Skip to content
Home » Archives for உமா சம்பத் » Page 2

உமா சம்பத்

30 வருட காலம் சாவி, குமுதம் உள்பட பத்திரிகைத் துறையில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிதைகள் தொடங்கி கதைகள் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், தினமணிக் கதிர், தாய், பாக்யா போன்ற பல்சுவை இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவரது சித்தமெல்லாம் சிவமயம், 1857-சிப்பாய் புரட்சி, ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாகவி பாரதியார் புத்தகங்கள் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்து வாசகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியர். இவரால் சுருக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எல்லோராலும் பாராட்டப்பட்டு பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #13 – கிளிகள் சொன்ன கதைகள்

விக்கிரமாதித்தன் மனம் தளராமல் வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது, ‘வெற்றி ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட மன்னவனே! பொழுது போக உனக்கொரு கதை சொல்கிறேன் கேள்!’ என்று… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #13 – கிளிகள் சொன்ன கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #12 – மதன மோகினியும் மாறிய தலைகளும்…

விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்திலிருந்து விடுவித்து தோள்மீது போட்டுக்கொண்டு புறப்பட்டான். சிறிது நேரம் போனதுமே வேதாளம் அவனிடம் பேச்சுக் கொடுத்தது. ‘அறிவிலும், வீரத்திலும் இணையில்லாதவன் என்று… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #12 – மதன மோகினியும் மாறிய தலைகளும்…

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

சந்நியாசிக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டி, தனது கடமையில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை மரத்திலிருந்து மீட்டெடுத்துக்கொண்டு புறப்பட்டான். பாதி வழி கடந்ததுமே வழக்கம்போல… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #11 – மூன்று மாப்பிள்ளைகள் கதை!

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #10 – மூன்று சகோதரர்களின் கதை

மனத்தின் உறுதி சற்றும் தளராமல் வேதாளத்தை மீண்டும் முருங்கை மரத்திலிருந்து விடுவித்து, தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்டான் விக்கிரமாதித்தன். பாதி வழி கடந்ததும் வழக்கம் போல வேதாளம், ‘விடாமுயற்சியைக்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #10 – மூன்று சகோதரர்களின் கதை

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

‘முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் இன்னும் அருமை’ என்று எந்தப் படமாவது இதற்கு முன்னர் சொல்லப்பட்டிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. பொன்னியின் செல்வன் 2 படத்தைப்… Read More »பொன்னியின் செல்வன் 2

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #9 – பிரபாவதியும் மூன்று இளைஞர்களும்…

‘யமுனா நதி பாயும் செழுமையான பிரதேசங்களில் பிரம்மபுரம் என்கிற ஊர் மிகப் பிரசித்தி பெற்றது. அங்கே வேதவிற்பன்னரான விஷ்ணுசர்மா என்கிற பிராமணப் பண்டிதர் ஒருவர் வசித்து வந்தார்.… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #9 – பிரபாவதியும் மூன்று இளைஞர்களும்…

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

‘வருணா நதியும், அசி ஆறும் ஒன்று கூடும் கங்கையாற்றங்கரையில் அமைந்திருக்கிறது வாரணாசி நகரம். அந்நகரைப் பிரதாப சூரியன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #8 – வேதாளம் சொன்ன ‘ரத்னாவதியின் காதல்’ கதை

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #7 – விக்கிரமாதித்தனும் வேதாளமும்…

இந்திரன் அளித்த தேவ சிம்மாசனத்தை ஒரு சுபயோக சுப முகூர்த்தத்தில் தனது கொலு மண்டபத்திலே ஸ்தாபித்த விக்கிரமாதித்தன் அதன் மீது வீற்றிருந்து மிகுந்த சந்தோஷத்துடன் ராஜ்ஜியப் பரிபாலனம்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #7 – விக்கிரமாதித்தனும் வேதாளமும்…

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…

ராஜா பர்த்ருஹரிக்குப் பிறகு மன்னனான விக்கிரமாதித்தன் தனது அண்ணனை விடப் பன்மடங்கு நல்லாட்சி நடத்தினான். குடிமக்கள் அவனது ஆட்சியின் கீழ் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். ஆனாலும் விக்கிரமாதித்தனுக்குத்… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…

அபூர்வப் பழம்

விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

அந்தணனாகிய சோமசர்மன், ராஜா பர்த்ருஹரி ஆண்ட உத்கல தேசம் என்னும் ராஜ்ஜியத்தில்தான் வசித்து வந்தான். சகல சாஸ்திரங்களையும் கற்றிருந்த சோமசர்மன் வைதீகக் காரியங்களில் ஈடுபட்டும், உஞ்சவிருத்தி செய்து… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!