Skip to content
Home » காந்தியக் கல்வி #21 – விரிவான பாடத்திட்டம் – 12

காந்தியக் கல்வி #21 – விரிவான பாடத்திட்டம் – 12

காந்தியக் கல்வி

சமூகவியல் பாடம்

வகுப்பு – 1

1. ஆதி மனிதர் பற்றிய வரலாறு: ஆதி மனிதர் தன் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்துகொண்டார்; நாகரிக வாழ்க்கைக்கான விஷயங்களை எப்படி வளர்த்தெடுத்தார்.
(அ) உறைவிடம் – குகைகள், மரங்கள், நதிக்கரைக் குடியிருப்புகள் போன்றவை
(ஆ) உடைகள் அல்லது இயற்கைப் பாதுகாப்பு – இலைகள், மரப்பட்டைகள், தோல்கள் முதலியவற்றால் ஆனவை. அவைபடிப்படையாக விலங்கு ரோமம், கம்பளி, பருத்தி, பட்டு என பரிணமித்த வரலாறு.
(இ) வாழ்வாதாரம் – வேட்டை, மேய்ச்சல், ஆரம்ப நிலை விவசாயம்.
(ஈ) ஆயுதங்கள், கருவிகள் – மரம், கல், வெண்கலம், இரும்பு.
(உ) சுய வெளிப்பாடு – பேச்சு, குகை எழுத்து, ஓவியங்கள்.
(ஊ) வளர்ப்பு விலங்குகள் – குதிரை, பசு, நாய் முதலியவை
குறிப்பு : ஆதி மனிதர் தொடர்பான இந்த வாழ்க்கை வரலாறை குழந்தைகளின் சிந்தனை மற்றும் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கதைகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கற்றுத் தரவேண்டும்.

2. ஆதி காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை: பழங்கால எகிப்து, பழங்கால சீனா, பழங்கால இந்தியா பற்றிய விவரங்கள் கதை வடிவில். உதா:
(அ) எகிப்தில் அடிமைகளைக் கொண்டு பிரமிடுகள் கட்டப்பட்டமுறை;
(ஆ) முதல் ஐந்து சீனப் பேரரசர்கள்;
(இ) மொஹஞ்ச தரோவில் ஒரு சிறுவன்
(ஈ) சுனசேபன் கதை (வேத காலம்)

3. தொலைதூர, துருவப் பிரதேசங்களில் மனித வாழ்க்கை: அராபிய பொடோயின்கள், எஸ்கிமோக்கள், ஆஃப்ரிக்க குள்ள மனிதர்கள் (பிக்மிகள்), செவ்விந்தியர்கள்.
குறிப்பு : தாய் மொழியில் கதைகள், நாடகங்கள் என இந்தப் பாடங்கள் எல்லாம் வாய்மொழி வழியாக நடத்தப்படலாம்.

4. குடிமை வாழ்க்கைக்கான பயிற்சி: பள்ளியில் குழந்தைகளின் செயல்பாடுகள் – குடிமை சமூகத்தில் ஒருவர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற விஷயங்கள் எல்லாம் பள்ளியில் நடைமுறைப் பயிற்சிகள் மூலமாகக் கற்றுத்தரவேண்டும். கீழ்க்கண்ட பண்புகளை, குணங்களைக் கற்றுக்கொடுக்கவேண்டும்.

(அ) தூய்மை, சுகாதாரம்
(1) தனி நபர் தூய்மை (பொது அறிவியல் பாட திட்டத்தைப் பார்க்கவும்)
(2) உடைகளின் தூய்மை
(3) கழிப்பறைகள், சிறு நீர் கழிக்கும் அறைகளை முறையாகப் பயன்படுத்துதல்
(4) குப்பைகள், காகிதக் குப்பைகள் இவற்றைக் கையாளும் விதம்.
(5) வகுப்பறைகள் மற்றும் பள்ளி அலமாரிகள் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருத்தல்
(6) பள்ளிக் குடி நீரை அக்கறையுடன் பராமரித்தல், பயன்படுத்துதல்.

