்து
• கருவிகள் மற்றும் அவற்றின் பயன்கள்
• ஏழு பயிற்சிகள் – தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் குழந்தைகளுக்குத் தரவேண்டும். மாடல் வடிவமைப்பு ஆசிரியர் கொடுத்து உதவவேண்டும்.
• குழந்தைகளே வடிவமைத்த இரண்டு மாடல்கள்
பின் குறிப்பு: கிராமப்புறப் பள்ளிகளுக்குக் கீழ்க்கண்ட மாதிரிகளை பரிந்துரைக்கிறோம்.
அ) சுவர்ப் பூச்சு மட்டக் கருவியின் கைப்பிடி
ஆ) ஏணி
இ) தண்ணீர் பானைக்கான சிறிய நாற்காலி
உ) தண்ணீர் வடிகட்டும் கருவிக்கான நாற்காலி
எ) எழுத, படிக்க உதவும் சிறிய மேஜை
ஏ) (1) சிறிய திறந்த புத்தக அலமாரி (2) துணி அலமாரி (3) பறவைக் கூண்டு (4) சுவர் அலமாரி
ஐ) வீட்டுப் பொருட்கள் வைக்கும் மூலை அலமாரி
ஒ) மரக் கட்டில்
ஓ) தேவைகளுக்கு ஏற்ற மரப்பெட்டி
4. மரம் இழைத்தல், வெட்டுதல், அறுத்தல், துளையிடுதல், கீல் கொண்டு இணைத்தல் போன்றவற்றை மாதிரி பொருட்கள் கொண்டு கற்றுத் தரவேண்டும்.
மர தச்சு வேலை வகுப்பு நான்கு
கால அவகாசம் : தினமும் மூன்றரை மணி நேரம். பத்து நிமிட இடைவெளி
1. செய்முறைப் பயிற்சி
(அ) பத்து மாதிரிகள் செய்யவேண்டும்.
(ஆ) மாணவர்களின் வரைபடங்களின் அடிப்படையில் இரண்டு மாதிரிகள்
(இ) நான்கு வகையான இணைப்புகள்
2. பயிற்சிகளின் வரைபடங்கள், குறியீட்டு ஓவியங்கள்
(அ) கோடுகள் வரைவது எப்படி
(ஆ) செங்கோண, முக்கோண கருவியின் பயன்பாடு
(இ) செங்குத்துக் கோண உருவாக்கம்
(ஈ) பல்வேறு கோணங்கள் உருவாக்குதல்
(உ) காம்பஸ் பயன்பாடுகள்
(ஊ) ரப்பரின் பயன்பாடு
(எ) டி-சதுரக் கருவியின் பயன்பாடு
3. முப்பரிமாண வரைபடங்கள்
(அ) இரு தளக் கோணம்
(ஆ) மாதிகளின் ஆய்வு
(இ) புள்ளி, கோடு, கோணம், சதுரம், வட்டம் (மையம், ஆரம், விட்டம், சுற்றளவு) இவற்றின் வரையறை
கோட்பாடு வகுப்பு
மரங்களின் வளர்ச்சி
(அ) மரத்தைத் தச்சு வேலைக்கு பக்குவப்படுத்துதல், வெட்டிக் குறுக்குதல்
(ஆ) மரங்களின் பாகங்கள்
(இ) விதைகள், முளைத்தல்
(ஈ) வேர்கள், அவற்றின் பயன்கள்
(உ) வேருக்கான உணவு – திரவ வடிவில்
(ஊ) செடியில் நீரேற்றம்
(எ) இலைகள் வழியாக நீர் ஆவியாதல்
(ஏ) காற்றில் இருந்து கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்ளுதல்
(ஐ) மரங்களின் வாழ் நாள்
(ஒ) மரங்களை வெட்ட உகந்த நேரம்
செய்முறைப் பயிற்சி விளக்கங்கள்
மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்.
(அ) வருடாந்தர மர வளையங்கள்
(ஆ) மர வளையங்கள் தோன்றுவதன் காரணம்
(இ) மர வளையங்கள் அமையும் விதம்
(உ) வைரம் பாய்ந்த கட்டை
(ஊ) மரத்துண்டின் வெளிப்புறம்
(எ) மரப்பட்டை மற்றும் அதன் பயன்பாடு
(ஏ) மரப்பட்டை உருவாகும் விதம்
தச்சு வேலையின் அடிப்படைகள்
(அ) மரக்கட்டைகள்
(ஆ) அளவுகள்
(இ) மெட்ரிக் அளவு. (1) பின்னங்கள் (2) முப்பிரிவு விதி
(ஈ) எடை. இந்திய மற்றும் சர்வ தேசம் மற்றும் ஆங்கிலேய அளவுகள்
(உ) அடர்த்தி
(ஊ) புவி ஈர்ப்பு விசை
(எ) விசை, வேலை
(ஏ) வரை பட விளக்கம்
(ஐ) விசைகளின் நான்கு பக்க இயக்க வரைபடம்
(ஒ) விசைகளின் வலிமை
(ஒள) எந்திரங்கள்
(ஃ) நெம்புகோல்கள்
மரங்களின் புவியியல்
நாட்டு மரங்களின் வகைகள்
(அ) மிதமான மரம்; கடினமான மரம்.
(ஆ) நாணல்கள், மூங்கில்கள்
(இ) நம் தேசத்தில் மரங்கள் (காடுகள்) உள்ள பகுதிகள்
(ஈ) தேசத்தின் கானக/மரங்கள் மூலமான வருமானம்
(எ) ஏற்றுமதி, இறக்குமதி
பின் குறிப்பு: கோட்பாட்டு ரீதியான கல்வியை முடிந்தவரை செய்முறைப் பயிற்சி மூலமாகவே தரவேண்டும். மாதிரி வரைபடங்கள் வரைந்த பின்னரே கோட்பாட்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டிச் சொல்லித் தரவேண்டும்.
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.