வரலாற்றின் பக்கங்களை மனிதர்கள் அறிய உதவிபுரிவது தொல்லியலும், வரலாற்றுக் கல்வெட்டுச் சான்றுகளும், இலக்கியல்களும்தாம். தமிழர்கள் வாழ்ந்த வாழ்வை எதிர்காலத் தலைமுறையும் அறியும் வண்ணம் தமிழகத் தொல்லியல் துறை, மத்தியத் தொல்லியல் துறை, பல்கலைக்கழகங்களின் தொல்லியல் துறை ஆகியன தமிழர்களின் வரலாற்றுக் களங்களைத் தேடி ஆவணப்படுத்தி வருகின்றன. அவ்வகையில் தமிழக வரலாற்றில் சம்புவராயர்கள் என்னும் அரச வம்சத்தினர் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
தமிழகத்தில் மூவேந்தர்களின் ஆட்சி கிட்டத்தட்ட 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து மூவேந்தர்களின் வழிவந்த சம்புவராயர்கள் அரசாட்சி ஏற்று, படைவீடு என்னும் நகரைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தில் ஆட்சிபுரிந்தனர். கிட்டத்தட்ட வடபெண்ணை ஆற்றில் தொடங்கி காவிரி வரை இவர்களது ஆட்சி நீண்டிருந்தது என்று தமிழக வரலாறு பதிவு செய்கிறது.
மூவேந்தர்களின் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு மாலிக் கபூர் தலைமையில் சுல்தானியப் படை தமிழகம் மீது படை எடுத்தது. தமிழகத்தின் திருவரங்கம், மதுரை உள்ளிட்ட பல இடங்களில் சுல்தானியப் படை போர் நடத்தியபோது அவர்களைத் தீரமுடன் எதிர்த்த நிலையான அரசாக சம்புவராயர்கள் மட்டுமே அன்றைய காலத்தில் இருந்துள்ளனர். மதுரை பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் படைவீடு தலைநகரம் நோக்கிப் பாதுகாப்புக் கேட்டு வந்தபோது அம்மக்களுக்கு சம்புவராயர்கள் புகலிடங்கள் அமைத்த வரலாறு கல்வெட்டுகளில் பதியப்பட்டுள்ளது.
மதுரையை மீட்ட சுல்தானியர்கள் தொடர்ந்து தமிழகத்தில் அரசாட்சி நடத்த முனையாமல் கிடைத்த பொருட்களோடு வடக்கு நோக்கிச் சென்றதாகவே வரலாற்றாசிரியர்கள் பதிகின்றனர். சோழர்களின் படைகளில் சம்புவராயர்கள் மிக முக்கியப் பொறுப்புகளில் பதவி வகித்துள்ளனர் என்ற சான்றும் ‘சோழர்கள்’ நூலில் நிலகண்ட சாஸ்திரியால் குறிப்பிடப்படுகிறது. படைவீடு அரசாட்சி குறித்தும், சம்புவராயர்கள் குறித்தும் தமிழ்மகன் எழுதிய படைவீடு நாவல் முழுமையான தரவுகளையும் வழங்குகிறது.
வட இந்திய அரசர்கள் தமிழகத்தில் நுழைய இயலாதவாறு மிகப் பாதுகாப்போடு தொண்டை மண்டலத்தில் அரசாட்சி நடத்தியவர்களாகவும், தமிழகத்தின் வட எல்லையைப் பாதுகாத்தவர்களாகவும் சம்புவராயர்கள் வரலாற்றில் போற்றப்படுகின்றனர். இவர்களைப் பற்றிய பல சான்றுகள் திருவண்ணாமலை, பழவேற்காடு, செங்கல்பட்டு போன்ற இடங்களில் காணக்கிடைக்கின்றன.
தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களாக விளங்கும் திருவண்ணாமலை, வேலூர் போன்ற இடங்களில் பெருங்கற்காலச் சின்னங்கள் பரவலாகக் கிடைக்கின்றன.
திருவண்ணாமலைக் கல்வெட்டு ஒன்றில் ‘நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பு’ என்னும் தொடர் காணக்கிடைக்கிறது. அதனைவைத்து இந்தப்பகுதியைச் சங்க அரசன் நன்னன் அரசாண்டு இருக்கலாம் என்பது தெரியவருகிறது. செங்கம் ரிசபேசுவரர் கோவில் கல்வெட்டில் ‘பண்டே மலைகடாம் பாண்டுண்ட மால்வரை’ என்ற தொடர் கிடைக்கின்றது. இந்த இரண்டு சான்றுகளிலும் மலைபடுகடாம் பற்றிய குறிப்பும், நன்னன் பற்றிய குறிப்பும் கிடைக்கப்பெறுகின்றது.