ஆ. சமூகப் பொறுப்பு உணர்வுகள்
(1) ஆசிரியர்கள், சக மாணவர்களை முறையாக வாழ்த்தி வரவேற்றல்
(2) இனிய மொழியில் பேசுதல்
(3) பணிவுடன் கேள்வி கேட்பது, பதில் சொல்வது.
(4) பேச வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருத்தல்
(5) வரிசையை முறையாகப் பின்பற்றுதல்

இ. கைத்தொழில்
(1) கைத்தொழில் கருவிகள், பொருட்களை முறையாகப் பயன்படுத்துதல்
(2) பொருட்கள், கருவிகளை சக மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்
(3) குழுவாக இணைந்து செயல்படுதல்
(4) தனக்கான வாய்ப்பு/முறை வரும்வரை காத்திருத்தல்
(5) வகுப்பறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், வேலை முடிந்த பின் பொருட்கள், கருவிகளை உரிய இடத்தில் முறையாக வைத்தல்

ஈ. விளையாட்டுகள்
(1) நேர்மையாக விளையாடுதல் (ஏமாற்று, பொய் சொல்லாமல் விளையாடுதல்)
(2) பலவீனமானவர்களை முந்திச் செல்லாமல் அரவணைத்தல்
(3) வெற்றியைவிட நேர்மையாக விளையாடுவதே முக்கியம் என்று அறிவுறுத்துதல்
(உ) பொறுப்புகளை திறம்படச் செய்தல்

மேலே சொல்லப்பட்டிருக்கும் அடிப்படைப் பயிற்சிகள் நீங்கலாக, குழந்தைகள் பள்ளியில் சில முக்கியமான பொறுப்புகளைத் தனி நபராகவோ, குழுவாகவோ செய்தாகவேண்டும். ஏழு முதல் ஒன்பது வயது வரையிலான மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட பொறுப்புகள் கற்றுத் தரவேண்டும்.
(1) வகுப்பறையின் தூய்மை
(2) பள்ளி வளாகத்தின் தூய்மை
(3) பள்ளி குடி நீர் பராமரிப்பு
(4) இலைகள், பூக்கள், கற்கள், இறகுகள், மரப்பட்டை, மரக்கட்டை ஆகியவற்றை பள்ளி அருங்காட்சியகத்துக்குச் சேகரித்துக் கொடுத்தல்.
(5) பள்ளிகளை விழாக்களுக்கு அலங்கரிக்க உதவுதல்.
(6) பள்ளியையும் கிராமத்தினரையும் மகிழ்வித்தல்
(7) புதிய மாணவர்களுக்கு உதவுதல்

(ஊ) வீட்டில் குழந்தைகளின் செயல்பாடுகள்.
(1) வீடு என்பது ஒழுங்கமைக்கப்பட்ட சமூக அலகு. ஒவ்வொரு அங்கத்தினருக்கும் அங்கு ஒரு பொறுப்பு/இடம் உண்டு – தாய், தந்தைக்கான பொறுப்பு; சகோதர சகோதரிகள், ஒன்று விட்ட சகோதரர்களின் பொறுப்பு
பிற உறவினர்களின் பொறுப்பு; குடும்பத்தில் பணியாளர்களின் பொறுப்பு/இடம்
(2) குடும்பத்தில் குழந்தைகளின் இடம்.பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுடனான பொறுப்பு
(3) குடும்பத்தினர் ஒப்படைக்கும் செயல்களை முறையாகச் செய்தல்

(எ) உடல் பயிற்சி
(1) மைதான விளையாட்டுகள், கருவிகள், பொருட்கள் அதிகம் தேவைப்படாத பொதுவான கிராம விளையாட்டுகள்.
(2) படைப்பூக்கம் மிகுந்த விளையாட்டுகள், நகலெடுப்பு விளையாட்டுகள்
(3) லயத்துடனான உடல் பயிற்சிகள்
(4) நாட்டுப்புற நடனங்கள்.

