ஓவியப்பாடம்
வகுப்பு : 1
நிறங்களைப் பிரித்தறிதல். சிவப்பு, பச்சை மஞ்சள், கறுப்பு ஆகிய நிறங்களை இனம் காணுதல். பூக்கள், மரங்கள், கனிகள், பறவைகளின் நிறங்களை அடையாளம் காணுதல்.
நிறங்களின் சரியான பெயர்கள். வண்ணம் தீட்டுதல்.
வடிவங்களை அறிந்துகொள்ளுதல்.
காகிதத்தில் நீல வானம், பச்சைப் புல்வெளிகள் வரைந்து வெட்டி ஒட்டுதல்.
பல்வேறுவிதமான இலைகளை வரைந்து அவற்றுக்கு இணையான வடிவங்களைக் கற்றுத் தருதல்; அரச மர இலை, வாழை இலை.
காய், கனிகளின் வடிவங்கள். உதா: கத்தரிக்காய், பூசணி, கேரட், மாம்பழம்.
அக்கம் பக்கத்தில் இருக்கும் பொருட்களை வண்ணப் பென்சிலால் வரைதல்.
குறிப்பு : முழு கையையும் நன்கு அசைத்து வரையும்படிக் கவனமாகக் கற்றுத் தரவேண்டும்.
வகுப்பு : 2
அன்றாடப் பாடங்களுக்குத் தொடர்பான பொருட்களை வரைந்து பழகுதல். கறுப்பு, மஞ்சள் க்ரேயான்களை அதிகம் பயன்படுத்துவது நல்லது. முக்கோணங்கள், வட்டங்கள், அரை வட்டங்கள் இவற்றின் விளிம்புகளுக்கு வண்ணப் பென்சில்களைப் பயன்படுத்தலாம். எளிய பூவின் பாகங்களை படம் வரைந்து வண்ணம் தீட்டி வெட்டி ஒட்டலாம்.
ஆறுகள், மரங்கள், பறவைகள் நிறைந்த இயற்கைக் காட்சிகள்: வண்ணப் பென்சில், க்ரேயான்களைப் பயன்படுத்தலாம்.
மரங்கள், வெட்டப்பட்ட மரங்களின் ஓவியங்கள் (இழை தழைகளுடன்).
விலங்குகள் (சரியான நிறத்துடன்), காய், கனிகள் இலை தழைகளுடன்
கை லாகவமாக வரையும்படியாகப் பயிற்சி கொடுக்கவும்.
வகுப்பு : 3
பிற பாடங்களில் பயன்படும் பொருட்கள், வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களை நினைவில் இருந்து வரைதல்
வீட்டில் நடக்கும் நிகழ்சிகளை வரைதல்
மரங்கள், வீடுகள், விலங்குகள் இவற்றின் ஓவியங்கள்.
சதுரங்கள், நீள் சதுரங்கள், வட்டங்கள் ஆகியவற்றின் விளிம்புகளை ஆரஞ்சு, பச்சை, ஊதா என் பல நிறங்களால் அலங்கரித்தல்.
சிவப்பு-நீலம், நீலம் மஞ்சள் என இரண்டு நிறங்களைக் கலந்து மூன்றாவது நிறத்தை உருவாகுதல்.
வகுப்பு : 4
இயற்கைக் காட்சிகள், மலர்கள், இலைகள் வண்ணத்துப் பறவைகள்
இயற்கைக் காட்சிகள், பொருட்களின் ஓவியங்களில் முப்பரிமாணங்களைக் கொண்டுவருதல். அருகில் இருக்கும் மரம், தொலைவில் இருக்கும் மரம் இரண்டையும் ஒரே காகிதத்தில் வரைதல்
வடிவியல் வடிவங்களைக் கொண்டு பூக்கள், இலைகள் ஆகியவற்றை வரைதல்.
கோலங்கள், ரங்கோலி, அலங்கர வடிமைப்பு என் உள்ளூர் மரபுக்கு உகந்தவற்றை வரைதல்.
ஓவியங்களை ஒத்திசைவான பின்னணியில் மாட்டுதல்
குழந்தைகள், விலங்குகள், பறவைகள் ஓடுதல், பறத்தல் என அசையும் வகையில் வரைதல். தீப்பெட்டிக் குச்சிகளைப் பயன்படுத்தி அசைவுகளைக் காட்சிப்படுத்தலாம்.