சங்க இலக்கியச் சான்றும், வரலாற்றுச் சான்றும் கிடைக்கப்பெற்ற படைவீடு பகுதியில் தமிழகத் தொல்லியல் துறை தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டு பல சான்றுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
மலைகள் அரணாகச் சூழப்பட்ட படைவீடு அருகில் கமண்டல நாகநதி என்னும் ஆறு ஓடுகின்றது. எதிரிகள் யாரும் நுழையாதவண்ணம் படைவீடு தலைநகரம் மிகப் பாதுகாப்பாக சம்புவராயர்களால் உருவாக்கப்பட்டு வலிமையானதாக அமைக்கப்பட்டிருந்தது. மருதரைசர் படைவீடு என்று கல்வெட்டுகள் சுட்டும் இவ்விடம் 15ஆம் நூற்றாண்டு வரை மிகச் செழிப்பானதாக இருந்திருக்கின்றது. தற்போது இடிபாடுகளுடன் சிறு சிறு கிராமங்களாக இவ்விடம் காட்சி அளிக்கின்றது. ஆய்விற்காக நேரில் சென்றபோது இடிந்த சிதிலமடைந்த பல இடங்களை நேரில் காணமுடிந்தது.
1994ஆம் ஆண்டு அவ்விடத்தில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டி தொல்லியல் இயக்குநர் நடன காசிநாதன் தலைமையில் மேற்பரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. படைவீடு என்னுமிடத்திலும் வேட்டைகிரிபாளையம் என்னுமிடத்திலும் அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டன. பெருமழை பெய்தபோது தெரிந்த செங்கற்சுவர் பகுதியின் பிற பகுதிகளை ஆராய இக்குழிகள் அமைக்கப்பட்டன.
இரண்டு அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டதில் முதல் குழியில் நீளமான சுடுமண் குழாய் ஒன்று கண்டறியப்பட்டு ஆராயப்பட்டது. அது, கண்ணாடிப் பொருட்கள் செய்யப் பயன்படும் துருத்திக் குழாய் என்று தொல்லியலாளர்கள் கண்டறிந்தனர். மதில் சுவரின் எச்சங்களும் இவ்விடத்தில் கண்டறியப்பட்டது.
படைவீடு கோட்டைகரை மேடு என்னுமிடத்தில் அகழாய்வு மேற்கொண்டபோது கட்டடப் பகுதிகள், நீர்க் கால்வாய்கள் உள்ளிட்ட முறையான அமைப்புடன் கூடிய 14ஆம் நூற்றாண்டு கட்டடப் பகுதிகள் வெளிப்பட்டன. இவ்விடங்களில் சிறு கோட்டை, பெரிய கோட்டை என்னும் இரு பகுதிகள் இருந்தமையும் வெளிக்கொணரப்பட்டது.
பெரிய கோட்டை பகுதியில் அரச குடும்பத்தினர் பயன்பாட்டிற்கு வேண்டி முறையான நீர்ப் பயன்பாட்டு முறை கால்வாய் அமைப்புகள் கையாளப்பட்டிருந்தது அகழாய்வின் வழி அறிய முடிகிறது. கோட்டைக்கு அருகில் பாயும் கமண்டல ஆற்றின் மூலம் உறைகிணறுகள் வழி கோட்டைக்கு உள்ளேயும் நீரை எடுத்துச் சென்றுள்ளனர் என்பதும் தெரிய வருகிறது. கோட்டைக்கரை மேடு பகுதியில் 12 அகழாய்வுக்குழிகள் அமைக்கப்பட்டதில் 2, 4 ஆகிய எண்கள் கொண்ட அகழாய்வுக் குழிகளில் உறைகிணறுகள் வெளிப்பட்டன.
படைவீடு அகழாய்வில் கோட்டையில் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் கிடைக்கப்பெற்றன. படைவீடு அகழாய்வில் மொத்தம் 5 செப்புக்காசுகள் கிடைக்கப்பெற்றதாகத் தொல்லியல் இயக்குநர் நடனகாசிநாதன் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடுகிறார். முதலாம் இராசராசன் காலத்திய செப்பு நாணயம், விஜயநகர புக்கராயனின் இரண்டு செப்புக் காசுகள், டெல்லி சுல்தானிய ஜலாலுதின் காலத்திய காசு, விஜயநகர அரசன் தேவராயன் காசு என மொத்தம் 5 நாணயங்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன.
சம்புவராயர்கள் காலத்திய, அதாவது 14,15ஆம் நூற்றாண்டுகளின் கட்டட அமைப்பு முறைகளை அறிந்துகொள்ள இந்த அகழாய்வு பெரிதும் துணை நின்றது.
படைவீடு அகழாய்வில் கிடைத்த பொருட்கள்:
சுடுமண் விளக்குகள், செப்புக் குழாய் அமைப்புகள், கிண்ணங்கள், பெரிய கொள்கலன் அமைப்புடைய ஜாடி வடிவப் பாத்திரங்கள், இரும்பு ஆணிகள், சுடுமண் நாணய வார்ப்பு அமைப்புகள், சமையல் கலன்கள், உலைத்துருத்திக் குழாய்கள், கோயில் அல்லது அரண்மனை அமைப்பு விளக்குகள், அலங்கார அரண்மனை விளக்குகள்
படைவீடு அகழாய்வின் மூலம் 14ஆம் நூற்றாண்டின் வரலாறு குறித்த சான்றுகளும், சங்கச் சான்றுகளும், தொல்லியல் சான்றுகளும் நமக்குக் கிடைக்கப்பெறுகின்றன.