வகுப்பு – 2

1. நவீன காலத்தில் உள்ள பழங்குடிகளின் வாழ்க்கை. உ.தா: ஆஃப்ரிக்க பூர்வகுடிகள், ஆஸ்திரேலிய புதர் மனிதர்கள், சிலோன் வேடர்கள், செவ்விந்திய பூர்வ குடிகள்.
2. ஆதி காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை – பழங்கால ஹீப்ருக்கள், ரோமானியர்கள், பாரதத்தினர் (உபநிடத காலம்) கதைகள் வடிவில் கற்றுத் தரவேண்டும். எ.கா. மோசஸின் கதை, ஆப்ரஹாமின் கதை, ரோமாபுரியின் மார்க்கஸ் அரேலியஸின் கதை, ரெகுலஸின் கதை, நசிகேதன், கார்கி ஆகியோரின் கதை.
3. தூரப் பகுதிகளில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை – ஆஃப்ரிதி சிறுவனின் வாழ்க்கை, ஸ்விட்சர்லாந்து சிறுவனின் வாழ்க்கை, பாரசீகச் சிறுவனின் வாழ்க்கை, ஜப்பானிய சிறுவனின் வாழ்க்கை. குறிப்பு: தலைப்பு ஒன்று மற்றும் இரண்டில் உள்ள விஷயங்களைத் தாய்மொழியில் கதை, நாடகம் மூலமும் புத்தகங்கள் மூலமும் கற்றுத் தரவேண்டும்.
4. குடிமை வாழ்வுக்கான பயிற்சி – கிராம வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தல். உணவு, உடை, உறைவிடம், தொழில்கள், குடி நீர் வழங்கல், கிராமச் சந்தை, வழிபாட்டு மையங்கள், பொழுது போக்குகள், விழாக்கள், கண்காட்சிகள்.
5. நடைமுறைப் பயிற்சி – குடிமைப் பண்புகளுக்கான பயிற்சிகள்
(அ) பள்ளியில் குழந்தைகள்
(ஆ) வீடுகளில் குழந்தைகள்
இந்த இரண்டு தலைப்புகளில் முதல் வகுப்பில் நடந்த பாடங்களின் தொடர்ச்சியாகக் கற்றுத் தரவேண்டும்.
(இ) குழந்தையும் கிராமமும்
(1) வீட்டைச் சுற்றி இருக்கும் பகுதியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுதல்
(2) கிராம சாலைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல். (முடிந்தால், கிராமத்தின் பல்வேறு இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கலாம். கிராமத்தினரையும் குடும்பத்தினரையும் அதை முறையாகப் பயன்படுத்தவைக்கவேண்டும்)
(3) கிராமத்துக் கிணறைத் தூய்மையாகப் பராமரித்தல்.
(4) பள்ளி விழாக்களில் கிராமத்தினரைப் பங்குபெற வைத்து மகிழ்வித்தல்
(5) விலங்குகளிடம் அன்புடன் நடந்துகொள்ளுதல்
6. உடல் பயிற்சி – ஒன்றாம் வகுப்பில் இடம்பெற்றிருப்பவற்றின் அடுத்த கட்டம்.