சமூகவியல் பாடங்கள் சிலவற்றை விளக்கும் ஓவியங்கள் வரையலாம். பொது அறிவியல் தொடர்பான படங்களும் வரையலாம்.
வகுப்பு : 5
காட்சிகளைக் கூர்ந்து கவனித்தல், உள்ளபடியே வரைதல் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரவேண்டும். முந்தைய வகுப்புகளில் கற்றுக் கொண்டவற்றை மீண்டும் முழுமையாகப் பயிற்சி செய்து பார்க்கவேண்டும்.
பொருட்களின் அளவுகளின் விகிதாசாரம், அமைப்பு, தொடர்புகள், நிறங்கள் இவற்றை நன்கு கவனமாகக் கற்றுக் கொள்ளவேண்டும்.
நிறங்களின் பல்வேறு அடுக்குகள், சாயல்கள், மென் நிறம், அடர் நிறம், நிற அட்டவணைகள்.
ஒரு இலையைப் பல கோணங்களில் வைத்து வரைதல், பென்சில், பேனா, க்ரேயான் என பல எழுது பொருட்கள் கொண்டு வரைதல்.
புத்தக அட்டைக்கான இயற்கைக் காட்சிகள், கோட்டோவிய விளிம்புகளுக்கு வண்ணம் தீட்டுதல்.
சமூகவியல், அறிவியல், இலக்கிய பாடங்களின் நிகழ்வுகளை ஓவியமாக வரைதல்.
உருவப்படும், சலனப்படம் (அசையும் படம்), ஓடும் விலங்குகள்
பள்ளி நாள் கொண்டாட்டத்துக்கான போஸ்டர்கள்.
வகுப்பு : 6
பொருட்களின் ஓவியம், வடிவ அலங்காரம் ஆகியவற்றைத் தொடர்ந்து பயிற்சி செய்யவும்.
முதல் வகுப்பு மாணவர்களுக்கு விலங்குகள் புத்தகம் ஒன்றை உருவாக்கி ஏதேனும் விழா நாட்களில் பரிசாகக் கொடுக்கவும்.
கூட்டாகச் சேர்ந்து சமூக சேவை விழிப்பு உணர்வு முகாமுக்கு போஸ்டர்கள் தயாரிக்கவும்.
கட்டுமானங்களில் அலகுகளின் பயன்பாடு, உருவங்களைச் சிறியதாகவும் பெரிதாக்கியும் வரைதல்.
வகுப்பு : 7
உருவ ஓவியங்கள், அலங்காரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து கற்றுக் கொள்ளவும்.
இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கைக் காட்சிகள் தொடர்பான ஓவியங்களைக் கொண்டு ஒரு புத்தகம் உருவாக்கி பரிசாகத் தரவும். முகப்பு பக்கத்தை நன்கு அலங்கரிக்கவும்.
கிராமங்களில் நடத்தும் சமூக விழிப்பு உணர்வு முகாமுக்கான போஸ்டர் தயாரிக்கவும்.
திடப் பொருட்களின் குறுக்கு வெட்டுத் தோற்றங்கள்.
ஓவியங்கள், பொருட்களின் பாகங்கள், கைத்தொழில் வகுப்பு நேரத்தில் உற்பத்தி செய்யப்படவேண்டும்.
முதல் மூன்று வகுப்பு மாணவர்கள் வான வில்லின் நிறங்களை முடிந்த அளவுக்கு அதிகம் பயன்படுத்தவேண்டும். கறுப்பு, வெள்ளை நிறங்கள் அடுத்த வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டால் போதும். ஏழாண்டுகள் முழுவதும் நல்ல அலங்கரங்களை நகல் எடுத்தல், ஓவியங்கள் வரைதல் ஆகியவற்றைத்தொடர்ந்து கற்றுக்கொள்ளவேண்டும்.
(தொடரும்)
______
தேசிய அடிப்படைக் கல்வி: ஜாகிர் ஹுசைன் அறிக்கை 1938ன் தமிழாக்கம்.