சம்புவராயர்களின் தலைநகரமாகவும் தமிழகத்தின் வடக்கு எல்லைக் காவல் அரசாகவும் விளங்கிய படைவீடு தமிழகத் தொல்லியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிக்கின்றது.
(தொடரும்)
சிறப்பு
மிக அருமையான தகவல் ஐயாசம்புவராயர் பற்றிய தொல்லியல் ஆய்வுகளையும் வரலாற்று ஆய்வுகளையும் முன்னிறுத்தி உங்களுடைய கட்டுரை அமைத்தது சிறப்பு மேலும் படைவீடு குறித்த தகவல்களையும் முன்வைத்து பேசியது சிறப்பு அவ்வாறாக முன்வைக்கும் வரலாற்றில் தொடர்பு சார்ந்த உங்களுடைய ஆய்வு கட்டுரை மேலும் மேலும் சிறப்பு கூட்டிக் கொண்டே போகின்றன சாம்புவராயர் என்று சொல்லப்படுகிற இன மக்களும் சாம்புவர் என்று சொல்லப்படுகிற இன மக்களும் ஒன்றாக இருக்கலாமா என்பதை உங்களுடைய ஆய்வில் கண்டறிய முடியும் என்றால் அது மேற்கண்ட ஆய்விற்கு மிகப்பெரிய ஒரு விரிவான ஒரு சமூக பார்வைக்கு அது கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.
நன்றி
மருதராச பட்டினம் என்பது தான் மதராசபட்டினம் (இன்றைய Madras) என்று அழைக்கப் பட்டது
சம்புவரையர்
மொழி
Download PDF
கவனி
மூலத்தைப் பார்
சம்புவரையர்கள் வட தமிழ்நாட்டை ஆண்ட சிற்றரச மரபினர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் இடைக்கால மற்றும் பிற்கால சோழர் அரசாங்கத்தின் கீழ் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். சோழர்களின் அழிவுக்குப்பின் வடதமிழ்நாட்டின் சில பகுதிகளை ஆண்டிருக்கின்றனர். அதில் தற்போது தமிழக மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் அடங்கும்.
சம்புவரைய அரசு
12 ஆம் நூற்றாண்டு–1375
தலைநகரம்
படைவீடு[1], விருஞ்சிபுரம்
பேசப்படும் மொழிகள்
தமிழ்
சமயம்
இந்து
அரசாங்கம்
முடியாட்சி
• கி.பி. 1236 – 1268
ராஜ கம்பீரர்
• கி.பி. 1322 – 1337
மண்கொண்டார்
• கி.பி. 1337 – 1373
ராஜ நாராயணர்
• கி.பி. 1356 – 1375
ராஜ நாராயணர் III
வரலாற்று சகாப்தம்
இடைக்காலம்
• தொடக்கம்
12 ஆம் நூற்றாண்டு
• முடிவு
1375
முந்தையது பின்னையது
[[பாண்டியர்]]
[[விஜயநகரப் பேரரசு]]
தோற்றம்
படைவீட்டின் அமைப்பு
சம்புவராயர்கள், ஆரணியை அடுத்த படைவீட்டை தலைநகராகக் கொண்டிருந்தனர். இவர்களின் ஆட்சி எல்லை பரப்பு வடபெண்ணை முதல் காவிரி வரை பரந்து விரிந்திருந்தது. இவர்கள் வீரசம்புவர் குளிகை என்ற நாணயத்தைப் வெளியிட்டு பயன்படுத்தினர். அவர்கள் கொடியில் காளை இடம்பெற்றிருந்தது. படைவீடு, விரிஞ்சிபுரம் என இரண்டு இடங்களில் அவர்களின் தலை நகரங்கள் செயல்பட்டன. படைவீடு நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட இயற்கை அரண்களால் ஆனது. விரிஞ்சிபுரம் கோட்டை பாலாற்றங்கரையில் அமைந்திருந்தது. படைவீட்டுக்கு செல்ல இரண்டு வாசல்கள் உண்டு. ஒன்று சந்தவாசல், இன்னொன்று வழியூர் வாசல் ஆகும். இரண்டும் அந்த மலைசூழ் பகுதிக்குள் செல்வதற்கான கணவாய் போன்றவை. இவற்றைக் கடந்துதான் படைவீடு கோட்டையை அடைய முடியும். படைவீட்டின் வீரர்களைக் கடந்து கோட்டையை அடைவது அவ்வளவு எளிதாக இருந்திருக்க முடியாது என்பதை தற்போதைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நன்றி
நன்றி