வகுப்பு – 3

1. பழங்காலத்தில் மனிதர் வாழ்க்கை – பழங்கால பாரதம் (பெளத்தர் காலம்), பழங்கால பாரசீகம், பழங்கால கிரேக்கம் கதைகள் வடிவில். புத்தரின் சரிதம், அசோகரின் சரிதம், மகேந்திரர், சங்க மித்திரையின் கதை
மத்திய ஆசியா மற்றும் சீனாவில் பெளத்த மடாயலங்கள், நாலந்தாவில் படித்த மாணவரின் கதை
* பழங்கால பாரசீகம் – காவ இரும்புக் கொல்லரின் கதை, தெர்மோஃபைல் போர் பற்றிய கதை, மா மன்னர் டேரியசின் அரசபையில் இந்திய மருத்துவர்
* பழங்கால கிரேக்கம் – கிரேக்க அடிமைகள் பற்றிய கதை, சாக்ரடீஸின் கதை, ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் இளைஞர் ஒருவர் பற்றிய கதை, மாரத்தான் போட்டியில் சிறந்த பெய்டிபிடெஸ் கதை, அலெக்சாண்டரின் கதை, மெகஸ்தனிஸின் கதை
2. தூர தேசங்களில் வாழ்க்கை – நியூ யார்க் நக்ரில் வாழும் சிறுவனின் வாழ்க்கை, சீனாவில் வாழும் சிறுவனின் வாழ்க்கை, ரஷ்ய கூட்டுப்பண்ணையில் வாழும் சிறுவனின் வாழ்க்கை, செவ்விந்திய தேயிலைத் தோட்டத்தில் வாழும் சிறுவனின் வாழ்க்கை
குறிப்பு: தலைப்பு ஒன்று மற்றும் இரண்டில் உள்ள விஷயங்களைத் தாய்மொழியில் கதை, நாடகம் மூலமும் புத்தகங்கள் மூலமும் கற்றுத் தரவேண்டும்.
3. மாவட்டங்கள்பற்றிய விவரங்கள் (முடிந்தால் ஒரு மாவட்டச் சுற்றுலா) – தட்பவெப்பம், பயிர்கள், உள்ளூர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், தகவல் பரிமாற்ற முறைகள், வழிபாட்டு மையங்கள்.
குறிப்பு: இந்தச் சுற்றுலாவின் போது அடிப்படையான பொதுவான விஷயங்கள் கற்றுத் தரப்படவேண்டும். நான்காம் வகுப்பில் நடக்கும் சுற்றுலாவில் கூடுதல் தரவுகள் இடம்பெறலாம்.
செய்முறைப் பயிற்சி: (1) மாவட்டத்தின் வரைபடத்தில் இடம்பெற்றிருப்பவற்றில் முக்கியமான விஷயங்கள் (2) திட்டங்கள் வகுத்தல் : வகுப்பறை, பள்ளிக் கட்டடம், பள்ளி வளாகம் இவற்றுக்கான திட்டம்.
4. பூமிப் பந்து – பூமியின் வடிவம், நிலம், நீர் பரப்புகள்
5. கிராம சமுதாயம் – கிராமம் மற்றும் நிர்வாகம். கிராம அதிகாரிகள். கிராம பஞ்சாயத்து. அதன் செயல்பாடுகள்.
கிராமத்தில் இருப்பவை – சந்தை, மருத்துவமனை, தபால் நிலையம், கால்நடைப் பராமரிப்பு மையம். சாலைகள், விளையாட்டு மைதானம், அருகமை ரயில்வே நிலையம்.
6. செய்முறைப் பயிற்சி
(அ) கிராம பஞ்சாயத்தைப் போலவே பள்ளியில் பஞ்சாயத்து
(ஆ) சமூக சேவை அமைப்புகளின் நிர்வாகம் (9-12 வயது மாணவர்களுக்கு) கீழ்க்கண்ட குடிமைச் செயல்பாடுகள்
(1) தெருக்கள், கிணறுகள் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் தூய்மை
(2) விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பது
(3) 9 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கான விளையாட்டுகள், பொழுதுபோக்கு விஷயங்களை ஒருங்கிணைத்தல்
(4) கிராமச் சிறுவர்கள், பெரியவர்களுக்கான பொழுதுபோக்குகளை ஒருங்கிணைத்தல்
(5) தேசிய மற்றும் ஆண்டுதோறுமான விழாக்களில் பங்குபெறுதல்
(6) அறிவுப்புப் பலகைகள், போர்டுகள், போஸ்டர்கள் உருவாக்குதல்
(7) கிராம விழாக்கள், பொருட்காட்சிகள் ஆகியவற்றில் தன்னார்வத்துடன் பங்குபெறுதல்.

(தொடரும்)

______

தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன்  தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *